Sunday, March 15, 2015

தேங்காய் பால் முட்டை கறி


தேவையான பொருட்கள்:

  வேகவைத்த முட்டை  2,  சீரகம் ஒரு ஸ்பூன் 
               ஒரு மூடி தேங்காய் அரைத்து எடுத்த பால் ..இரண்டு முறை எடுத்து தனி தனியாக வைக்கவும் .

ஓர் வெங்காயம் , நான்கு பல் பூண்டு , ஒரு துண்டு இஞ்சி , பட்டை ஒரு துண்டு , கசகசா ஒரு ஸ்பூன் , பச்சை மிளகாய் இரண்டு ..இவை அனைத்தையும் விழுதாக அரைக்கவும் .

தேங்காய் எண்ணெய்  இரண்டு ஸ்பூன் , நறுக்கிய வெங்காயம் ஒன்று 

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் சீரகம் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி அதில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை மணம் போகும்வரை வதக்கி பின் அதில் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து அதில் வேகவைத்த முட்டை உப்பு சேர்த்து கொதித்தவுடன் அதில் முதலாம் தேங்காய் பால் விட்டு ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும் 
..கொத்தமல்லி தூவி சைட் டிஷ் ஆகவோ அல்லது காலிஃபிளவர் ரைஸ் உடனோ சேர்த்து சாப்பிடலாம்


இந்த சுவையான,அசத்தலான சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)




4 comments:

  1. ஆங்கில பேலியோ வெப் சைட்டுகளில் சக்கரைவள்ளிக் கிழங்கு மாவும் மரவள்ளிக் கிழங்கு மாவும் பேலியோவில் இருப்பதாக சொல்கிறார்கள். எந்த ஒரு பண்டத்தையும் அடையாகவோ தோசையாகவோ வார்ப்பதற்கு பாண்டிங் செய்யக் கூடிய ஒரு பொருள் இருக்க வேண்டும். முன்னோர் உணவில் அத்தகைய பாண்டிங் செய்யக் கூடிய பொருட்களாக எதை எடுத்துக் கொள்ளலாம்?

    ReplyDelete
  2. பேலியோ பெருமாள்April 10, 2015 at 7:26 AM

    என்னது முட்டை சைவமா? :-0

    என்னங்க கொடுமை இது? பெருமாளே..

    ReplyDelete