Thursday, June 11, 2015

பாகற்காய் மசாலா கறி




தேவையான பொருட்கள்
:
பெரிய சைஸ் பாகற்காய் – 1
 வெங்காயம் – 1
 தக்காளி – 2
 மஞ்சள் – சிட்டிகை
வத்தக்குழம்பு பொடி – 1 ஸ்பூன்
 உப்பு (தேவைக்கேற்ப)

செய்முறை :
* சமைப்பதற்கு 3 மணி நேரம்முன் பாகற்காயை நன்றாக அலம்பி, மிக சிறு துண்டுகளாக நறுக்கவும். விதைகளை மட்டும் நீக்கி, காயை முழுவதுமாக உபயோகப்படுத்த வேண்டும். இதனுடன், சிறிது தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து பிசிறி வைக்கவும். தேவையானால் இதை முந்தைய நாள் செய்து, ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் சமைக்கலாம்.
* இப்போது பாகற்காயில் கசப்பு குறைந்திருக்கும். நன்றாக ஊறிய பாகற்காயை, தண்ணீர் விட்டு அலம்பவும். 
* வாணலியில் வெர்ஜின் தேங்காய் எண்ணை விட்டு, கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். சின்ன சின்ன துண்டாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கிக்கொள்ளவும். அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். 
* இதனுடன் வத்தக்குழம்புப்பொடி (அல்லது சாம்பார் / ரசம் பொடி) சேர்க்கவும். அடுத்து பாகற்காய் துண்டுகளயும் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான பாகற்காய் மசாலா ரெடி. இதை ஒரு கப் தயிருடன் மதிய உணவாக சாப்பிடலாம்.

இந்த பாரம்பரிய, சுவைமிகுந்த, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "NagarajanSudha" அவர்களுக்கு நன்றி :)





வஞ்சிரமீன் கட்லெட்



தேவையான பொருட்கள் :-
வஞ்சிரமீன் 4 அல்லது 5 துண்டுகள் 
இஞ்சி பூண்டு விழுது
வெங்காயம் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
தேங்காய் எண்ணெய் () நல்லெண்ணெய்
மிளகாய் தூள் 
தனியாத்தூள்
ராக் சால்ட் சிறிது
மஞ்சள் தூள் சிறிது

செய்முறை


* முதலில் வஞ்சிரமீனை குக்கரிலோ அல்லது இட்லி பாத்திரத்திலோ போட்டு வேக வைத்துக்கொள்ளவும். அது வெந்தபின், அதனை சிறு சிறு துண்டுகளாக உதிர்த்துக்கொள்ளவும். * அதனுடன் பொடியாக அறிந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாயை சேர்க்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். (இஞ்சி பூண்டு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் விடக்கூடாது. தண்ணீர் அதிகமானால் கெட்டியாக வராது) அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்
* பின் இந்தக்கலவையை நன்கு பிசைந்துக்கொள்ளவும். தேவைப்படுவோர்கள் இதில் பட்டர் அல்லது நெய் விட்டு பிசைந்துக்கொள்ளவும்
* பின் தவாவை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் சிறிது ஊற்றவும். பின் பிசைந்த இந்த துண்டுகளை கட்லெட் ஷேப்பில் கையால் தட்டி  தவாவில் இடவும்
* அதனை சுற்றி லேசாக நல்லெண்ணெய்யை ஊற்றவும். நன்றாக திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து தட்டில் பரிமாறவும்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :)



முயல்கறி பொறியல்



தேவையான பொருட்கள் :-
 முயல்கறி 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள் தூள் சிறிது
தேங்காய் எண்ணெய் () நல்லெண்ணெய்
மிளகாய் தூள் 
தனியாத்தூள்
ராக் சால்ட் சிறிது

செய்முறை
* முதலில் முயல்கறியை வெகு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஏனெனில் இது பெரியதாகும் தன்மை கொண்டது
* ஒரு குக்கரில் முயல்கறியை உப்பு மஞ்சள்தூள் இட்டு 10 விசில் வரை வேக வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதனை எடுத்து அதனுடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து பிசையவும்
* அதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு பிசைந்துக்கொள்ளவும். இந்தக்கலவையை அப்படியே ஒரு ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் தவாவில் இதனை இட்டு லேசாக எண்ணெய் ஊற்றி திருப்பி திருப்பி போட்டு வேக வைத்து சூடாக சாப்பிடுங்கள்.. கூடவே வெங்காயத்தை பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.. அமிர்தமாக இருக்கும்.

இந்த புதுமையான, சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :)

Monday, June 8, 2015

புதுக்கோட்டை ஸ்பெஷல் முட்டை மாஸ்




தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை 
தேங்காய் எண்ணெய் 
வெங்காயம் 
தக்காளி 
கறிவேப்பிலை 
கரம் மசாலா 
தனியா போடி (கொத்தமல்லி தூள்)


செய்முறை:
* முட்டை வேகவைத்து கொள்ளவும்
* தேங்காய் எண்ணெய்  அரைவெங்காயம்,தக்காளி,கறிவேப்பிலை வதக்கி, கரம் மசாலா,தனியா பொடி போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கிரேவி போலாக்கி, முட்டையை போடவேண்டியது தான். ஐந்தே நிமிடத்தில் ஆகிவிடும்
* கிரேவி நிறையவேண்டுமென்றால், வெங்காயம்,தக்காளி இஞ்சிப்பூண்டு விழுதோடு வதக்கி அரைத்துக்கொள்ளலாம். முட்டை கிரேவியோடு அரைக்காய்ச்சலாய் ஃப்ரெஷ் தக்காளியின் புளிப்பு சேர்கையில் என்னவோ அப்படியொரு சுவை.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Rasanai Sriram"அவர்களுக்கு நன்றி :)

பூசணிக்காய் மோர்க்கூட்டு.



தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் 
கடுகு 
சீரகம் 
பெருங்காயம் 
தயிர் 

அரைக்க:
தேங்காய்  துருவல் 
ஜீரகம் 
பச்சை மிளகாய் 

செய்முறை:
*
பூசணிக்காய் தேவையான அளவு தோல் நீக்கி, சிறுசிறு க்யூப்களாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பிலோ, மைக்ரோவேவிலோ சமபங்கு தண்ணீர் விட்டு, கொஞ்சம் உப்பும் போட்டு 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
*
பூசணி வேகும் நேரத்தில், மிக்சியில் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் ஜீரகம், பச்சைமிளகாய் 3-4 (காரம் தேவைக்கு) சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
*
அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் சூடாக்கி கறிவேப்பிலை,சீரகம்,கடுகு,பெருங்காயம் தாளிக்கவும். அதில் இந்த அரைத்த தேங்காய் கிரேவியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
*
இந்த நேரத்துக்குள் வேகவைத்த பூசணி வெந்திருக்கும். முக்கால் வெந்தால் போதுமானது. அதையெடுத்து அடுப்பில் உள்ள தேங்காய் கிரேவியில் போட்டு சிம்மில் 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*
பூசணி 100% வெந்து தேங்காய்,பச்சைமிளமாய் கிரேவி டேஸ்ட்டுடன் சேர்த்து சரியாக வெந்திருந்தால் அடுப்பை அணைத்து விடவும்.
*
இத்தோடு நிறுத்திவிட்டு பூசணிக்காய் கூட்டாய் சாப்பிடலாம். இல்லை தயிரை ஒரு கப் சேர்த்து, கலக்கிபூசணிக்காய் மோர்க்கூட்டாய்சாப்பிடலாம். மோர்க்கூட்டு இன்னும் செம டேஸ்ட்.
Note:
தயிர் அடுப்பை அணைத்த பிறகே விடவேண்டும். இல்லையெனில் திரிதிரியாய் வந்துவிடும்.

அதிகபட்சம் 15 நிமிடங்களில் ரெடி. செம டேஸ்ட். ஓரளவு நல்ல ஃபில்லிங்காகவும் இருக்கும். ட்ரை செய்து பாருங்கள்.

இந்த பாரம்பரிய சமையல் குறிப்பினை வழங்கிய "Rasanai Sriram" அவர்களுக்கு நன்றி :)

Tuesday, June 2, 2015

பச்சை சுண்டக்காய் சட்னி


தேவையான பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் 
தேங்காய் எண்ணெய் 
மிளகாய் வத்தல் 
வெங்காயம் 
தக்காளி 
இஞ்சி 
பூண்டு 
தேங்காய் 
எலுமிச்சை சாறு  
கரிவேப்பிலை 
உப்பு 

செய்முறை:

* கடாயில் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணைய் விட்டு மிளவத்தல், பச்சை சுண்டக்காய்,வொங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு ஒவ்வொன்றயும் தனி தனியாக வதக்கி பச்சை தேங்காய்,எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து  அரைத்து, பச்சை கருவேப்பிலையை கைகளால் கசக்கி சேர்க்கவும்
* விருப்பபட்டால் தாளித்து கொள்ளலாம். இதன் சுவை கசக்காது.

குறிப்பு: முட்டை பணியாரம்,பேலியோ  ரொட்டி, பேலியோ தயிர்சாதம், பேலியோ லெமன் சாதம், பேலியோ தக்காளி சாதம் போன்றவைகளுடன் இந்த சட்னியை சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

இந்த புதுமையான,உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Viji Mali" அவர்களுக்கு நன்றி :)


Monday, June 1, 2015

வாத்துக்கறி டிரை ஃப்ரை



தேவையான பொருட்கள் :-

1. வாத்துக்கறி 
2. இஞ்சி பூண்டு விழுது
3. நாட்டுக்கோழி முட்டை ஒன்று
4. தாளிக்க தேங்காய் எண்ணெய் () நல்லெண்ணெய்
5. மஞ்சள் தூள் சிறிது
6. மிளகாய் தூள் 
7. தனியாத்தூள்
8. ராக் சால்ட் சிறிது

செய்முறை

வாத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம்செய்துக் கொள்ளவும். வாத்துக்கறியை வெட்டும் முன் நன்றாக சூடு காட்டி சுடவும். பின்னர் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடையிலேயே இதை செய்து கொடுப்பார்கள். ஏனெனில் அதன் சதையில் சிறு சிறு முடிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அதனால்தான் சுடவேண்டும். நான் சுட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டேன்.

வாத்துக்கறியில் கொஞ்சம் மஞ்சள் தூள், ராக் சால்ட் இட்டு, குக்கரில் 7 அல்லது 8 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும். கறி நன்கு வெந்தபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.

பின் அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு சேர்க்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும். அதனுடன் ஒரு நாட்டு முட்டையை அடித்து ஊற்றி நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

ஒரு பத்து நிமிடம் இந்தக்கலவையை ஊற வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ,நல்லெண்ணய் லேசாக விட்டு வாத்துக்கறி கலவையை போட்டு லேசாக வேக விடவும். திருப்பி திருப்பி போட்டு நன்கு வெந்ததும் டிரையாக எடுக்கவும். வெங்காயம் கொத்தமல்லி தழை தூவி தட்டில் வையுங்கள்.. 

நல்ல மொறு மொறு சுவையுடன் உள்ளே கறி மெத்தென்று நல்ல ஸ்பைஸியாக இருக்கும்..

இந்த மொறுமொறுக்கும் அருமையான வாத்துக்கறி சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :). 

லேம்ப் கபாப்


தேவையான பொருட்கள்:
600 கிராம் கிரவுண்ட் லேம்ப்
உப்பு 1 மேஜைகரண்டி
பச்சை மிளகாய் - 4
குடை மிளகாய்- 1
வெங்காயம்- 1
காரட் - 1
1
தக்காளி
4
துண்டு பூண்டு
கொத்தமல்லி இலை  
செய்முறை:
* அனைத்து காய்கறிகளையும் மிக, மிக சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கவும். உப்பு சேர்த்து வாணலியில் நெய் விட்டு கொஞ்சமே கொஞ்சம் வணக்கி எடுத்து கிரவுண்ட் ஆட்டுக்கறியுடன் கலந்து சின்ன பந்து போல பிடிக்கவும்.
* கபாப் ஸ்கீவரில் கோர்த்து வாணலியில் நாலு நிமிடம் வைத்து எடுக்கவும். அதன்பின் மறுபக்கம் திருப்பி இன்னொரு 3 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
* கிரவுண்ட் லேம்ப் இறைச்சி ஒரு இறைச்சிகூடத்துக்கு பிரஷ்ஷாக சென்று வாங்கி வந்தது. இதில் 75% காலரிகள் கொழுப்பில் இருந்தும் 25% காலரிகள் புரதத்தில் இருந்தும் கிடைக்கிறது
* இது கடித்து சாப்பிட மிகவும் ஜூஸியாக உள்ள இறைச்சி....தொட்டுக்கொள்ள தக்காளி டிப்பிங் சாஸுடன்...டிப்பிங் சாஸில் தொட்டு உண்ண, உண்ண கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவின் மென்மையுடன் கடித்து சாப்பிட இதமாக தொண்டையினுள் இறங்கியது.

இந்த சுவையான, கலர்புல்லான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan & Thirumathi (Mrs) Selvan" அவர்களுக்கு நன்றி :)