Monday, June 1, 2015

வாத்துக்கறி டிரை ஃப்ரை



தேவையான பொருட்கள் :-

1. வாத்துக்கறி 
2. இஞ்சி பூண்டு விழுது
3. நாட்டுக்கோழி முட்டை ஒன்று
4. தாளிக்க தேங்காய் எண்ணெய் () நல்லெண்ணெய்
5. மஞ்சள் தூள் சிறிது
6. மிளகாய் தூள் 
7. தனியாத்தூள்
8. ராக் சால்ட் சிறிது

செய்முறை

வாத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம்செய்துக் கொள்ளவும். வாத்துக்கறியை வெட்டும் முன் நன்றாக சூடு காட்டி சுடவும். பின்னர் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடையிலேயே இதை செய்து கொடுப்பார்கள். ஏனெனில் அதன் சதையில் சிறு சிறு முடிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அதனால்தான் சுடவேண்டும். நான் சுட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டேன்.

வாத்துக்கறியில் கொஞ்சம் மஞ்சள் தூள், ராக் சால்ட் இட்டு, குக்கரில் 7 அல்லது 8 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும். கறி நன்கு வெந்தபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.

பின் அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், உப்பு சேர்க்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும். அதனுடன் ஒரு நாட்டு முட்டையை அடித்து ஊற்றி நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

ஒரு பத்து நிமிடம் இந்தக்கலவையை ஊற வைக்கவும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ,நல்லெண்ணய் லேசாக விட்டு வாத்துக்கறி கலவையை போட்டு லேசாக வேக விடவும். திருப்பி திருப்பி போட்டு நன்கு வெந்ததும் டிரையாக எடுக்கவும். வெங்காயம் கொத்தமல்லி தழை தூவி தட்டில் வையுங்கள்.. 

நல்ல மொறு மொறு சுவையுடன் உள்ளே கறி மெத்தென்று நல்ல ஸ்பைஸியாக இருக்கும்..

இந்த மொறுமொறுக்கும் அருமையான வாத்துக்கறி சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :). 

No comments:

Post a Comment