Thursday, April 30, 2015

செம்மறி ஆட்டுக்கிட்னிக்கறி



செய்முறை மற்றும் விளக்கம்:
(முதல் படம் காண்க. இதில் வெள்ளையாக இருப்பதுதான் யுரீட்டர். அதை மட்டும் வெட்டி எடுத்துவிடவேண்டும்)
கிட்னியின் நன்மைகள்:
1 பவுண்டு சுமார் 440 கிராம் கிட்னியில் இருக்கும் மூலசத்துக்கள்
காலரிகள் 440
12 கிராம் கொழுப்பு
2.5 லிட்டர் பாலில் இருக்கும் அளவு முதல்தரமான புரதம் (ஒரு நாளின் 100% புரத தேவையை இதுவே கொடுக்கிறது)
1:1 என்ற விகிதத்தில் ஒமேகா3:ஒமேகா 6 கொழுப்புகள் (நாலு ஒமேகா 3 மாத்திரைக்கு சமம்)
ஐந்து முட்டைக்கு சமமான அளவு முதல்தரமான வைட்டமின்
எடைக்கு எடை கீரைக்கு சமமான அளவு தயமின் (பி1)
கீரையை விட மும்மடங்கு அதிக பி2 வைட்டமின்
20 கப் பாலுக்கு சமமான வைட்டமின் பி12
3 கிலோ பேரிச்சையில் இருக்கும் அளவு இரும்புச்சத்து
வாழைக்கு சமமான அளவு பொட்டாசியம்
ஆக வைட்டமின், மினரல் பவர்ஹவுஸ் கிட்னி...இதை சாப்பிடாமல் ஒதுக்கிவைப்பது நியாயமா?
கிட்னியை சமைக்கும் முறை:
கிட்னியை நன்றாக கழுவவும். கழுவி கூரான கத்தியை எடுத்து அதன் வெள்ளைநிற யுரிட்டரை வெட்டி எடுக்கவும். இதுதான் சற்று நேரம் எடுத்து டெக்னிக்கலா செய்யவேண்டிய வேலை.
அதன்பின் கிட்னியை துண்டாக வெட்டி வாணலியில் நெய்விட்டு வெங்காயம் இடவும். கிட்னியை அதனுள் கொட்டி 2 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் மிளகுபொடி போடவும். காரம் வேண்டுமானால் அதிகம் சேர்க்கலாம். காப்ஸிகம், பிராக்களி மாதிரி காய்களையும் சேர்க்கலாம். ஆனால் அதெல்லாம் சுவைக்கு சேர்க்கலாமே ஒழிய கிட்னியில் இருக்கும் வைட்டமின், மினரலுடன் ஒப்பிடுகையில் கீரை, காரட் முதலானவை தள்ளியே நிற்கவேண்டும்.

ஐந்து நிமிடம் மீடியம் வெப்பத்தில் வணக்கி எடுத்தால் கிட்னி ரெடி...உண்ண மிக, மிக சுவையாக இருக்கும்.சுவையில் மஷ்ரூமை ஒத்திருக்கும் என வைத்துக்கொள்ளலாம். உடன் வேறு சில மசாலாக்களை எல்லாம் போட்டு, காய்கறிகளை வெட்டிபோட்டிருந்தால் சுவை கூடும். ஆனால் ஆக்ஷன் படம் பார்க்கையில் நடுவே அபஸ்வரமாக வரும் காமடி சீன்களை போல இறைச்சியின் சுவையை அனுபவித்து மகிழ்வதில் இருந்து அது நம்மை தடுத்துவிடும் என்பதால் நான் இறைச்சியில் மசாலா மற்றும் காய்களை அதிகம் சேர்ப்பதில்லை.

இந்த டெரரான,ஆனால் ஆரோக்கியமான முற்றும் விளக்கமான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு  நன்றி. 

Tuesday, April 28, 2015

தாய் ரெட்கர்ரி லேம்ப்


தேவையான பொருட்கள்: 
தாய் ரெட் கர்ரி பேஸ்ட்- 1 டேபிள்ஸ்பூன் (இது கடைகளில் கிடைக்கும். வீட்டிலும் செய்ய எளிது. அந்த ரெசிபி பின்னாளில் கொடுக்கிறேன். இது இல்லையெனில் சிகப்பு மிளகாயை அரைத்து பயன்படுத்தலாம்)
அரை கிலோ ஆட்டுக்கறி
1 பெல் பெப்பெர் துண்டாக நறுக்கியது
2 காரட்
1 வெங்காயம் நறுக்கியது
1 கேன் தேங்காய்ப்பால்
கொஞ்சம் கொத்துமல்லி (சிலாண்ட்ரோ)
2 பச்சை மிளகாய்
உப்பு
நெய்
செய்முறை:
* நெய்யை வாணலியில் விடவும். ஆட்டுக்கறியை உள்ளே போட்டு வணக்கவும். நாலைந்து நிமிடம் கழித்து மீதமுள்ள காய்கறிகளை கொட்டி கிளறவும்
* அதன்பின் தேங்காய்ப்பாலை உள்ளே ஊற்றி மூடி போட்டு மூடிவிட்டு வேகவிடவும். நன்றாக வெந்தபின் போர்க்கால் இறைச்சியை குத்திபார்த்து வெந்தபின் இறக்கி பரிமாறவும்.

குறிப்பு:

இதை அரிசியுடன் சாப்பிடுவார்கள். ஆனால் அது அவசியமே இல்லை. தேங்காய்ப்பாலில் ஊறின இறைச்சியை தேங்காய்ப்பாலுடன் எடுத்து உண்ன சுவை அமிர்தமாக இறங்கும். இதனுடன் உருளைகிழங்கு சேர்த்தால் சுவை இன்னும் கூடும். ஆனால் உருளைகிழங்கில் கார்ப் அதிகம் என்பதால் அதை நான் சேர்ப்பதில்லை.


இந்த சுவையான மற்றும் புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "திருமதி செல்வன்" அவர்களுக்கு நன்றி  :) 

Sunday, April 19, 2015

பொல்டே சய்னோ - (முன்னோர் மட்டன்)


தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) - 20
மட்டன் - 500 கிராம்
சிவப்பு மிளகாய் - 4
உப்பு
தேங்காய் `

செய்முறை:
* சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
* குக்கரில் 4-5 டம்ளர் நீர் விட்டு மட்டன், வெட்டிய சாம்பார் வெங்காயம் மற்றும் நான்கு காய்ந்த சிவப்பு மிளகாய் போட்டு 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.
* நன்றாக வெந்த பிறகு, குக்கர் முடியை திறந்து உப்பு போட்டு சிறிது நேரம் நீர் வற்றும் வரை வேக விடவும். 
* இத்தோடு தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி கடைசியாக நீர் வற்றுவத்ற்க்கு சற்று முன்னதாக போட்டால் அந்த தேங்காயில் மட்டன் சுவை இரங்கி அது ஒரு தனி டேஸ்டாக இருக்கும். 

குறிப்பு: மட்டனை குழம்பாகவும், மசாலா போட்டு க்ரேவியாகவும் தான் வழக்கமாக உண்பதால் மசாலவின் சுவை சற்று தூக்கலாக இருக்கும். முன்னோர் உணவை உண்பதாக சொல்லிவிட்டு அவர்களைப்போல் சாப்பிடாமல் இருந்தால் எப்படி? ஆட்டு கறியின் உண்மையான சுவைய உணர வேண்டுமா? இதை உண்டு மகிழவும் :).


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore" அவர்களுக்கு நன்றி :)

சுவரொட்டி/மண்ணீரல்(spleen) பிரை



தேவையான பொருட்கள்:
சுவரொட்டி 
தேங்காய் எண்ணெய்/நெய் 
நறுக்கிய வெங்காயம் 
மிளகு தூள்/பெப்பர் பவுடர் 
கறிவேப்பிலை 
உப்பு 

செய்முறை:

* சுவரொட்டியை குக்கரில் இரண்டு விசிலுக்கு வேகவைத்துக் கொள்ளவும். சிறிது ஆறின பிறகு வேண்டிய சைசுக்கு தகுந்தார் போல் சிறியதாக வெட்டிக்கொள்ளவும்
* கடாயில் சிறிது எண்ணெய்/நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போடவும், அது சற்று பொன்னிறமாக வரும் வேளையில் சுவரொட்டியை போட்டு வறுக்கவும் பத்து நிமிடத்திற்க்கு வறுக்கவும். * கூடவே நிறைய பெப்பர் பவுடர், தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore" அவர்களுக்கு நன்றி :)

Tuesday, April 14, 2015

3 in 1 - கொங்கு கோழிக்குழம்பு/சூப் மற்றும் கொங்கு கோழி வறுவல்



கொங்கு கோழிக்குழம்பு:

தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ
வெங்காயம் - 1/2 (பாதி)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1/2 இஞ்ச்
கிராம்பு - 1
வரமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை  - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:
ஆயில் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15 -20
வரமிளகாய் - 3
பூண்டு - 5 பல்
இஞ்சி  - 1 இஞ்ச்
பட்டை - 1/2 இஞ்ச்
கிராம்பு - 3
தேங்காய் துருவல் - 1/2 கப்
கொத்தமல்லி தூள் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா (optional) - 1 டீஸ்பூன்


செய்முறை:
* மேலே வறுத்து அரைக்க கொடுத்தவைகளை (தேங்காய் துருவல் வரை) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். இப்போது அடுப்பை அனைத்து விட்டு, சோம்பு,கசகசா (optional),பூண்டு 2 பல்,இஞ்சி சிறிது சேர்த்து அரைக்கவும். இதுதான் இந்த மசாலாவுக்கு ஒரு அருமையான வாசத்தினைக் கொடுக்கும் :).
* ஒரு குக்கரில் வெண்ணெய் சூடு செய்து, சோம்பு,பட்டை,கிராம்பு தாளித்து, பச்சைமிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு வெங்காயம் கறிவேப்பிலை  சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்க்கவும். இத்துடன் மிளகாய்த்தூள் சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுப்பினை பெரும் தீயில் வைத்து, சுத்தம் செய்த கோழி துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்த மசாலாவில் 3/4 பங்கு சேர்த்து வதக்கவும். மீதி 1/4 பங்கினை வருவளுக்காக சேமித்து வைக்கவும்.
* பின்பு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கர் மூடி...2 விசில் அல்லது 8-10 நிமிடங்கள் வேக விடவும்.
* குக்கர் ஆரிய பிறகு, குழம்பில்/சூப்பில் இருக்கும் கோழித்துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும். இந்த கோழி துண்டுகளை,மீதம் உள்ள மசாலாவை சேர்த்து வறுவலாக சமைக்கப் போகிறோம்.
* இந்த கோழி சாற்றினை, குழம்பாக முட்டை  பணியாரம் அல்லது பேலியோ ரொட்டியுடன் சாப்பிடலாம் அல்லது சூப்பு போல அப்படியே பருகலாம். (நெஞ்சு சளி போன்ற நோய்களுக்கு மிக சிறந்த உணவு)


கொங்கு கோழி வறுவல்:

தேவையான பொருட்கள்:
கோழிக்குழம்பில் இருந்து கோழித்துண்டுகள்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு/லவங்கம் - 2
கொத்தமல்லி இலை  - கொஞ்சம்

செய்முறை:
* கோழிக்குழம்பில் இருந்து கோழித்துண்டுகளை (கொழம்பில்லாமல்) தனியே எடுத்துவைக்கவும்.
* ஒரு கடாயில் வெண்ணெய் சூடு செய்து, சோம்பு,பட்டை,கிராம்பு தாளித்து, பச்சைமிளகாய் சேர்த்து வறுக்கவும். பின்பு வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு சேர்க்கவும்.
* இத்துடன் அரைத்து, மீதம் வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
* இதில் கோழிக்குழம்பில் இருந்து எடுத்த கோழித்துண்டுகளை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் :)

Mythili Thiyagu



Monday, April 13, 2015

Cauliflower சோறு





செய்முறை:
மிச்சி அல்லது food processor ல்,  cauliflower சிறு துண்டுகளாக வெட்டி சிறிது சிறியதாக  அரைக்கனும்.. (தொடர்ந்து அரைத்தால் கூழாகிவிடும்)அரைத்த சோத்தை துணியால் இறுக்கப்பிழிந்து புட்டுச்சட்டியில் ஆவியில் 6-7 நிமிடங்கள் அவித்தால் Cauliflower சோறு ரெடி..

இந்த அருமையான (யாவரும் அறிந்த) சமையல் குறிப்பினை வழங்கிய " பாக்கிய ராஜா" அவர்களுக்கு நன்றி :)

முட்டைகோஸ் பிரியாணி

தேவையான பொருட்கள் :
 பெரிய வெங்காயம் -1
 தக்காளி  - 1
இஞ்சிபூண்டு விழுது - சிறிது
காய்கறிகள் - (தேவையானவை)
( நான் காரட்.புடலை,சவ்சவ்.நூக்கல்,புதினா போட்டேன்.)  100 கிராம் போதும்.
          முட்டைகோஸ்=100 கிராம்(காரட் சீவும் சீவீயில் துருவிக் கொள்ள வேண்டும்)

செய்முறை:
குக்கரில் சிறிது நெய் விட்டு பட்டை.கிராம்பு,சோம்பு போடவும்.
பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி  போட்டு வதக்கவும்.
பின் இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கவும்..
பின் அந்த நெய்யில்பிரியாணி மசாலா” 2 ஸ்பூன் போடவும். பின் வதக்கவும்.உப்பு போடவும்.
* பின் காய்கறிகள் போட்டு வதக்கவும்
பின் முட்டைகோஸ் போட்டு வதக்கவும்.
நன்றாக அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கவும்.
பின் குக்கரை மூடி விடவும்.
நீர் ஊற்ற வேண்டாம்
* அடுப்பை சிம்மில் போடவும்.
* 2 விசில் வரும் வரை விடவும்.(அடி பிடிக்காது.)
காய்கறிகளில் உள்ள நீரே போதும்.
* தம் அடங்கிய பின்.குக்கரை திறந்து 1/2 எலுமிச்சை விடவும்.
தேவை எனில் மல்லித்தழை தூவவும்.

குறிப்புகள்: 
* தொட்டுக் கொள்ள தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
* ஆறிய பின், முட்டையை வதக்கி, அதனுடன் இந்த முட்டைகோஸ் பிரியாணியைப் போட்டு வதக்கவும்.
சாப்பிட அதுவும் நன்றாக இருக்கும்


இந்த புதுமையான,சுவைமிகுந்த சமையல் குறிப்பினை வழங்கிய "SubbuLakshmi" அவர்களுக்கு நன்றி. :)





பாதாம் பானம் (குழந்தைகளுக்கு மட்டும்)

தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 (ஊறவைத்தது)
நெய் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய்
இனிப்பு

செய்முறை:
இரவு முழுவதும் ஊறவைத்த 100 பாதாம் பருப்புகளை நன்கு அரைத்து, அத்துடன் நெய்,துருவிய தேங்காய், இனிப்பு (தேன் போன்ற எதாவுது ஒன்று )சேர்த்து நன்கு கலக்கி, குழந்தைகளுக்கு பருகக் குடுக்கவும்.

இந்த அருமையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Sathish Kumar G" அவர்களுக்கு  நன்றி :)

Thursday, April 9, 2015

கேரளா மீன் தொக்கு




தேவையான பொருட்கள்:
சாலமன் மீன் - 10 சிறு துண்துக்கள்
தக்காளி - 2
புளி கரைசல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு  - 10 பல்
வரமிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -  தேவைக்கேற்ப

செய்முறை: 
* மீன்  துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, 20 நிமிடம், 360 டிகிரி சூட்டில் பேக்  செய்து வைக்கவும். (எனக்கு மீன் வாசம் பிடிக்காது என்பதனால் பேக் செய்கிறேன், அப்படியேவும் உபயோகப்படுத்தலாம்)
* ஒரு சிறிய பாத்திரத்தில் தக்காளிப்பழம் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து, தோலுரித்து கரைத்து வைக்கவும்.
* ஒரு கனமான கடாயில் எண்ணெய் காயவைத்து, சோம்பு பொரிய விடவும். இப்பொழுது அடுப்பை சிறு தீயிலோ அல்லது அனைத்து விட்டு, வரமிளகாய் தூள் சேர்த்து வறுக்கவும். (பொடி தீயாமல் இருக்க வேண்டும்)
* உடனே நறுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும் (அதிகம் வதங்க தேவை இல்லை).
* இத்துடன் கரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து, பச்சை வாசம் போகும்வரை வதக்கி, புளித்தண்ணீர் சேர்த்து, உப்பு தூவி, மூடிவைத்து கொதிக்க விடவும்.
* நன்கு சுருண்டு வரும் போது பேக் செய்த அல்லது சுத்தம் செய்த மீன் துண்டுகளை தொக்குடன் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்.
* மீன் உடையாமல் ஒரு முறை நன்கு கலக்கி, கருவேப்பிலை கில்லி போட்டு,சூடாக பரிமாறவும்.


சமையல் குறிப்பு:  Mythili Thiyagu