தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -500கிராம்
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு- 4 சிறிய பற்கள்
தேங்காய் - 4 துண்டு
எழுமிச்சை சாறு - பாதி பழம்
மிளகாய் பொடி - 1/2 tsp
சீரக பொடி - 1/4 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
செய்முறை:
* வெங்காயம்,பூண்டை அரைத்து கொள்ளவும்.
* தேங்காய் துருவி கொள்ளவும்.
* ஒரு காடாயில் மிதமான சூட்டில் 1tsp தேங்காய் எண்ணெயில், துறுவிய தேங்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளை உடனடியாக சேர்த்து லேசாக வதக்கவும்.
* இதனுடன் அரைத்த வெங்காயம்,பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு கடைசியாக எழுமிச்சை சாறு பிழிந்து அடுப்பை அனைத்து விடவும்.
* தேங்காய் பொன்னிறம் ஆவதற்கு முன் அனைத்தையும் விரைவாக கலந்து இறக்கி விடவும்.
* வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து ஒரு பக்கம் மட்டும் கீறவும்.
* வதக்கிய கலவையை வெண்டைக்காய் உடையாமல் ஸ்டப் செய்யவும்.
* ஒரு காடாயில் ஸ்டப் செய்த வெண்டைக்காய்களை தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் வேகும் வரை வதக்கி இறக்கவும்.
தமிழாக்கம்: Lakshmi Mani அவர்களுக்கு நன்றி.
Nice.
ReplyDeleteNice.
ReplyDelete