Tuesday, September 29, 2015

தக்காளி பேசில் காலிபிளவர் சூப்


தேவையான பொருட்கள்: 
தக்காளி - 4 பழுத்த பழம்
காலிபிளவர் - 1/4 பூ
வெங்காயம்  - 1/2
பேசில் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு  - 3 பல் தட்டியது
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: 
* ஒரு கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின் வெண்ணெய் சேர்க்கவும்.
* இத்துடன் தட்டிய பூண்டு பற்கள்,பச்சை மிளகாய் சேர்த்து சிறுது வதக்கவும்.
* இப்பொழுது நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து, உப்பு தூவி 3 நிமிடங்கள் வதக்கவும்.
* இதில் நறுக்கிய காலிபிளவர் சேர்த்து வதக்கி  2 கப் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும்.
* இந்த தக்காளி,காலிபிளவர் கலவை பாதி வெந்ததும் பேசில் இலைகளை சேர்க்கவும் (சிறிது தனியாக எடுத்துவைக்கவும்).
* நன்கு கொதிவந்ததும் தேங்காய் பால்  சேர்த்து சிறு தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
* இந்த சூப்பினை அடுப்பில் இருந்து எடுத்து, hand mixer ல் சூப் பதத்திற்கு அடிக்கவும்.
* சிறிது தனியாக எடுத்து வைத்த பேசில் இலைகளைத்துத்  தூவி விடவும்.
* சுவையான தக்காளி பேசில் காலிபிளவர் சூப் ரெடி.

இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Kavitha Sundar"அவர்களுக்கு நன்றி.

புகைப்படம்: மைதிலி தியாகு




ஸ்டப்டு வெண்டைக்காய்





தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -500கிராம்
வெங்காயம் - 1 பெரியது
 பூண்டு- 4 சிறிய பற்கள்
தேங்காய் - 4 துண்டு
எழுமிச்சை சாறு - பாதி பழம்
மிளகாய் பொடி - 1/2 tsp 
சீரக பொடி - 1/4 tsp 
மஞ்சள் பொடி - 1/2 tsp

செய்முறை:
* வெங்காயம்,பூண்டை அரைத்து கொள்ளவும்
*  தேங்காய் துருவி கொள்ளவும்.
*  ஒரு காடாயில் மிதமான சூட்டில் 1tsp தேங்காய் எண்ணெயில், துறுவிய தேங்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளை உடனடியாக சேர்த்து லேசாக வதக்கவும்
இதனுடன் அரைத்த வெங்காயம்,பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு கடைசியாக எழுமிச்சை சாறு பிழிந்து அடுப்பை அனைத்து விடவும்
தேங்காய் பொன்னிறம் ஆவதற்கு முன் அனைத்தையும் விரைவாக கலந்து இறக்கி விடவும்
வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து ஒரு பக்கம் மட்டும் கீறவும்
வதக்கிய கலவையை வெண்டைக்காய் உடையாமல் ஸ்டப் செய்யவும்
ஒரு காடாயில் ஸ்டப் செய்த வெண்டைக்காய்களை தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் வேகும் வரை வதக்கி இறக்கவும்.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Faulin Diana" அவர்களுக்கு நன்றி.

தமிழாக்கம்: Lakshmi Mani அவர்களுக்கு நன்றி. 

பாதாம் பிஸ்கட்


தேவையான பொருட்கள்:
பாதாம் மாவு - 1 கப்
வெண்ணெய் - 75 கிராம்
ப்ளக் சீட் எஃக் (2 ஸ்பூன் ப்ளக் சீட்ல் செய்ததுஅல்லது முட்டை - 1
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
* முட்டையை அடித்து கொள்ளவும் 
* இதனுடன் வெண்ணையை சேர்த்து நன்கு கலக்கவும்
பாதாம் மாவு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
பிசைந்த மாவை தேவையான அளவு தடிமனுக்கு தேய்த்து ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்கவும்
ஒரு மணி நேரம் கழித்து எடுத்து மாவை சிறு துண்டுகளாக வெட்டவும்
* அவனை 190 டிகிரி சென்டிகிரேடு முற்சூடு செய்யவும். பிஸ்கட்களை ட்ரேயில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்யவும்
* 15 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்
* சுவையான பேலியோ பாதாம் பிஸ்கட்கள் தயார்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan Pk" அவர்களுக்கு நன்றி.

தமிழாக்கம்: Lakshmi Mani அவர்களுக்கு நன்றி. 

Mussels கறி



தேவையான பொருட்கள்:
Mussels -250 gms
சிகப்பு, பச்சை குடை மிளகாய் - பாதி அளவு
வெங்காயம் நறுக்கியது - பாதி
தக்காளி - 1
பூண்டு - 7-8 பல்
கேரட் நறுக்கியது - பாதி
மிளகாய் பொடி, சீரக பொடி, உப்பு - தேவைக்கு ஏற்ப
நெய் - 3 tbsp 

செய்முறை:
* சூடான கடாயில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்
* வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பிறகு தக்காளி சேர்க்கவும்
* தக்காளி வெந்த பிறகு மசாலா பொடி, உப்பு மற்றும் Mussels சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்
* இதனுடன் நறுக்கிய கேரட் சேர்த்து மேலும் 5-7 நிமிடங்கள் வேக விடவும்
* சுவையான ட்ரை Mussels கறி தயார்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Sugu Bala" அவர்களுக்கு நன்றி.

தமிழாக்கம்: Lakshmi mani அவர்களுக்கு நன்றி.

கிளியர் முருங்க்கக்காய் சூப்





சிம்பிள் அன்ட் ஈசி சூப்.

தேவையான பொருட்கள்:
முருங்க்க்காய் – 2 இன்ச் சைஸ் 6 துண்டுகள்
பெப்பர் பவுடர் – கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
பூண்டு – 1 பல் பொடியாக அரிந்த்து.
வெங்காயம் ஒன்று – பொடியாக அரிந்த்து
பட்டர் – 1 தேக்கரண்டி

செய்முறை:
முருங்கக்காயை கழுவி அதில் மிளகு தூள், உப்பு தூள், பூண்டு, வெங்காயம்.
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும் .
நன்கு மசிய வெந்த்தும் அதை நன்கு கரண்டியால் மசித்து குச்சிகளை அகற்றி வடிக்கட்டவும்.
சத்தான சூப் குழந்தைகளுக்கு, டயட்டில் இருப்பவரக்ளுக்கு ,வயதானவர்களுகு மற்றும் நோயாளிகளுக்கு இந்த கிளியர் சூப்பை செய்து கொடுக்கலாம்.
இது ஏற்கனவே நான் செய்து சாப்பிட்ட சூப், இப்போது பேலியோ டயட்டுக்கும் உகந்த்தாக இருக்கிறது. இந்த சூப்புடன் எக் புல்ஸ் ஐ சேர்த்து காலை உணவாக அல்லது இரவு பேலியோ உணவாக சாப்பிடலாம்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.

ஸ்டஃப்ட் ஒபர்ஜீன்




தேவையான பொருட்கள் & செய்முறை: 

* பெரிய கத்திரிக்காய் , இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் பல்ப்(Pulp) ஸ்கூப் செய்து எடுத்து மேல் தோலில் உப்பு ப்ளஸ் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி பேகிங் ஓவன்ல் பத்து நிமிடம் பேக் செய்யவும்
* ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் , மற்றும் ஸ்கூப் செய்து எடுத்த பல்ப் , துருவிய பன்னீர் காரத்திர்க்கு தேவையான பச்சை மிளகாய் , கொஞ்சம் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவேண்டும் ..
* பேக் செய்த கத்திரிக்காவில் இந்த ஃபில்லிங் வைத்து மேலே துருவிய சீஸ் சேர்த்து மீண்டும் ஓவன்ல் ஒரு பத்து நிமிடம் பேக் மோட்ல் வைத்து பின் டாப் ப்ரவ்னின் மோட்ல் ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும் ..
* மைக்ரோ ஓவன்ல கன்வெக்ஷன் மோட்ல் இதை செய்யலாம் ...
இந்த புதுமையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி.

காலிப்ளவர் தக்காளி சாதம்



 தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் பூ - 200 கிராம்
தேங்காய் எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு
கருவேப்பிலை
பூண்டு
முந்திரி - 3 ( தேவைபட்டால்)
பழுத்த தக்காளி 2
சாம்பார் பொடி - ஒருதேக்கரண்டி
உப்பு தேவைக்கு

செய்முறை:
* காலிப்ளவர் பூவை வெண்ணீரை கொதிக்க விட்டு அதில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டவும்/
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கூட்டு பதம் ஆகும் வரை வேக விடவும்.
* கடைசியாக வடித்து வைத்த காலிப்ளவரை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் சிம்மில் வேக விட்டு இரக்கவும்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய Chef "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி. 

Bulls Eye and Paleo Veg Kanji/ புல்ஸ் ஐ /ஆஃப் பாயில்



செய்முறை:
பேலியோ டயட்டில் முட்டைக்கு தான் முதலிடம் அதை முதல் முதல் எல்லாருமே அவித்து அல்லது புல்ஸ் ஐ போட்டு சாப்பிடுவது எல்லாருக்குமே தெரியும்.

அதுவும் முறையாக பதமாக செய்தால் இன்னும் சுவை கூடும், சப்பிடும் போது மஞ்சள் கரு உடைந்து வேஸ்ட் ஆகாது.முதலில் புல்ஸ் ஐ யை பார்ப்போம்.

தேங்காய் எண்ணை அல்லது நெய் விட்டு தவ்வா சூடு வந்ததும்
முட்டையை தேவைக்கு கலங்காமல் முழுசாக ஒன்றாகவோ, இரண்டாகவோ, மூன்றாகவோ அல்லது நான்காகவோ ஊற்றி விட்டு தீயின் தனலை சற்று குறைவாக வைத்து 2 நிமிடம் வேகவிடுங்கள்.
அடுத்து லேசாக தட்டிய மிளகில் உப்பு கலந்து தூவி விட்டு ஒரு முடி போட்டு 1 நிமிடம் வைத்து அடுப்பை ஆஃப் செய்யவும்.
இப்ப எடுத்தால் மஞ்சள் கரு உடையாமல் வெந்தும் வேகமாலும் அரை பதமாக வெந்து சாப்பிட இலகுவாக இருக்கும்.

குறிப்பு: இதில் இருக்கும் கஞ்சி வெள்ளை வாயு கஞ்சி அரிசியில் செய்வதை பேலியோ காய்களில் செய்துள்ளேன்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய Chef"ஜலீலாகமால்"அவர்களுக்கு நன்றி.

பாயில்ட் எக் சாலட்



தேவையான பொருட்கள்:
கீரை - ஒரு கைப்பிடி
லெட்டியுஸ் இலை - ஒரு கைப்பிடி
கேரட், குகும்பர்,தக்காளி - இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
முட்டை கோஸ் - ஒரு மேசைகரண்டி

ட்ரெஸ்ஸிங்:
சால்ட்
வொயிட் பெப்பர் -அரைதேக்கதண்டி
ஒரிகானோ - கால் தேக்கரண்டி
ரோஸ் மேரி - கால் தேக்கரண்டி
லெமன் ஜுஸ் - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு மேசை கரண்டி

செய்முறை:
* லெட்டியுஸை பொடியாக நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
* ஒரு பவுளில் ட்ரெஸ்சிங்ன்செய்ய வேண்டிய பொருட்களை நன்கு மிக்ஸ் செய்து அனைத்து காய் கிரை    வகைகளை சேர்த்து கலக்கி பிரிட்ஜில் குளிர வைத்து சாப்பிடவும்.
* மேலே சிறிது நட்ஸ் வகைகளை கட் செய்து தூவி கொள்ளவும்.
அவித்த முட்டையுடன் பேலியோ மீல் ரெடி.

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி. 




Egg Custards (No Sweets)


தேவையான பொருட்கள்: 
வெள்ளை காளான் - 1 கப் 
முட்டை - 4 
பேகன்  - 5  (option)
தேங்காய் பால் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
மிளகுத்தூள்  - தேவையான அளவு 
Chives chopped - 2 tbsp

செய்முறை: 
* முட்டையுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
* ஒரு வாயகன்ற பாத்திரத்தில் (Pan) பேகனை சிறிது நேரம் வேக விட்டு தனியாக வைக்கவும்.
* அதே பாத்திரத்தில் அதே பேகன் எண்ணையில் காளான்களை வதக்கி எடுக்கவும்.
* அந்த அடித்த வைத்த முட்டையுடன் வதக்கிய காளான் மற்றும் பேகனை சேர்த்து கலக்கவும்.
* இக்கலவையை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, Pre heat செய்யப்பட்ட 350 டிகிரி F ல் 30-40 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். 

Recipe from a paleo book. 

மைதிலி தியாகு 

Broccoli Casserole




தேவையான பொருட்கள்: 
 Broccoli - 2 cups
வெள்ளை காளான் - 1 கப்
வெள்ளை வெங்காயம் - 1 (நீள் வாக்கில் நறுக்கவும்)
பூண்டு - 2 பல் 
முட்டை - 4 
பேகன்  - 5  (option)
Dried Thyme - 1 teaspoon
தேங்காய் பால் - 1 கப்
வெண்ணெய்  - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் -  1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
மிளகுத்தூள்  - தேவையான அளவு 


செய்முறை: 
* முட்டையுடன் தேங்காய் பால், உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்துக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் Broccoli யை வேகவைத்து எடுத்து விரும்பும் அளவில் நறுக்கி வைக்கவும்.
* ஒரு வாயகன்ற பாத்திரத்தில் (Pan) தேங்காய் எண்ணெய் காய வைத்து நறுக்கிய வெங்காயம்,               பூண்டினை வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் காளானை சேர்த்து வதக்கவும்.
* இதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். இதில் வகவைத்து நறுக்கிய Broccoli சேர்க்கவும். 
* இகலவையை பேக்கிங் பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிடவும். இத்துடன் அந்த அடித்த வைத்த முட்டைக்    கலவையினைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்பொழுது  ரொம்ப கவனமாக எல்லா இடங்களிலும் சீராகப் பரவும் படி செய்யவும்.
* இதில் துருவிய சீஸினை மேலே தூவிவிடவும்.
* இக்கலவையை பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, Pre heat செய்யப்பட்ட 350 டிகிரி F ல் 30-40      நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். 

குறிப்பு: விரும்பினால் சிறிது பால் சேர்க்கலாம்.

Recipe & Photo: மைதிலி தியாகு 

mayonnaise/மயோனைஸ்


தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய்/தேங்காய் எண்ணெய்  - 1 கப்
முட்டை - 2
எலுமிச்சை சாறு - கொஞ்சம்
வினிகர் - கொஞ்சம்

செய்முறை:
 * ஒரு பாத்திரத்தில் 2 முட்டை உடைத்து ஊற்றி, கொஞ்சம் எழுமிச்சை & வினிகர்  ஊற்றி hand blender ல் நல்லா க்ரீம் பதம் வரும் வரை அடிக்க வேண்டும்.Mayonnaise சரியான பதம் வரும் வரை எண்ணெய்  சேர்க்க வேண்டும். 2 கப் எண்ணெய்க்கு மேலும் தேவைப்படலாம்.
*  இப்போ Paleo mayo ரெடி.

குறிப்பு: 1. தேவைப்படுவோர் உப்பு,மிளகுத் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
             2. விரும்பினால் பூண்டு பற்கள் நன்கு தட்டிச் சேர்க்கலாம். 

ரெசிபி & புகைப்படம்: மைதிலி தியாகு 
          


Egg Salad (Mayonnaise)



தேவையான பொருட்கள்: 
வீட்டில் தயாரித்த Mayonnaise - 2 tbsp
வேக வைத்த முட்டை - 2
செலரி - 1 தண்டு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு

செய்முறை:
* வேகவைத்த முட்டையினை தோலுறித்து சிறிது சிறிதாக நறுக்கி (மஞ்சள் கருவும் சேர்த்து) ஒரு கிண்ணத்தில் போடவும்.
* இதில் செலரித்  தண்டினை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.
* இத்துடன் Mayonnaise சேர்த்து உப்பு,மிளகு தூள் தூவி பரிமாறவும்.

ரெசிபி & புகைப்படம்: மைதிலி தியாகு 

Monday, September 7, 2015

கோவா


தேவையான பொருட்கள்: 
முழு கொழுப்பு பால் - 1.25 liters அல்லது 5 கப் (1கப் - 250 ml) 

செய்முறை: 
* ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். முதலில் மிதமான சூட்டில் பால் கொதித்த பிறகு தீயை குறைத்து வைத்து பாலை வற்ற விடவும். 
* பால் வற்றும் பொழுது அடி பிடிக்காமல் கிளறி விடவும். பாத்திரத்தின் ஓரத்தில் படிந்துள்ள பாலாடையையும் பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். 
* மிதமான சூட்டில் பால் நன்கு வற்றி கெட்டியாகும். தீயை குறைத்து வைத்து தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும். 
* பால் நன்கு திரண்டு சுண்டும் வரை விடாது கிளறவும். பால் தீய்ந்து விட கூடாது. 
* பாலில் உள்ள நீர்பசை குறைந்து திரண்டு வரும்பொழுது அடுப்பை அனைத்து விடவும். 
* மிதமான சூட்டில் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஆகும். ஆறியபின் குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி.

இந்த பதிவினை தமிழாக்கம் செய்து வழங்கிய "Shan Mani" அவர்களுக்கும் நன்றி.

Stuffed குடை மிளகாய்



தேவையான பொருட்கள்:
வெங்காயம் குடை மிளகாய் 
காரட் 
காலிபிளவர் 
பன்னீர் 
பூண்டு 
மிளகு தூள் 
பூண்டு பொடி 
சில்லி ப்ளேஸ் 
ஆரிகானோ(Oregano) 
சீஸ் வெண்ணெய் 

செய்முறை: 
* வெங்காயம், குடை மிளகாய், காரட், காலிபிளவர் மற்றும் பூண்டை வெண்ணெயில் வதக்கி, உப்பு, மிளகு தூள், பூண்டு பொடி, சில்லி ப்ளேஸ், ஆரிகானோ(Oregano) மற்றும் பன்னீர் க்யூப் சேர்த்து நன்கு கலந்து விடவும். 
* வதங்கிய காய்களை குடை மிளகாயில் வைத்து அதன் மேல் சீஸ், மிளகு தூள் போடவும். குடை மிளகாயில் வெண்ணை தடவி பேக்(bake) செய்யவும்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி.

இந்த பதிவினை தமிழாக்கம் செய்து வழங்கிய "Shan Mani" அவர்களுக்கும் நன்றி.

எக் ரோல்




செய்முறை:
*  ஒரு சிறிய கிண்ணத்தில் 2 முட்டையை நன்றாக கலக்க வேண்டும். 
* தோசைக்கல் மிதமான சூட்டில் இருக்கும் போது, நெய் தடவி முட்டையை பரவலாக ஊற்ற வேண்டும். மிதமான தீயில் ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து சுருட்ட வேண்டும். 
* மாற்று வழிகள் 
1. உப்பு, மிளகுத்தூள் சேர்க்கலாம். 
2. முட்டை கலவையில் உங்களுக்கு விருப்பாமான காய்களை குறைந்த அளவில் கலக்கலாம் 
3. ரோல் செய்யும் முன் காய்கறிக் கலவையோ சிக்கனையோ டிரையாக செய்து வைத்து சுருட்டலாம். 4. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இனிப்பு கலந்து தரலாம்.

இந்த சுவையான,புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Sumathi Balasundaram" அவர்களுக்கு நன்றி.

அவகோடா தேங்காய் சட்னி





Avocado Dip for Grill Item

தேவையான பொருட்கள்:
அவகோடா பழம் - 1
தேங்காய் துருவியது – கால் கப்
பச்சமிளகாய் -1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்துமல்லி கருவேப்பிலை – அரை கப்
லெமன் சாறு – ஒரு மேசைகரண்டி
பாதாம் - 15

செய்முறை:
* கொத்துமல்லி கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாதாம் பருப்பை வெண்ணீரில் ஊறவைத்து தொலெடுத்து கொள்ளவும்.
அவகோடா பழத்தை கொட்டை மற்றும் தோலை எடுத்து விட்டுசேர்க்கவும்.
* மிக்சியில் பாதாம், அவகோடா, இஞ்சி, கொத்துமல்லி கருவேப்பிலை, உப்பு , பச்சமிளகாய், தேஙகாய் சேர்த்து அரைக்கவும் கடைசியாக லெமன் சாறு கலந்து ஒரு திருப்பு திருப்பி எடுக்கவும்.

கவனிக்க:
இது பேலியோ கட்லெட், வடை,பேன்கேக், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்ற கிரில் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.

காரம் அதிகம் விரும்புவோர் பச்சமிளகாய் இரண்டாக போட்டு கொள்ளலாம். நான் காரம் அதிகம் எடுக்க மாட்டேன்.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.

கிரில்ட் கிங் ஃபிஷ் தந்தூரி





தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் – 500 கிராம்
ஆச்சி தனி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
ஷான் தந்தூரி மசாலா – 1 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு – இரண்டு மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைகரண்டி
தண்ணீர் சிறிது
ஆலிவ் ஆயில் – 4 தேக்கரண்டி


செய்முறை:
* மீனை நன்கு அலசி சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்
லெமன் சாறு பிழிந்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாக்களை பேஸ்டாக்கி மினில் இருபுறமும் தடவி, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* எலக்ட்ரிக் கிரில்லில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு இடை இடையே ஆலிவ் ஆயில் ஊற்றி நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.


குறிப்புகள் :  
இது சாப்பிடுபவர்கள் அளவை பொருத்து காலிப்ளவர் தேங்காய் சாதம், அவகோடா சாலட், மீன் குழம்புடன் சாப்பிட்டதால் எனக்கு கிரில் குறைவாகவே தேவைப்பட்டது இரண்டு பெரிய மீன் துண்டுகள்.
எலக்ரிக் கிரில் என்பதால் இதில் தயிர் சேர்க்கவில்லை அதற்கு பதில் எலுமிச்சை சாறு சேர்த்துள்ளேன்.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.

பன்னீர் ஆம்லெட்


தேவையான பொருட்கள்: 
தேங்காய் எண்ணெய் - 1 tbsp 
நறுக்கிய சிகப்பு குடை மிளகாய் - பாதி 
நறுக்கிய பிராக்களி(Broccoli) - 3/4 கப் 
நறுக்கிய காளான் - 3/4 கப் ஸ்பினாச் - 1 கப் 
பன்னீர் - 350 gms பால் - 1/4 கப் 
நறுக்கிய பூண்டு - 1 
உப்பு - 1/2 tsp 
மஞ்சள் பொடி - 1/4 tsp 
மிளகு பொடி - 1/8 tsp
 துறுவிய சீஸ் - 1/2 கப்
செய்முறை: 
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாகவும் மிதமான தீயில் குடை மிளகாய் மற்றும் பிராக்களியை 3 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் காளான் சேர்க்கவும்.
* காய்கள் வெந்த பிறகு ஸ்பினாச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அனைத்து ஆற விடவும். மிக்சியில் பன்னீர், பால், பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி போட்டு நன்கு கலந்து கொள்ளவும். 
* ஒரு தவாவில் எண்ணை விட்டு காய்ந்தவுடன் சிறிதளவு மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும். ஒரு பாதியில் மட்டும் 2 tbsp அளவு சீஸ் மற்றும் சிறிது காய்கறி கலவையை போட்டு மீதி பாதி பகுதியை மடித்து சீஸ் உருகும் வரை வேக விடவும். 
* இதே போல் மீதமுள்ள மாவை, காய்கறி மற்றும் சீஸ் வைத்து ஆம்லெட் ஆக செய்யவும்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி.

இந்த பதிவினை தமிழாக்கம் செய்து வழங்கிய "Shan Mani" அவர்களுக்கும் நன்றி. 

காலிப்ளவர் தேங்காய் சாதம்





தேவையான பொருட்கள்:
துருவிய காலிஃப்ளவர் – கால் கிலோ
தேங்காய் – அரை கப் (100 கிராம்)

தாளிக்க:
நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
பூண்டு – இரண்டு பல்
பச்சமிளகாய் – ஒன்று
காஞ்சமிளகாய் – ஒன்று
கொத்துமல்லி தழை – சிறிது

செய்முறை:
* காலிப்ளவரை துருவி வெண்ணீரில் உப்பு போட்டு இரண்டு கொதி கொதிக்க விட்டு தண்ணீரை வடிக்கவும்.
* ஒரு வாயகன்ற வானலியில் தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு கை தண்ணீ தெளித்து வதக்கி முடிபோட்டு 3 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.
* கடைசியாக சிறிது கொத்துமல்லி தழை மற்றும் ப்ரஷ் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக்கொள்ள பேலியோ மீன் குழம்பு, தந்தூரி மீன் கிரில், அவகோடா சட்னி..
மதிய உணவிற்கு மீல் ரெடி



இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.



கேரட் சாலட்



தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 150 கிராம் ( ஒரு கப்)
எலுமிச்சை சாறு - ஒரு மேசை கரண்டி
கருப்பு அல்லது வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சிறிது
ஒரிகானோ - இரண்டி சிட்டிக்கை
கொத்துமல்லி தழை - சிறிது பொடியாக நறுக்கியது
chives - இரண்டு சிட்டிக்கை.

செய்முறை:
* ஒரு பவுளில் துருவிய கேரட்டை சேர்த்து அதில் உப்பு மிளகு தூள் ஒரிகானோ, கொத்துமல்லி தழை எல்லாம் சேர்த்து கலந்து லெமன் சாறு chives தூவி சாப்பிடவும்.
* chives என்பது இங்கு அரபு நாடுகளில் சாலடின் மேலே தூவ பயன் படுத்து வார்கள். அது கிடைக்காதவர்கள் விட்டு விடலாம். ஒரிகனோ, கொத்துமல்லி தழை போது மானது.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.

கருவேப்பிலை சிக்கன்




தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் எலும்புடன் – 300 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தக்காளி – ஒன்று சிறியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நெய் – வறுக்க( 2 தேக்கரண்டி)
கருவேப்பிலை – சிறிது


செய்முறை:
* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் தக்காளியை பிழிந்து வெட்டி போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து நன்கு கலக்கு அரை கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
வெந்ததும் கருவேப்பிலையை இரண்டாக கிள்ளி போட்டோ அல்லது அப்படியே வோ தூவி கிளறி வையுங்கள்.
* இரும்பு வானலியில் நெய் விட்டு காயவைத்து வெந்த சிக்கனை சேர்த்து வறுத்து எடுக்கவும்
வறுக்கும் போது ரொம்ப டிரைஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்
* இது சிம்பிள் மெத்தட் சும்மா சாப்பிட அருமையாக இருக்கும் எத்தனை பீஸ் சாப்பிட்டாலும் திடக்காது.
* தேவைபடுபவர்கள் அதாவது சிக்கன் சூடு ஒத்து கொள்ளாது என்று நினைப்பவர்கள் எலுமிச்சை சாறு கடைசியாக பிழிந்து சாப்பிடாலும் நல்ல இருக்கும்.


இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.


Sunday, September 6, 2015

பாதாம் குழி பணியாரம்


தேவையான பொருட்கள்:-
பாதாம் பவுடர் :- 1 கப்
தயிர் - 1/4 கப்
பால் - 1/4 கப்
சால்ட் - தேவையான அளவு
வெங்காயம் - 1 no பெரியது (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 1 no
கடுகு - 1/2 ஸ்பூன்
ஆலீவ் எண்ணெய் - 1 மேஜை கரண்டி
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை - தேவையான அளவு பொடியாக நறுக்கி கொள்ளவும்


செய்முறை:-
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை கலந்து தாளிக்கவும். ஒரு பாத்திரத்தில், பாதாம் பவுடர், தயிர், பால், பணியாற பதத்திற்கு கலந்து கொள்ளவும். தாளித்த பொருட்களை ஆரிய பின் கலந்து வைத்திருக்கும் மாவுடன் கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து பனியார கல்லில் இட்டு எடுத்தால், சுவையான பாதாம் குழி பணியாரம் தயார்!!

பிடித்த சட்னி உடன் சாப்பிடலாம்!!

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK"அவர்களுக்கு நன்றி. 

நார்த்தங்காய் ஊறுகாய்



3கி நார்த்தங்காய சிறுதுண்டுகளாக வெட்டியபின் அரைப் படி, கல்உப்புபோட்டு கலந்து 20நாளுக்கு ஊறவைக்கவும் தினமும் இருமுறை கிண்டவேண்டும் விரல் படக்கூடாது . 20நாளுக்குபின் தேங்காய் எண்ணெய்  50mlஊத்திக் கிண்டனும் பின்பு நல்லெண்ணெய் 100ml ஊத்திக்கிண்டனும் பின்பு வெந்தயம்50gm வறுத்து போட்டுக்கிண்டனும் பின்பு வறமிளகாய், கருவேப்பிலை, பெருக்காயத்தூள் 1டீஸ்பூன் கடைசியா சேக்கனும்.தேவைக்கேற்ப எடுத்து அரைத்துக் கொண்டபின்பு போட்டுக் கலந்தால் நார்த்தங்காய் ஊறுகாய் ரெடி...

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Murugan Theethan" அவர்களுக்கு நன்றி.