Tuesday, April 14, 2015

3 in 1 - கொங்கு கோழிக்குழம்பு/சூப் மற்றும் கொங்கு கோழி வறுவல்



கொங்கு கோழிக்குழம்பு:

தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 1/2 (பாதி)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1/2 இஞ்ச்
கிராம்பு - 1
வரமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை  - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:
ஆயில் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15 -20
வரமிளகாய் - 3
பூண்டு - 5 பல்
இஞ்சி  - 1 இஞ்ச்
பட்டை - 1/2 இஞ்ச்
கிராம்பு - 3
தேங்காய் துருவல் - 1/2 கப்
கொத்தமல்லி தூள் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா (optional) - 1 டீஸ்பூன்


செய்முறை:
* மேலே வறுத்து அரைக்க கொடுத்தவைகளை (தேங்காய் துருவல் வரை) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். இப்போது அடுப்பை அனைத்து விட்டு, சோம்பு,கசகசா (optional),பூண்டு 2 பல்,இஞ்சி சிறிது சேர்த்து அரைக்கவும். இதுதான் இந்த மசாலாவுக்கு ஒரு அருமையான வாசத்தினைக் கொடுக்கும் :).
* ஒரு குக்கரில் வெண்ணெய் சூடு செய்து, சோம்பு,பட்டை,கிராம்பு தாளித்து, பச்சைமிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு வெங்காயம் கறிவேப்பிலை  சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்க்கவும். இத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுப்பினை பெரும் தீயில் வைத்து, சுத்தம் செய்த கோழி துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்த மசாலாவில் 3/4 பங்கு சேர்த்து வதக்கவும். மீதி 1/4 பங்கினை வருவளுக்காக சேமித்து வைக்கவும்.
* பின்பு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி...2 விசில் அல்லது 8-10 நிமிடங்கள் வேக விடவும்.
* குக்கர் ஆரிய பிறகு, குழம்பில்/சூப்பில் இருக்கும் கோழித்துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும். இந்த கோழி துண்டுகளை,மீதம் உள்ள மசாலாவை சேர்த்து வறுவலாக சமைக்கப் போகிறோம்.
* இந்த கோழி சாற்றினை, குழம்பாக முட்டை  பணியாரம் அல்லது பேலியோ ரொட்டியுடன் சாப்பிடலாம் அல்லது சூப்பு போல அப்படியே பருகலாம். (நெஞ்சு சளி போன்ற நோய்களுக்கு மிக சிறந்த உணவு)


கொங்கு கோழி வறுவல்:

தேவையான பொருட்கள்:
கோழிக்குழம்பில் இருந்து கோழித்துண்டுகள்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு/லவங்கம் - 2
கொத்தமல்லி இலை  - கொஞ்சம்

செய்முறை:
* கோழிக்குழம்பில் இருந்து கோழித்துண்டுகளை (கொழம்பில்லாமல்) தனியே எடுத்துவைக்கவும்.
* ஒரு கடாயில் வெண்ணெய் சூடு செய்து, சோம்பு,பட்டை,கிராம்பு தாளித்து, பச்சைமிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
* இத்துடன் அரைத்து, மீதம் வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* இதில் கோழிக்குழம்பில் இருந்து எடுத்த கோழித்துண்டுகளை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் :)

Mythili Thiyagu



No comments:

Post a Comment