தேவையான பொருட்கள்:
முற்றிய வெங்காயத்தாள்
வறுத்த நிலக்கடலை (பேலியோ அல்ல )
மஞ்சள் தூள்
உப்பு
வறுத்து பொடிக்க:
வரமிளகாய்
தனியா
சீரகம்
மிளகு
செய்முறை:
முற்றிய வெங்காயத்தாள்களை சுத்தம் செய்து நறுக்கி தாளித்து, கொஞ்சம் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.
வரமிளகாய், தனியா, சீரகம் மிளகு, கறிவேப்பிலையை எண்ணெயிட்டு வறுத்து, பொடியாக்கி, அதனோடு வறுத்த நிலக்கடலை போட்டுப் பொடியாக்கி தாள் வெந்ததும் இந்தத் தூளைத் தூவி இறக்கவும். எதனோடும் இணையும் டேஸ்ட்டி டேஸ்ட்டி யம்மி யம்மி தொடுகறி தயார்.
வெங்காயத்தாள் தொடுகறி: இந்த புதுமையான,சுவைமிகுந்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vijayapriya Panneerselvam" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment