தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி காய் - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது
தக்காளி பேஸ்ட் - 1 சின்ன கேன் (tomato puree)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
புளித்தண்ணி - 1 கப்
மல்லியிலை - சிறிது
உப்பு
தேங்காய் எண்ணெய்
செய்முறை:
* ஒரு வாணலியில் எஎண்ணெய் காயவைத்து கடுகு,வெந்தயம் பொரிய விடவும். இத்துடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
* இவைகள் பொரிந்ததும் நறுக்கி வைத்த வெங்காயம்,பச்ச மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* இத்துடன் மணத்தக்காளி காய் சேர்த்து நன்கு வதக்கவும் (காய்கள் வெள்ளை நிறம் வரும்வரை வதக்கவும். அப்போதுதான் கசப்பு இருக்காது)
* இத்துடன் மேலே கூரிய அனைத்து பொடிகளையும் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை கிளறவும்.
* இப்பொழுது தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கி,புளித்தண்ணீர் & 1/2 கப் தண்ணீர் சேர்த்து.. உப்பு தூவி வேகவிடவும்.
* நன்கு கொதித்ததும் மல்லியிலை தூவி இறக்கவும்.
* இதனை காலிப்பிளவர் ரைஸ்,முட்டைபணியாரம் போன்றவைகளுடம் சேர்த்து சாப்பிடலாம்.
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
Puli is not in paleo nah ?
ReplyDelete