Friday, July 31, 2015

கோவைக்காய் குழம்பு



தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்
பெரிய தக்காளி
கோவைக்காய்

தாளிக்கத் தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தூள்
வர மிளகாய் (Red Chilli) தேவைக்கேற்ப
இஞ்சி
வெந்தயம்
நெய்
கொஞ்சம் புளிக் கரைசல்

செய்முறை;

வெங்காயத்தினைப் பொடிப்பொடியாக அரியவும்
தக்காளியினை அரிந்து கொள்ளவும்.
கோவைக் காயினை நீளவாக்கில் நான்காக வெட்டவும். ( ஒரு கோவைக்காயை நான்கு தூண்களாக வெட்டவும்)
வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். தேவைக்கேற்ப சிவப்பு வற்றல், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். ( எங்கெல்லாம் வெங்காயம் வதக்குகின்றோமோ அங்கெல்லாம் உப்பு சேர்த்தால் நன்கு வேகும்). மஞ்சள் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் நிறம் மாற ஆரம்பிக்கும்பொழுது தக்காளி சேர்த்து வதக்கவும்.
சுருள வதங்கியதும், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது இக்கலவையை மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும்.
இப்பொழுது வாணலியில் நெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, சிறிது வெந்தயம் சேர்த்து வதக்கவும். ( எங்கெல்லாம் புளி சேர்க்கின்றோமோ அங்கெல்லாம் வெந்தயம் சேரும்பொழுது அதன் சுவை அபாரமாக அமைகின்றது)
வாசனை நன்கு வந்ததும் தூண்கள் போல் வெட்டிய கோவைக்காயை உப்பு சேர்த்து வதக்கவும்.
கோவைக்காய் பாதி வெந்தததும் புளிக் கரைசலை ஊற்றி , கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வேகவிடவும்.
இப்பொழுது அரைத்து வைத்த மசாலாவினை ஊற்றி ஒரு கொதி வந்ததும்  மூடி போட்டு அடுப்பினை சிம்மில் வைத்து 8 லிருந்து 10 நிமிடங்கள் வரை க்ரேவி பதம் வரும் வரை வேகவிடவும்.

- அடுப்பினை அணைத்துவிடவும்.

இந்த சுவையான மற்றும் புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran"அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment