Thursday, April 30, 2015

செம்மறி ஆட்டுக்கிட்னிக்கறி



செய்முறை மற்றும் விளக்கம்:
(முதல் படம் காண்க. இதில் வெள்ளையாக இருப்பதுதான் யுரீட்டர். அதை மட்டும் வெட்டி எடுத்துவிடவேண்டும்)
கிட்னியின் நன்மைகள்:
1 பவுண்டு சுமார் 440 கிராம் கிட்னியில் இருக்கும் மூலசத்துக்கள்
காலரிகள் 440
12 கிராம் கொழுப்பு
2.5 லிட்டர் பாலில் இருக்கும் அளவு முதல்தரமான புரதம் (ஒரு நாளின் 100% புரத தேவையை இதுவே கொடுக்கிறது)
1:1 என்ற விகிதத்தில் ஒமேகா3:ஒமேகா 6 கொழுப்புகள் (நாலு ஒமேகா 3 மாத்திரைக்கு சமம்)
ஐந்து முட்டைக்கு சமமான அளவு முதல்தரமான வைட்டமின்
எடைக்கு எடை கீரைக்கு சமமான அளவு தயமின் (பி1)
கீரையை விட மும்மடங்கு அதிக பி2 வைட்டமின்
20 கப் பாலுக்கு சமமான வைட்டமின் பி12
3 கிலோ பேரிச்சையில் இருக்கும் அளவு இரும்புச்சத்து
வாழைக்கு சமமான அளவு பொட்டாசியம்
ஆக வைட்டமின், மினரல் பவர்ஹவுஸ் கிட்னி...இதை சாப்பிடாமல் ஒதுக்கிவைப்பது நியாயமா?
கிட்னியை சமைக்கும் முறை:
கிட்னியை நன்றாக கழுவவும். கழுவி கூரான கத்தியை எடுத்து அதன் வெள்ளைநிற யுரிட்டரை வெட்டி எடுக்கவும். இதுதான் சற்று நேரம் எடுத்து டெக்னிக்கலா செய்யவேண்டிய வேலை.
அதன்பின் கிட்னியை துண்டாக வெட்டி வாணலியில் நெய்விட்டு வெங்காயம் இடவும். கிட்னியை அதனுள் கொட்டி 2 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் மிளகுபொடி போடவும். காரம் வேண்டுமானால் அதிகம் சேர்க்கலாம். காப்ஸிகம், பிராக்களி மாதிரி காய்களையும் சேர்க்கலாம். ஆனால் அதெல்லாம் சுவைக்கு சேர்க்கலாமே ஒழிய கிட்னியில் இருக்கும் வைட்டமின், மினரலுடன் ஒப்பிடுகையில் கீரை, காரட் முதலானவை தள்ளியே நிற்கவேண்டும்.

ஐந்து நிமிடம் மீடியம் வெப்பத்தில் வணக்கி எடுத்தால் கிட்னி ரெடி...உண்ண மிக, மிக சுவையாக இருக்கும்.சுவையில் மஷ்ரூமை ஒத்திருக்கும் என வைத்துக்கொள்ளலாம். உடன் வேறு சில மசாலாக்களை எல்லாம் போட்டு, காய்கறிகளை வெட்டிபோட்டிருந்தால் சுவை கூடும். ஆனால் ஆக்ஷன் படம் பார்க்கையில் நடுவே அபஸ்வரமாக வரும் காமடி சீன்களை போல இறைச்சியின் சுவையை அனுபவித்து மகிழ்வதில் இருந்து அது நம்மை தடுத்துவிடும் என்பதால் நான் இறைச்சியில் மசாலா மற்றும் காய்களை அதிகம் சேர்ப்பதில்லை.

இந்த டெரரான,ஆனால் ஆரோக்கியமான முற்றும் விளக்கமான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு  நன்றி. 

No comments:

Post a Comment