தேவையான பொருட்கள் :-
வஞ்சிரமீன் 4 அல்லது 5 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது
வெங்காயம் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய்
மிளகாய் தூள்
தனியாத்தூள்
ராக் சால்ட் சிறிது
மஞ்சள் தூள் சிறிது
செய்முறை :
* முதலில் வஞ்சிரமீனை குக்கரிலோ அல்லது இட்லி பாத்திரத்திலோ போட்டு வேக வைத்துக்கொள்ளவும். அது வெந்தபின், அதனை சிறு சிறு துண்டுகளாக உதிர்த்துக்கொள்ளவும். * அதனுடன் பொடியாக அறிந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாயை சேர்க்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். (இஞ்சி பூண்டு அரைக்கும் போது தண்ணீர் அதிகம் விடக்கூடாது. தண்ணீர் அதிகமானால் கெட்டியாக வராது) அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.
* பின் இந்தக்கலவையை நன்கு பிசைந்துக்கொள்ளவும். தேவைப்படுவோர்கள் இதில் பட்டர் அல்லது நெய் விட்டு பிசைந்துக்கொள்ளவும்.
* பின் தவாவை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் சிறிது ஊற்றவும். பின் பிசைந்த இந்த துண்டுகளை கட்லெட் ஷேப்பில் கையால் தட்டி தவாவில் இடவும்.
* அதனை சுற்றி லேசாக நல்லெண்ணெய்யை ஊற்றவும். நன்றாக திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து தட்டில் பரிமாறவும்.
இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment