தேவையான பொருட்கள்:
சுவரொட்டி
தேங்காய் எண்ணெய்/நெய்
நறுக்கிய வெங்காயம்
மிளகு தூள்/பெப்பர் பவுடர்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
* சுவரொட்டியை குக்கரில் இரண்டு விசிலுக்கு வேகவைத்துக் கொள்ளவும். சிறிது ஆறின பிறகு வேண்டிய சைசுக்கு தகுந்தார் போல் சிறியதாக வெட்டிக்கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய்/நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போடவும், அது சற்று பொன்னிறமாக வரும் வேளையில் சுவரொட்டியை போட்டு வறுக்கவும் பத்து நிமிடத்திற்க்கு வறுக்கவும். * கூடவே நிறைய பெப்பர் பவுடர், தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment