Wednesday, July 15, 2015

ஹெர்பல் ஆம்லேட்



தேவையான பொருட்கள்:
முட்டை - 2
உப்பு - சிறிதளவு
மிளகுத்தூள்  - 1 டீஸ்பூன்
துளசி - 5
திருநீற்றுப் பச்சிலை - 5
தில்  (dill) - சிறிதளவு
லைம் மின்ட் (lime mint)  - 5
இத்தாலியன் துளசி (Italian basil) - 5
chives - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
Oregano/Marjoram - சிறிதளவு
ரோஸ்மேரி - சிறிதளவு
Sage - 2
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* முட்டையை உடைத்து,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* ஆம்லெட் செய்யும் பாத்திரத்தில்,வெண்ணெய் உருக்கி, அடுப்பினை ஆப்(off) செய்யவும்.
* இப்பொழுது முக்கால் பங்கு அடித்து வைத்த முட்டையினை ஊற்றவும். இதில் அனைத்து ஹெர்பல்களையும் பொடியாக நறுக்கி தூவி, மீதம் உள்ள முட்டையினையும் மெதுவாக ஹெர்பல் மேல் சுற்றியும் ஊற்றவும் (அப்பொழுதுதான் ஹெர்பல் நடுவிலும், சுற்றிலும் முட்டையுமான ஆம்லெட் கிடைக்கும்).
* இப்போது அடுப்பை பற்ற வைத்து சிறு தீயில் முட்டையை வேகவைத்து எடுக்கவும். சூடான ஹெர்பல் ஆம்லெட் ரெடி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu



3 comments:

  1. எதனை வைத்து இதை முன்னோர் உணவு என்று வகைப்படுத்துகிறீர்கள என்று அறியலாமா?

    ReplyDelete
    Replies
    1. இது டயட்டிற்கான உணவு. டயட்டினை தொடர இது உதவும் அவ்வளவே..!!

      Delete
  2. நல்லா இருந்தது. பேலியோ வெஜ் / நான் வெஜ் ஒரு குக் புக் போடலாமா ?

    ReplyDelete