Sunday, December 27, 2015

Meat ball with home made sauce



தேவையான பொருட்கள்
கிரௌண்ட் மீட் (கொத்துக்கறி) - 1 கப்
  1. பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய புதினா - 1 ஸ்பூன்  
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 ஸ்பூன்
முட்டை - 1 
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை
* தேவையான பொருட்களில் உள்ள அனைத்தையும் நன்றாக பிசைந்து குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைக்கவும்.
* கொதிக்கும் நீரில் இந்த மீட் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, மெதுவாகப்போடவும்.
* சிறுதீயில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். இதை ஆவியிலும் வேக வைக்கலாம்.

ஸாஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் -  1/4 கப்
வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  - 2 கப்  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் - 2 சிறிய டின் 
கீறிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல் 
வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ( விருப்பம் இருந்தால்) - 4 இலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

வெண்ணை  - 1 ஸ்பூன்  

செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு தாளிக்கவும். இத்துடன் வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும். 
* சிறிது வதக்கிய பின் வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் (வரமிளகாயினை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊரவைத்து, பூண்டு சேர்த்து கண் மை போல அரைக்கவும்) விழுது சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய்த் தூள்,மல்லித்தூள்,கறி மசால் தூள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். 
* இப்பொழுது வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்று கலக்கவும்.
* இதில் உப்புத்தூவி, தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு 



3 comments: