Monday, June 8, 2015

பூசணிக்காய் மோர்க்கூட்டு.



தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் 
கடுகு 
சீரகம் 
பெருங்காயம் 
தயிர் 

அரைக்க:
தேங்காய்  துருவல் 
ஜீரகம் 
பச்சை மிளகாய் 

செய்முறை:
*
பூசணிக்காய் தேவையான அளவு தோல் நீக்கி, சிறுசிறு க்யூப்களாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பிலோ, மைக்ரோவேவிலோ சமபங்கு தண்ணீர் விட்டு, கொஞ்சம் உப்பும் போட்டு 8-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
*
பூசணி வேகும் நேரத்தில், மிக்சியில் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு ஸ்பூன் ஜீரகம், பச்சைமிளகாய் 3-4 (காரம் தேவைக்கு) சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
*
அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் சூடாக்கி கறிவேப்பிலை,சீரகம்,கடுகு,பெருங்காயம் தாளிக்கவும். அதில் இந்த அரைத்த தேங்காய் கிரேவியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
*
இந்த நேரத்துக்குள் வேகவைத்த பூசணி வெந்திருக்கும். முக்கால் வெந்தால் போதுமானது. அதையெடுத்து அடுப்பில் உள்ள தேங்காய் கிரேவியில் போட்டு சிம்மில் 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*
பூசணி 100% வெந்து தேங்காய்,பச்சைமிளமாய் கிரேவி டேஸ்ட்டுடன் சேர்த்து சரியாக வெந்திருந்தால் அடுப்பை அணைத்து விடவும்.
*
இத்தோடு நிறுத்திவிட்டு பூசணிக்காய் கூட்டாய் சாப்பிடலாம். இல்லை தயிரை ஒரு கப் சேர்த்து, கலக்கிபூசணிக்காய் மோர்க்கூட்டாய்சாப்பிடலாம். மோர்க்கூட்டு இன்னும் செம டேஸ்ட்.
Note:
தயிர் அடுப்பை அணைத்த பிறகே விடவேண்டும். இல்லையெனில் திரிதிரியாய் வந்துவிடும்.

அதிகபட்சம் 15 நிமிடங்களில் ரெடி. செம டேஸ்ட். ஓரளவு நல்ல ஃபில்லிங்காகவும் இருக்கும். ட்ரை செய்து பாருங்கள்.

இந்த பாரம்பரிய சமையல் குறிப்பினை வழங்கிய "Rasanai Sriram" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment