தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 20
ராம்நாடு குண்டு மிளகாய் - 10
நறுக்கிய தக்காளி - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
தட்டிய இஞ்சி - 1"
தட்டிய பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை காயவைத்து,சோம்பு பொரிய விடவும்.
* இத்துடன் தட்டிய இஞ்சி வதக்கி, தட்டிய பூண்டினையும் சேர்த்து வதக்கவும். பின்பு ராம்நாடு குண்டு மிளகாய் 5 சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய பாதி சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, ஆட்டுக்கறி சேர்த்து கிளறவும்.
* இத்துடன் தக்காளி சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் (கொஞ்சம் தண்ணீர் மட்டும் சேர்த்தால் போதும்). உப்பு சேர்த்து, குக்கர் மூடி போட்டு 8 - 10 விசில் விடவும்.
* ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை காயவைத்து, முதலில் 5 ராம்நாடு குண்டுமிளைகாய் கில்லி போட்டு வதக்கவும்,பின் கறிவேப்பிலை தாளிக்கவும்.
* இப்போது நறுக்கிய மீதி வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
* இத்துடன் வெந்த கறியையும் சேர்த்து நன்கு புகைப்படத்தில் உள்ள பதத்திற்கு வறுக்கவும்.
ஆட்டுக்கறி பிரை ரெடி :)
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
Goat fry நல்லா இருந்தது மைதிலி ஜி. நா நீள மிளகாய் தான் போட்டேன், இருந்தாலும் டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு. Thanks for the recipe.
ReplyDeleteLakshmi Mani
ReplyDeleteThanks Lakshmi Mani
ReplyDelete