Thursday, April 9, 2015

கேரளா மீன் தொக்கு




தேவையான பொருட்கள்:
சாலமன் மீன் - 10 சிறு துண்துக்கள்
தக்காளி - 2
புளி கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு  - 10 பல்
வரமிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -  தேவைக்கேற்ப

செய்முறை: 
* மீன்  துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, 20 நிமிடம், 360 டிகிரி சூட்டில் பேக்  செய்து வைக்கவும். (எனக்கு மீன் வாசம் பிடிக்காது என்பதனால் பேக் செய்கிறேன், அப்படியேவும் உபயோகப்படுத்தலாம்)
* ஒரு சிறிய பாத்திரத்தில் தக்காளிப்பழம் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து, தோலுரித்து கரைத்து வைக்கவும்.
* ஒரு கனமான கடாயில் எண்ணெய் காயவைத்து, சோம்பு பொரிய விடவும். இப்பொழுது அடுப்பை சிறு தீயிலோ அல்லது அனைத்து விட்டு, வரமிளகாய் தூள் சேர்த்து வறுக்கவும். (பொடி தீயாமல் இருக்க வேண்டும்)
* உடனே நறுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும் (அதிகம் வதங்க தேவை இல்லை).
* இத்துடன் கரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து, பச்சை வாசம் போகும்வரை வதக்கி, புளித்தண்ணீர் சேர்த்து, உப்பு தூவி, மூடிவைத்து கொதிக்க விடவும்.
* நன்கு சுருண்டு வரும் போது பேக் செய்த அல்லது சுத்தம் செய்த மீன் துண்டுகளை தொக்குடன் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
* மீன் உடையாமல் ஒரு முறை நன்கு கலக்கி, கருவேப்பிலை கில்லி போட்டு,சூடாக பரிமாறவும்.


சமையல் குறிப்பு:  Mythili Thiyagu








No comments:

Post a Comment