Friday, July 31, 2015

சிக்கன் கிளியர் சூப்


தேவையான பொருட்கள்:
சிக்கன் (தோலுடன்) - இரண்டாக வெட்டியா நெஞ்சுப்பகுதி
பெரிய வெள்ளை வெங்காயம் - 1
கேரட் - 2
பார்சினிப்  - 1
செல்லரி  - 2
வெங்காயத்தாள்
மிளகுத்தூள்
உப்பு

செய்முறை: 

* ஒரு பெரிய பாத்திரத்தில்/ஸ்லோ குக்கரில் சுத்தம் செய்த சிக்கன், 1 முழு தோலுறித்த வெங்காயம், 1 முழு  கரட்,1 முழு செல்லரி, முக்கால் பாத்திரம் தண்ணீர்சேர்த்து...சிக்கன் நன்கு வேகும் வரை வேக வைக்கவும் (பத்திரத்தில் குறைந்தது 2 மணிநேரம்/ஸ்லோ குக்கரில் 7 மணிநேரம் மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்).
* பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த நீரை வடிகட்டி வைக்கவும் (இதுவே சிக்கன் ப்ரூத்). இந்நீரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேவைப்படும் போதும் பயன்டுத்தலாம்.
*  இப்போது வெந்த சிக்கனை உதிர்த்து,வெந்த வெங்காயத்தினையும் நசுக்கி (சூப்புக்கு நல்ல சுவை சேர்க்கும்), மீதாம் வேகவைக்காத கேரட் (வட்டமாக அரிந்து), நறுக்கிய செல்லரி,வெங்காயத்தாள்  சேர்த்து...இந்த நீரையும் சேர்த்து ஒரு கொதி விட்டு, உப்பு & மிளகு தூள் சேர்த்துப்  பரிமாறவும்.

இந்த சுவையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கியவர் "Mythili Thiyagu".

முருங்கைக்கீரை சூப்




தேவையான பொருட்கள்:
முருங்கக்கீரை - 1 கைப்பிடி
பூண்டு - 5-8 பல்
வெங்காயம் - 1/2
தக்காளி  - 2 பழுத்த பழம்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1இஞ்ச்
கிராம்பு  - 2
வெண்ணெய்/நெய்

அரைக்கத்  தேவையாவை: 
சீரகம்
மிளகு
சோம்பு
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய்


செய்முறை:

* ஒரு குக்கரில் வெண்ணெய்/நெய் சேர்த்து காயவைக்கவும். இதில் பட்டை,கிராம்பு தாளித்து, வெங்காயம்,பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி சேர்த்து வதக்கி, பின்பு கீரை சேர்த்து வதக்கவும்.

* இதில் அரைத்த விழுது, தக்காளி, தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி பரிமாறவும்.


இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Kavitha Sundhar" அவர்களுக்கு நன்றி.
புகைப்படம்: Mythili Thiyagu


கோவைக்காய் குழம்பு



தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்
பெரிய தக்காளி
கோவைக்காய்

தாளிக்கத் தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தூள்
வர மிளகாய் (Red Chilli) தேவைக்கேற்ப
இஞ்சி
வெந்தயம்
நெய்
கொஞ்சம் புளிக் கரைசல்

செய்முறை;

வெங்காயத்தினைப் பொடிப்பொடியாக அரியவும்
தக்காளியினை அரிந்து கொள்ளவும்.
கோவைக் காயினை நீளவாக்கில் நான்காக வெட்டவும். ( ஒரு கோவைக்காயை நான்கு தூண்களாக வெட்டவும்)
வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். தேவைக்கேற்ப சிவப்பு வற்றல், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். ( எங்கெல்லாம் வெங்காயம் வதக்குகின்றோமோ அங்கெல்லாம் உப்பு சேர்த்தால் நன்கு வேகும்). மஞ்சள் சேர்த்து வதக்கவும்
வெங்காயம் நிறம் மாற ஆரம்பிக்கும்பொழுது தக்காளி சேர்த்து வதக்கவும்.
சுருள வதங்கியதும், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது இக்கலவையை மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும்.
இப்பொழுது வாணலியில் நெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, சிறிது வெந்தயம் சேர்த்து வதக்கவும். ( எங்கெல்லாம் புளி சேர்க்கின்றோமோ அங்கெல்லாம் வெந்தயம் சேரும்பொழுது அதன் சுவை அபாரமாக அமைகின்றது)
வாசனை நன்கு வந்ததும் தூண்கள் போல் வெட்டிய கோவைக்காயை உப்பு சேர்த்து வதக்கவும்.
கோவைக்காய் பாதி வெந்தததும் புளிக் கரைசலை ஊற்றி , கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போகும்வரை வேகவிடவும்.
இப்பொழுது அரைத்து வைத்த மசாலாவினை ஊற்றி ஒரு கொதி வந்ததும்  மூடி போட்டு அடுப்பினை சிம்மில் வைத்து 8 லிருந்து 10 நிமிடங்கள் வரை க்ரேவி பதம் வரும் வரை வேகவிடவும்.

- அடுப்பினை அணைத்துவிடவும்.

இந்த சுவையான மற்றும் புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran"அவர்களுக்கு நன்றி.

Wednesday, July 15, 2015

ஹெர்பல் ஆம்லேட்



தேவையான பொருட்கள்:
முட்டை - 2
உப்பு - சிறிதளவு
மிளகுத்தூள்  - 1 டீஸ்பூன்
துளசி - 5
திருநீற்றுப் பச்சிலை - 5
தில்  (dill) - சிறிதளவு
லைம் மின்ட் (lime mint)  - 5
இத்தாலியன் துளசி (Italian basil) - 5
chives - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
Oregano/Marjoram - சிறிதளவு
ரோஸ்மேரி - சிறிதளவு
Sage - 2
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* முட்டையை உடைத்து,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
* ஆம்லெட் செய்யும் பாத்திரத்தில்,வெண்ணெய் உருக்கி, அடுப்பினை ஆப்(off) செய்யவும்.
* இப்பொழுது முக்கால் பங்கு அடித்து வைத்த முட்டையினை ஊற்றவும். இதில் அனைத்து ஹெர்பல்களையும் பொடியாக நறுக்கி தூவி, மீதம் உள்ள முட்டையினையும் மெதுவாக ஹெர்பல் மேல் சுற்றியும் ஊற்றவும் (அப்பொழுதுதான் ஹெர்பல் நடுவிலும், சுற்றிலும் முட்டையுமான ஆம்லெட் கிடைக்கும்).
* இப்போது அடுப்பை பற்ற வைத்து சிறு தீயில் முட்டையை வேகவைத்து எடுக்கவும். சூடான ஹெர்பல் ஆம்லெட் ரெடி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu



தேங்காய் பால் பன்னீர்



தேவையான பொருட்கள்:
பன்னீர்  - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
பட்டை  - 1 இஞ்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
காய்ந்த மேத்தி - சிறிதளவு
முட்டை  மசாலா  - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்  - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
* வாணலியில் எண்ணெய் காயவைத்து, பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை தாளிக்கவும்.
* இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கிய பின் முட்டை மசாலா சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும்.
* தக்காளி வெந்து மசிந்ததும், சின்னதாக நறுக்கிய பன்னீர் இத்துடன் சேர்த்து மெதுவாகக் கிளறி 5 நிமிடங்கள் வேக விடவும்.
* இப்பொழுது தேங்காய் பால் சேர்த்து 3 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிட்டு, காய்ந்த மேத்தி தூவி இறக்கவும்.

 மிகவும் அருமை ருசி.

குறிப்பு: செல்வன் ஜி குறிப்பிட்டது போல் தேங்காய்பால் எப்பவாவுது ஒருமுறை பேலியோ உணவாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி.

செய்முறை: Mythili Thiyagu





Wednesday, July 8, 2015

மணத்தக்காளி காய் காரக்குழம்பு வித் முட்டை பணியாரம்




தேவையான பொருட்கள்: 
மணத்தக்காளி காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
தக்காளி பேஸ்ட்  - 1 சின்ன கேன் (tomato puree)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள்  - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
புளித்தண்ணி  - 1 கப்
மல்லியிலை - சிறிது
உப்பு
தேங்காய்  எண்ணெய்

செய்முறை:
* ஒரு வாணலியில் எஎண்ணெய் காயவைத்து கடுகு,வெந்தயம் பொரிய விடவும். இத்துடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
* இவைகள்  பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம்,பச்ச மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
*  இத்துடன் மணத்தக்காளி காய் சேர்த்து நன்கு வதக்கவும் (காய்கள் வெள்ளை நிறம் வரும்வரை வதக்கவும். அப்போதுதான் கசப்பு இருக்காது)
* இத்துடன் மேலே கூரிய அனைத்து பொடிகளையும் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை  கிளறவும்.
* இப்பொழுது தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கி,புளித்தண்ணீர் & 1/2 கப் தண்ணீர் சேர்த்து.. உப்பு தூவி வேகவிடவும்.
*  நன்கு கொதித்ததும் மல்லியிலை தூவி இறக்கவும்.
* இதனை காலிப்பிளவர் ரைஸ்,முட்டைபணியாரம் போன்றவைகளுடம் சேர்த்து சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu




முருங்கைகாய் மல்லிதழை சூப்



செய்முறை:

முருங்கைகாய் 3/4 பதம் வேகவைத்து, ஆறியதும் உள் கதுப்பை வழித்து வைத்து கொள்ளவும், தக்காளி, வொங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் இந்த நான்கையும் வேக வைத்து முருங்கை கதுப்பையும் சேர்த்து அரைத்து கொள்ளவும், மீண்டும் அரைத்ததை பாத்திரத்தில் விட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும்,இதில் மஞ்சள் பொடி1/4டீஸ்புன்,சிரகத் துள் 1/2 டீஸ்புன்,வெந்தய தூள் 1சிட்டிகை சேர்த்து, தேங்காய்+ அரைகட்டு மல்லிதழை சேர்த்து நன்கு அரைத்து சூப்பில் கலந்தவுடன் அடுப்பை அனைக்கவும், பின் மிளகு துள், எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். இந்த முறை தாளிக்கவில்லை.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Viji Mali" அவர்களுக்கு நன்றி :).

கற்றாழை சூப்





தேவையான பொருட்கள்:
எருமைக்கறிதுண்டுகள்: 600 கிராம்
கற்றாழை இலைகள்; 2 (முள்ளை நன்றாக செதுக்கி எடுக்கவேண்டும்)
தக்காளி: 1
நறுக்கிய பெரிய வெங்காயம்: 1/2
பூண்டு: 2
வெஜிட்டபிள் ப்ராத்
மசாலாபொடிகள்:
தாய் ரெட் கர்ரி பேஸ்ட்- 5 ஸ்பூன்
உப்பு- 2 ஸ்பூன்

செய்முறை:
* இறைச்சியை ஸ்லோகுக்கரில் நறுக்கி போடவேண்டும்.இறைச்சி மேலே தாய் ரெட் கர்ரி போடவேண்டும்.இறைச்சி மூழ்கும் அளவு வெஜிட்டபிள் ப்ராத் ஊற்றவேண்டும்.நறுக்கிய கற்றாழை இலையை மேலே போடவேண்டும்.தக்காளி வெங்காயம் போட்டு, உப்பை போட்டு மூடி ஐந்து மணிநேரம் லோ செட்டிங்க்ஸில் வேகவிடவேண்டும்
சுவை:
கற்றாழை வெண்டைக்காய் பாணியில் வழு, வழு என இருக்கிறது. ஆனால் இதில் சுவை என்பதேதுமில்லை. பிளான்ட் ஆக இருக்கிறது

தக்காளி ஜூஸ் ஆகி, கற்ராழை, தாய் கர்ரி எல்லாம் தாண்டி இரைச்சியில் இறங்கும் பாருங்கள்அதான் தெய்வீகம்ஐந்து மணிநேரம் தக்காளி ஜூஸிலும், ரெட் கர்ரியிலும் வெந்த எருமைஇறைச்சியை உண்பது பரமானந்தம்.

இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

தேங்காய் பால் ஆட்டுக்கறி



தேவையான பொருட்கள்:
1/2 கிலோ ஆட்டிறைச்சி - மஞ்சள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்தது....(சூப் தனியாக எடுத்து குடிக்கலாம்
தேங்காய் எண்ணெய்
சீரகம்
சோம்பு
சின்ன வெங்காயம் -  ஒரு கை
பச்சைமிளகாய் - 2
கரம்மசாலா பொடி
மல்லி பொடி
தேங்காய்ப்பால் 1/2 -1 கப்

அறைக்க: 
சிறிது சின்ன வெங்காயம்
பச்சைமிளகாய் 1-2
முந்திரிபருப்பு - 4-5 
கசகசா  

செய்முறை:
* நான்ஸடிக் பாத்திரம் நன்று- எண்ணெய் சூடான பின் சீரகம், சோம்பு, கரம்மசாலா வனக்கவும், சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் அரிந்ததை போடவும், உப்பு தேவையான அளவு சேர்க்கவும், பின் அறைத்துவைத்த மிக்ஸை சேர்த்து வதக்கவும், மல்லி பொடி சேர்க்கவும், நன்றாக தலதல என வனங்கிவரும்போது வேகவைத்த ஆட்டிறைச்சியை சேர்க்கவும், மூடிவைத்து 5 நிமிடம் களித்து தேங்காய்ப்பால் சேர்க்கவும், சிம்மரில் 5-10 நிமிடம் வேகவைத்தால்...கதம் கதம்...(மனத்துக்கு சிறிது நெய் விடலாம்)


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Suresh Kumar" அவர்களுக்கு நன்றி :)