Sunday, December 27, 2015

Panner with home made sauce




ஸாஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் -  1/4 கப்
வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  - 2 கப்  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் - 2 சிறிய டின் 
கீறிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல் 
வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ( விருப்பம் இருந்தால்) - 4 இலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
வெண்ணை  - 1 ஸ்பூன்  


செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு தாளிக்கவும். இத்துடன் வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்
* சிறிது வதக்கிய பின் வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் (வரமிளகாயினை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊரவைத்து, பூண்டு சேர்த்து கண் மை போல அரைக்கவும்) விழுது சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய்த் தூள்,மல்லித்தூள்,கறி மசால் தூள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்
* இப்பொழுது வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்று கலக்கவும்.
* இதில் உப்புத்தூவி, தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.


பனீர் வித் சாஸ்:
* ஒரு கடாயில் வெண்ணெய் விட்டுக்காய்ந்ததும், பனீர் துண்டுகளை இருபுறமும் வேக வைக்கவும்.
* இத்துடன் மேலே குறிப்பிட்ட சாஸ் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு 





Meat ball with home made sauce



தேவையான பொருட்கள்
கிரௌண்ட் மீட் (கொத்துக்கறி) - 1 கப்
  1. பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய புதினா - 1 ஸ்பூன்  
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 ஸ்பூன்
முட்டை - 1 
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
* தேவையான பொருட்களில் உள்ள அனைத்தையும் நன்றாக பிசைந்து குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைக்கவும்.
* கொதிக்கும் நீரில் இந்த மீட் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, மெதுவாகப்போடவும்.
* சிறுதீயில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதை ஆவியிலும் வேக வைக்கலாம்.

ஸாஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் -  1/4 கப்
வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  - 2 கப்  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் - 2 சிறிய டின் 
கீறிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல் 
வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ( விருப்பம் இருந்தால்) - 4 இலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

வெண்ணை  - 1 ஸ்பூன்  

செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு தாளிக்கவும். இத்துடன் வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். 
* சிறிது வதக்கிய பின் வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் (வரமிளகாயினை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊரவைத்து, பூண்டு சேர்த்து கண் மை போல அரைக்கவும்) விழுது சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய்த் தூள்,மல்லித்தூள்,கறி மசால் தூள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். 
* இப்பொழுது வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்று கலக்கவும்.
* இதில் உப்புத்தூவி, தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு 



பேலியோ பால் திரட்டு




செய்முறை:

* ஒரு லிட்டர் பால் திரட்டு கிடைக்க சுமார் ஆறு லிட்டர் பால் வாங்கிக்கொள்ளவும். செய்யும் முறை சிம்பிள் என்றாலும் பாலுக்கு எருமையும் திரட்டுக்கு பொறுமையும் நேரமும் தேவை. குக்கர் அல்லது தடிமனான கடாய் போல நல்ல கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும், அதில் பாலை நிரப்பி நல்ல சாலிட் பதம் வரும் வரை தேவுடு காக்கவும். பால் பொங்கி வரவும் அடி பிடித்து கொள்ளவும் அபாயம் இருப்பதால் மிகுந்த கவனத்தோடு அவ்வப்போது கரண்டி வைத்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.


* இந்த இனிப்பை நல்ல முறையில் முடித்து துணைவியுடன் தின்ப நிகழ்வு ஆவதும் அல்லது துன்ப நிகழ்வு ஆவதும் உங்கள் கையில், எனவே கரண்டியை வைத்து பாத்திரத்தில் சுரண்டிக்கொண்டே இருக்கவும்.

* நேரத்தை சேமிக்க பாலை இரு பாத்திரங்களில் செய்தால் விரைவாக முடிக்கலாம். இதை செய்ய எனக்கு மூன்று மணி நேரம் பிடித்தது, சுவையும் பிடித்தது,அடி மட்டும் பிடிக்கவில்லை. பாலுக்கு பிறக்கும் போதே சுகர் இருப்பதால் மேலும் போடத்தேவையில்லை.

* இதில் சிக்ஸ் லிட்டர் பால் சிங்கிள் லிட்டர் ஆவதால் கலோரி அதிகம், பல-வாய் தின்னாமல் அளவாய் சாப்பிடவும்.பொறுமை இல்லாதவர்கள் கடையில் கண்டெண்ஸ்டு மில்க் வாங்கி குடிக்கலாமா என்று கமெண்டில் கமற வேண்டாம்.எல்லாம் வல்ல பேலியோ பெருமான்கள் பாலையும், பன்னீரையும் பேலியோ அலவ்ட் லிஸ்டில் சேர்த்த மாதிரி இதையும் எப்போதாவது சேர்த்துக்கொல்ல சீ…சேர்த்துக்கொள்ள அருள் புரிய வேண்டும்.

அனைவருக்கும் திரட்டுப்பால் கொடுக்க முடியாததால், அன்-பால் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




இந்த சுவையான, பாரம்பரிய பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore " அவர்களுக்கு நன்றி.

பேலியோ மிளகாய் பொடி



தேவையான பொருட்கள்:

1. பிளக்ஸ் சீட் 100 gram
2. சூரிய காந்தி (sun flower) சீட் 100 gram
3. சிவப்பு மிளகாய் 10 (தேவைகேற்ப உபயோகபடுத்தவும்)
4. பெருங்காயம்
5. நல்லெண்ணெய் 1 கரண்டி
6. தேங்காய் (பிடித்தால் சேர்க்கலாம் )
7. உப்பு

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பிளக்ஸ் சீட் மற்றும் சூரிய காந்தி சீட் சேர்த்து வறுக்கவும் . வெடிக்கும் பொழுது ஒரு தட்டில் கொட்டி விடவும். சிறிது எண்ணெய் சேர்த்து சிவப்பு மிளகாயை வறுக்கவும் . பெருங்காயம் சேர்த்து இறக்கவும் . மிக்சியில் உப்பு சேர்த்து அரைத்தால் பொடி ரெடி .

இந்த அருமையான, புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Niveditha Hari"அவர்களுக்கு நன்றி. 

எக் க்ரேவி :



தேவையான பொருட்கள் :

முட்டை 3 , சோம்பு , கிராம்பு ,
பச்சை மிளகாய் 1, காய்ந்த மிளகாய் -4,
இஞ்சி , பூண்டு சிறிதளவு ,
வெங்காயம் -1, தக்காளி -1, தேங்காய் 2 துண்டுகள் துருவியது

செய்முறை :
* முட்டைகளை வேக வைக்கவும் . வாணொலியில் நெய் ஊற்றி , மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கி , பின் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வாணொலியில் சிறிது நெய் விட்டு வதக்கி , நன்கு கொதித்த பின் வேக வைத்த முட்டைகளை பாதியாக வெட்டி , அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும் . சிறிது கொத்தமல்லி தூவி பரிமாறவும் .

இந்த சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Subha Rajesh"அவர்களுக்கு நன்றி.

காலிஃப்ளவர் சுக்கா:





தேவையான பொருட்கள்;-
காலிஃப்ளவர் – அரைக்கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – ஒரு கைப்பிடி

செய்முறை:
* காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி விடவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற விடவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.காலிஃப்ளவர் துண்டுகள் சேர்க்கவும்.
* நன்கு பிரட்டி விடவும். மேற்குறிப்பிட்ட மசாலா பொருட்கள் மிளகாய்த்தூள், மிளகு,சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்க்கவும். பிரட்டி விட்டி சிறிது தண்ணீர் தெளிக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். அடுப்பை குறைத்து வைக்கவும். உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.
* மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வர வேண்டும். நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டு விடவும். அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு: இதே போல் சிக்கன், பனீர் மற்றும் பேலியோ காய்கறிகளில் முயற்சிக்கலாம்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar" அவர்களுக்கு நன்றி. 

மீன் வடை






தேவையான பொருட்கள்:

மீன் – 400 கிராம்(சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்தது)
(மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன் தேவைக்கு உப்பு போட்டு பிரட்டிய மீனை அவித்து அல்லது சும்மா பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த முள் நீக்கிய மீன் – 2 கப் வரும்
(தண்ணீர் இல்லாமல் புட்டு மாதிரி இருக்க வேண்டும்)
முட்டை – 1
சின்ன வெங்காயம் நறுக்கியது – 1 கையளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – 2
நறுக்கிய மல்லி இலை – சிறிது.
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகதூள்- தலா அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
உப்பு – சிறிது
தவா ஃப்ரை செய்ய தேங்காய் எண்ணெய் – 3 - 4 டேபிள்ஸ்பூன் ( தவா ஃப்ரை செய்ய)

செய்முறை:
* ஒரு தட்டில் உதிர்த்த மீனோடு எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து நன்கு கையால் விரவி கொள்ளவும்.
* சிறிய உருண்டையாக பிரித்து லேசாக தட்டி வைக்கவும்.
தவாவில் எண்ணெய் சூடு செய்து தட்டிய வடையை போட்டு இருபுறமும் சிவற பொரித்து எடுக்கவும்.
மீன் வடை ரெடி.
குறிப்பு:
அவித்த மீனில் தண்ணீர் இல்லாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் தவாவில் பொரிக்கும் பொழுது எண்ணெய் பொங்கும். முட்டை சேர்த்து விரவினால் சிக்கென்று இருக்க வேண்டும்.


இந்த சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar" அவர்களுக்கு நன்றி. 

பேக்ட் காலிஃப்ளவர்:




தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் துண்டுகள் – 3 கப்
ஆலிவ் ஆயில் – 1 +1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
தட்டிய பூண்டு பற்கள் - 6
மிளகுத்தூள் –1 - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா அல்லது செடார் சீஸ் – 1/2 -1 கப் ( விருப்பமான அளவு)
விருப்பமான ஹெர்ப்ஸ் ( சீஸ் மேல் தூவ)
உப்பு – தேவைக்கு.


செய்முறை:
* நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு மூடி விடவும். அடுப்பை அணைக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
* இதனை ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சூடு செய்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கி காளிஃப்ளவர் சேர்த்து சிறிது பிரட்டி உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
* ஓவனை முற்சூடு செய்யவும். ஒரு ஓவன் சேஃப் பவுலில் ஆலிவ் எண்ணெயை தடவவும். அதில் வதக்கிய காளிஃப்ளவரை வைக்கவும். துருவிய சீஸ் மேலே தூவவும்.
விரும்பினால் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் மேலே தூவி மீடியம் வெப்பநிலையில் பேக் செய்து எடுக்கவும். மேலே தூவிய சீஸ் உருகி லேசாக சிவற ஆரம்பிக்கும் பொழுது ஓவனை அணைக்கவும்.


இந்த சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar " அவர்களுக்கு நன்றி. 

காரகறி காடை மசாலா/Beef red curry with quail eggs









தேவையான பொருட்கள்:
சிறிதாக நறுக்கிய மாமிசம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு paste
தக்காளி paste
வெங்காயம்
மிளகாய் பொடி
Pepper Pwdr
மஞ்சள் தூள்
கரம் மசாலா
உப்பு
நெய்
வேகவைத்த காடை முட்டை

செய்முறை:
* நெய்யில் வெங்காயம், இபூ paste இரண்டையும் வதக்கவும்
* மசாலா powders சேர்த்து வதக்கவும்
* தக்காளி paste, மாமிசம் சேர்த்து சுருள வேகவிடவும்.
* இறக்கும் முன் பச்சை மிளகாய் மற்றும் காடை முட்டைகளை பிரட்டி இறக்கவும்.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Nithi" அவர்களுக்கு நன்றி. 

காலிபிளவர் மலாய் கபாப்





தேவையான பொருட்கள்:

காலிபிளவர் 1 நடுத்தரளவு

பாகம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்

பாகம் 2
ப்ரெஷ் க்ரீம் 1/4 கப்
தயிர் 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு

செய்முறை:
*காலிபிளவரை நடுத்தர பூக்களாக எடுத்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடங்கள் போட்டு நீரை வடிக்கவும்.
*பாகம் 1 ல் கொடுத்துள்ள பொருட்களை காலிபிளவரை கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் பாகம் 2ல் கொடுத்துள்ள பொருட்களை அதனுடன் கலந்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*முற்சூடு செய்த அவனில் 210°C ல் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு

குறிப்பு: இதே போல் சிக்கன் மற்றும் பனீரில் செய்யலாம்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ  சமையல் குறிப்பினை வழங்கிய "Menaga Sathia" அவர்களுக்கு நன்றி.