Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts

Sunday, December 27, 2015

பேலியோ பால் திரட்டு




செய்முறை:

* ஒரு லிட்டர் பால் திரட்டு கிடைக்க சுமார் ஆறு லிட்டர் பால் வாங்கிக்கொள்ளவும். செய்யும் முறை சிம்பிள் என்றாலும் பாலுக்கு எருமையும் திரட்டுக்கு பொறுமையும் நேரமும் தேவை. குக்கர் அல்லது தடிமனான கடாய் போல நல்ல கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும், அதில் பாலை நிரப்பி நல்ல சாலிட் பதம் வரும் வரை தேவுடு காக்கவும். பால் பொங்கி வரவும் அடி பிடித்து கொள்ளவும் அபாயம் இருப்பதால் மிகுந்த கவனத்தோடு அவ்வப்போது கரண்டி வைத்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.


* இந்த இனிப்பை நல்ல முறையில் முடித்து துணைவியுடன் தின்ப நிகழ்வு ஆவதும் அல்லது துன்ப நிகழ்வு ஆவதும் உங்கள் கையில், எனவே கரண்டியை வைத்து பாத்திரத்தில் சுரண்டிக்கொண்டே இருக்கவும்.

* நேரத்தை சேமிக்க பாலை இரு பாத்திரங்களில் செய்தால் விரைவாக முடிக்கலாம். இதை செய்ய எனக்கு மூன்று மணி நேரம் பிடித்தது, சுவையும் பிடித்தது,அடி மட்டும் பிடிக்கவில்லை. பாலுக்கு பிறக்கும் போதே சுகர் இருப்பதால் மேலும் போடத்தேவையில்லை.

* இதில் சிக்ஸ் லிட்டர் பால் சிங்கிள் லிட்டர் ஆவதால் கலோரி அதிகம், பல-வாய் தின்னாமல் அளவாய் சாப்பிடவும்.பொறுமை இல்லாதவர்கள் கடையில் கண்டெண்ஸ்டு மில்க் வாங்கி குடிக்கலாமா என்று கமெண்டில் கமற வேண்டாம்.எல்லாம் வல்ல பேலியோ பெருமான்கள் பாலையும், பன்னீரையும் பேலியோ அலவ்ட் லிஸ்டில் சேர்த்த மாதிரி இதையும் எப்போதாவது சேர்த்துக்கொல்ல சீ…சேர்த்துக்கொள்ள அருள் புரிய வேண்டும்.

அனைவருக்கும் திரட்டுப்பால் கொடுக்க முடியாததால், அன்-பால் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




இந்த சுவையான, பாரம்பரிய பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore " அவர்களுக்கு நன்றி.

பாலாடை அல்வா (heavy cream halwa)




தேவையான பொருட்கள்:


1) ஹெவி கிரிம்- 1 lit
2) full fat milk or half & half milk - 1 lit
3) குங்கும்ப்பூ


செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் ஹெவி கிரிம் மற்றும் half & half milk இரண்டையும் ஊற்றி அடுப்பை மிதமாக வைத்து கிளரவும்

நன்கு கெட்டியாகி சுருண்டு எண்ணை பிரிந்து வரும் தருவாயில் குங்கும்பூ தூவி இறக்கவும்.




இந்த சுவையான, அருமையான பேலியோ உணவின் சமையல் குறிப்பினை வழங்கிய "Nithi" அவர்களுக்கு நன்றி.

Monday, April 13, 2015

பாதாம் பானம் (குழந்தைகளுக்கு மட்டும்)

தேவையான பொருட்கள்:
பாதாம் - 100 (ஊறவைத்தது)
நெய் - 2 ஸ்பூன்
துருவிய தேங்காய்
இனிப்பு

செய்முறை:
இரவு முழுவதும் ஊறவைத்த 100 பாதாம் பருப்புகளை நன்கு அரைத்து, அத்துடன் நெய்,துருவிய தேங்காய், இனிப்பு (தேன் போன்ற எதாவுது ஒன்று )சேர்த்து நன்கு கலக்கி, குழந்தைகளுக்கு பருகக் குடுக்கவும்.

இந்த அருமையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Sathish Kumar G" அவர்களுக்கு  நன்றி :)

Wednesday, February 25, 2015

கேரட்-பாதாம் கேக்



தேவையான பொருட்கள்:
துருவிய கேரட் - 3 கப்
பாதாம் பவுடர்  - 3 கப்
வால்நட் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
சின்னமன்  பவுடர் (பட்டை தூள்) - 1 டீஸ்பூன்
தேன் - 1/2 கப்
முட்டை - 5
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்

செய்முறை
* கேரட், பாதாம் பவுடர், வால்நட், பேக்கிங் பவுடர், தேங்காய் எண்ணை, சின்னமன் பவுடர், தேன் மற்றும் முட்டை இவை அனைத்தையும் கலந்து பேக் (bake) செய்ய வேண்டும்



இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Senthamil Selvi" அவர்களுக்கு நன்றி :)

Tuesday, February 10, 2015

பேலியோ வாழைப்பழ கேக்




ஐம்பது க்ராம் பாதாம்  தண்ணீரில் ஊரவைத்து துடைத்து நன்றாக காய்ந்தவுடன்  மிக்சியில் மாவாக அறைத்துக் கொள்ளவும்.. அதில் அரை டீஸ்பூன் பேகிங் பௌடர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.....2 முட்டை உடைத்து அடித்து வைத்துக் கொள்ளவும் நன்கு பழுத்த இரண்டு வாழைப்பழம் அதையும் மிக்சியில் அடித்து வைத்த்கொள்ளவும். நூறு க்ராம் வெண்ணை ஒரு பேக்கிங் டிஷ்ல் வைத்து மைக்ரோவேவ் ஒவென்ல் உருக்கி அதில் மேலே சொன்ன எல்லாவற்றையும் அதில் நன்றாக கலந்து மைக்ரோ மோடில் இருபது நிமிடம் வைத்து பின் 240 டிக்ரியில் கன்வெக்ஷன் மோடில் ஐந்து நிமிடம் வைத்து வெளியே எடுத்து டெகரேட் செய்யவும..

இந்த சுவையான வாழைப்பழ கேக் சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)

Monday, January 5, 2015

பேலியோ ஐஸ்கிரீம்




தேவையான பொருட்கள்:
பாதம் மாவு
100% இனிப்பற்ற  கோகோ பவுடர்
தூய தேங்காய் பால்
வாழைப்பழம் (இனிப்பு சுவைக்கு)

செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில், பாதம் மாவுடன், கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
* இப்போது நன்கு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து கேக் மாவு பதத்திற்கு கலக்கவும்.
* இத்துடன் தேங்காய் பாலினை கலந்து. குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் (Freeze it).
* ஐஸ்கிரீம் பதத்திற்கு வந்ததும் வெளியில் எடுத்து பரிமாறவும்.

இந்த 2015ம் ஆண்டு, சுவையான இனிப்பினை வைத்து இனிதே இந்த சமையல் ப்ளாக் ஆரம்பிக்கப்படுகிறது :)

நமக்காக இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran" அவர்களுக்கு நன்றி :)