Showing posts with label சைவ உணவு. Show all posts
Showing posts with label சைவ உணவு. Show all posts

Sunday, December 27, 2015

Panner with home made sauce




ஸாஸ் செய்ய தேவையான பொருட்கள்: 
மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் -  1/4 கப்
வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  - 2 கப்  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் - 2 சிறிய டின் 
கீறிய பச்சை மிளகாய் - 4 
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல் 
வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை ( விருப்பம் இருந்தால்) - 4 இலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன் 
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
வெண்ணை  - 1 ஸ்பூன்  


செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு தாளிக்கவும். இத்துடன் வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்
* சிறிது வதக்கிய பின் வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் (வரமிளகாயினை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊரவைத்து, பூண்டு சேர்த்து கண் மை போல அரைக்கவும்) விழுது சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய்த் தூள்,மல்லித்தூள்,கறி மசால் தூள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்
* இப்பொழுது வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி  அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்று கலக்கவும்.
* இதில் உப்புத்தூவி, தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.


பனீர் வித் சாஸ்:
* ஒரு கடாயில் வெண்ணெய் விட்டுக்காய்ந்ததும், பனீர் துண்டுகளை இருபுறமும் வேக வைக்கவும்.
* இத்துடன் மேலே குறிப்பிட்ட சாஸ் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு 





காலிஃப்ளவர் சுக்கா:





தேவையான பொருட்கள்;-
காலிஃப்ளவர் – அரைக்கிலோ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – ஒரு கைப்பிடி

செய்முறை:
* காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும்.
கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வடிகட்டி விடவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற விடவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.காலிஃப்ளவர் துண்டுகள் சேர்க்கவும்.
* நன்கு பிரட்டி விடவும். மேற்குறிப்பிட்ட மசாலா பொருட்கள் மிளகாய்த்தூள், மிளகு,சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்க்கவும். பிரட்டி விட்டி சிறிது தண்ணீர் தெளிக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். அடுப்பை குறைத்து வைக்கவும். உப்பு சிறிது சேர்த்து, சரி பார்க்கவும்.
* மசாலா வாடை நன்கு அடங்கி காலிஃப்ளவர் சுருண்டு வர வேண்டும். நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டு விடவும். அடுப்பை அணைக்கவும்.

குறிப்பு: இதே போல் சிக்கன், பனீர் மற்றும் பேலியோ காய்கறிகளில் முயற்சிக்கலாம்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar" அவர்களுக்கு நன்றி. 

பேக்ட் காலிஃப்ளவர்:




தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் துண்டுகள் – 3 கப்
ஆலிவ் ஆயில் – 1 +1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
தட்டிய பூண்டு பற்கள் - 6
மிளகுத்தூள் –1 - 2 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்
மொசரல்லா அல்லது செடார் சீஸ் – 1/2 -1 கப் ( விருப்பமான அளவு)
விருப்பமான ஹெர்ப்ஸ் ( சீஸ் மேல் தூவ)
உப்பு – தேவைக்கு.


செய்முறை:
* நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு மூடி விடவும். அடுப்பை அணைக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
* இதனை ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சூடு செய்து, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கி காளிஃப்ளவர் சேர்த்து சிறிது பிரட்டி உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை ஜூஸ் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.
* ஓவனை முற்சூடு செய்யவும். ஒரு ஓவன் சேஃப் பவுலில் ஆலிவ் எண்ணெயை தடவவும். அதில் வதக்கிய காளிஃப்ளவரை வைக்கவும். துருவிய சீஸ் மேலே தூவவும்.
விரும்பினால் மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் மேலே தூவி மீடியம் வெப்பநிலையில் பேக் செய்து எடுக்கவும். மேலே தூவிய சீஸ் உருகி லேசாக சிவற ஆரம்பிக்கும் பொழுது ஓவனை அணைக்கவும்.


இந்த சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar " அவர்களுக்கு நன்றி. 

காலிபிளவர் மலாய் கபாப்





தேவையான பொருட்கள்:

காலிபிளவர் 1 நடுத்தரளவு

பாகம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன்

பாகம் 2
ப்ரெஷ் க்ரீம் 1/4 கப்
தயிர் 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் கொத்தமல்லிதழை விழுது 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவைக்கு

செய்முறை:
*காலிபிளவரை நடுத்தர பூக்களாக எடுத்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடங்கள் போட்டு நீரை வடிக்கவும்.
*பாகம் 1 ல் கொடுத்துள்ள பொருட்களை காலிபிளவரை கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் பாகம் 2ல் கொடுத்துள்ள பொருட்களை அதனுடன் கலந்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*முற்சூடு செய்த அவனில் 210°C ல் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு

குறிப்பு: இதே போல் சிக்கன் மற்றும் பனீரில் செய்யலாம்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ  சமையல் குறிப்பினை வழங்கிய "Menaga Sathia" அவர்களுக்கு நன்றி. 

சில்லி கார்லிக் காலிஃப்ளவர்





தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - அரைக்கிலோ
மஞ்சள் தூள்
உப்பு.

மசாலா அரைக்க:
பழுத்த மிளகாய் – 3
பூண்டு – 5 – 6 பற்கள்
பெரிய வெங்காயம் – 1
பெரிய தக்காளி – 1
தேவைக்கு – உப்பு சிறிது.
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - 1- 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்து கொதிக்கும் நீரில்,மஞ்சள் உப்பு போட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் .பின்பு வடிகட்டி எடுக்கவும்.
காலிஃப்ளவரை அரைத்த மசாலாவில் பிரட்டி வைக்கவும். விருப்பப்பட்டால் ஒரு துளி ஆரஞ்ச் ரெட் கலர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கருவேப்பிலை போடவும், அத்துடன் மசாலா கலந்த காலிஃப்ளவரை சேர்த்து வதக்கவும்.
நன்கு காலிஃப்ளவரில் மசாலா சேர்ந்து பிரட்டினாற் போல் வரவேண்டும் .10 நிமிடம் நேரம் கூட ஆகலாம்.
சுவையான சில்லி கார்லிக் காலிஃப்ளவர் ரெடி.

இந்த சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Asiya Omar" அவர்களுக்கு நன்றி. 

Saturday, October 24, 2015

பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை/Panch Phoron with Stir Fry Vegetables




தேவையான பொருட்கள்:

காய்கறிகள்
காலிப்ளவர்
கோவைக்காய்
புரோக்கோலி
கேரட்
கத்திரிக்காய்
சிவப்பு குடமிளகாய்
எல்லாம் சேர்த்து – அரை கிலோ
உப்பு

தாளிக்க:
நல்லெண்ணை – 2 மேசை கரண்டி
பஞ்ச பூரன் - (கருஞ்சீரகம், சோம்பு, கடுகு, சீரகம், வெந்தயம்) - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
பச்சமிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது

செய்முறை:
* காய்கறிகளை அரிந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கருகாமல் தாளித்து காய்களை சேர்த்து நன்கு வதக்கி தீயின் தனலை குறைவாக வைத்து சிம்மில் அனைத்துகாய்களையும் வேகவிட்டு கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
* கவனிக்க :குஜராத் பெங்காலிகள் சமையலில் இந்த 5 வகை அஞ்சறை பெட்டி பொருட்கள் இல்லாமல் சமையல் கிடையாது. இதை( கருஞ்சீரகம், சோம்பு, கடுகு , சீரகம், வெந்தயம்) சம அளவில் கலந்து வைத்து கொண்டால் காய் வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

இந்த சுவையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலா கமால்" அவர்களுக்கு நன்றி. 

காலிப்ளவர் தயிர் சாதம்




தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் – 150 கிராம்
தயிர் – 75 மில்லி
பால் - 50 மில்லி

தாளிக்க
நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
பூண்டு – ஒரு பல் பொடியாக அரிந்தது
பெருங்காயப்பொடி – அரை சிட்டிக்கை
கருவேப்பிலை – சிறிது
முந்திரி – பொடியாக அரிந்தது ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் – பொடியாக அரிந்தது ஒன்று
இஞ்சி துருவியது – அரைதேக்கரண்டி

செய்முறை:
* காலிப்ளவரை சிறிய பூவாக துருவி , வெண்ணிரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து காலிப்ளவரையும் சேர்த்து கொதிக்க விட்டு வெந்து வடிக்கட்டவும்.
* ஒரு வாயகன்ற சட்டியை அடிப்பில் வைத்து அதில் நெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வதக்கி தயிரையும் பாலையும் சேர்த்து தேவைக்கு உப்பு தூவி கொத்தி விட்டு நன்கு கிளறி இரக்கவும்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Jaleela Kamal" அவர்களுக்கு நன்றி.




கிரில்ட் மிக்ஸட் வெஜ்டேபுள்



தேவையான பொருட்கள்: 
காய் கறிகள்
காலிப்ளவர்
கத்திரிக்காய்
ஜுக்கினி
கேரட்
சிவப்பு குடமிளகாய்
பச்சை குடமிளகாய்
கோவைக்காய்
புடலங்காய்


* எல்லாம் சேர்ந்தது முக்கால் கிலோ
* ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மிளகு தூள், இரண்டு மேசைகரண்டி எலுமிச்சை சாறு, உப்பு ஒரு தேக்கரண்டி, ஆச்சி கபாப் மசாலா ஒரு தேக்கரண்டி., கார்லிக் பட்டர் (அ ) ஆலிவ் ஆயில் 2 மேசைரண்டி

செய்முறை:
* காய் கறிகளை அரிந்து கழுவி மேலே கொடுக்கப்பட்டுள்ள மசலாக்களை சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* 300 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
* ஓவன் இல்லாதவர்கள் ஒரு நான்ஸ்டிக் தவ்வாவில் குறைவான தீயில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
* காய்கறிகள் மேலே உள்ள காய்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்களும் சேர்த்துகொள்ளலாம்.


இந்த சுவையான,  ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலா கமால்" அவர்களுக்கு நன்றி. 

தம் காலிப்ளவர்



தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் – கால் கிலோ
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

தாளிக்க:
நெய் அல்லது தேங்காய் எண்ணை – இரண்டு ஸ்பூன்
சீரகம் – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பூண்டு – ஒரு பல் பொடியாக அரிந்தது
கரம்மசாலா தூள் – கால் தேக்கரண்டி ( பட்டை, கிராம்பு, ஏலம்)

செய்முறை:
* காலிப்ளவரை பூக்களாக பிரித்து வெண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அலசி எடுகக்வும்,.
* ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து காலிப்ளவர் சேர்த்து சிறிது வதக்கி 5 நிமிடம் வேகவிடவும்.
* பிறகு மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது கரம்மசாலா தூவி கிளறி முடிபோட்டு சிறு தீயில் தம்மில் 10 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலா கமால்" அவர்களுக்கு நன்றி. 

Tuesday, September 29, 2015

ஸ்டப்டு வெண்டைக்காய்





தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -500கிராம்
வெங்காயம் - 1 பெரியது
 பூண்டு- 4 சிறிய பற்கள்
தேங்காய் - 4 துண்டு
எழுமிச்சை சாறு - பாதி பழம்
மிளகாய் பொடி - 1/2 tsp 
சீரக பொடி - 1/4 tsp 
மஞ்சள் பொடி - 1/2 tsp

செய்முறை:
* வெங்காயம்,பூண்டை அரைத்து கொள்ளவும்
*  தேங்காய் துருவி கொள்ளவும்.
*  ஒரு காடாயில் மிதமான சூட்டில் 1tsp தேங்காய் எண்ணெயில், துறுவிய தேங்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி, மசாலா பொடிகளை உடனடியாக சேர்த்து லேசாக வதக்கவும்
இதனுடன் அரைத்த வெங்காயம்,பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வேக விட்டு கடைசியாக எழுமிச்சை சாறு பிழிந்து அடுப்பை அனைத்து விடவும்
தேங்காய் பொன்னிறம் ஆவதற்கு முன் அனைத்தையும் விரைவாக கலந்து இறக்கி விடவும்
வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து ஒரு பக்கம் மட்டும் கீறவும்
வதக்கிய கலவையை வெண்டைக்காய் உடையாமல் ஸ்டப் செய்யவும்
ஒரு காடாயில் ஸ்டப் செய்த வெண்டைக்காய்களை தேவையான அளவு தேங்காய் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் வேகும் வரை வதக்கி இறக்கவும்.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Faulin Diana" அவர்களுக்கு நன்றி.

தமிழாக்கம்: Lakshmi Mani அவர்களுக்கு நன்றி. 

ஸ்டஃப்ட் ஒபர்ஜீன்




தேவையான பொருட்கள் & செய்முறை: 

* பெரிய கத்திரிக்காய் , இரண்டாக வெட்டி உள்ளே இருக்கும் பல்ப்(Pulp) ஸ்கூப் செய்து எடுத்து மேல் தோலில் உப்பு ப்ளஸ் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி பேகிங் ஓவன்ல் பத்து நிமிடம் பேக் செய்யவும்
* ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் , மற்றும் ஸ்கூப் செய்து எடுத்த பல்ப் , துருவிய பன்னீர் காரத்திர்க்கு தேவையான பச்சை மிளகாய் , கொஞ்சம் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளவேண்டும் ..
* பேக் செய்த கத்திரிக்காவில் இந்த ஃபில்லிங் வைத்து மேலே துருவிய சீஸ் சேர்த்து மீண்டும் ஓவன்ல் ஒரு பத்து நிமிடம் பேக் மோட்ல் வைத்து பின் டாப் ப்ரவ்னின் மோட்ல் ஒரு ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும் ..
* மைக்ரோ ஓவன்ல கன்வெக்ஷன் மோட்ல் இதை செய்யலாம் ...
இந்த புதுமையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி.

காலிப்ளவர் தக்காளி சாதம்



 தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் பூ - 200 கிராம்
தேங்காய் எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு
கருவேப்பிலை
பூண்டு
முந்திரி - 3 ( தேவைபட்டால்)
பழுத்த தக்காளி 2
சாம்பார் பொடி - ஒருதேக்கரண்டி
உப்பு தேவைக்கு

செய்முறை:
* காலிப்ளவர் பூவை வெண்ணீரை கொதிக்க விட்டு அதில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டவும்/
* தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி கூட்டு பதம் ஆகும் வரை வேக விடவும்.
* கடைசியாக வடித்து வைத்த காலிப்ளவரை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் சிம்மில் வேக விட்டு இரக்கவும்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய Chef "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி. 

Monday, September 7, 2015

Stuffed குடை மிளகாய்



தேவையான பொருட்கள்:
வெங்காயம் குடை மிளகாய் 
காரட் 
காலிபிளவர் 
பன்னீர் 
பூண்டு 
மிளகு தூள் 
பூண்டு பொடி 
சில்லி ப்ளேஸ் 
ஆரிகானோ(Oregano) 
சீஸ் வெண்ணெய் 

செய்முறை: 
* வெங்காயம், குடை மிளகாய், காரட், காலிபிளவர் மற்றும் பூண்டை வெண்ணெயில் வதக்கி, உப்பு, மிளகு தூள், பூண்டு பொடி, சில்லி ப்ளேஸ், ஆரிகானோ(Oregano) மற்றும் பன்னீர் க்யூப் சேர்த்து நன்கு கலந்து விடவும். 
* வதங்கிய காய்களை குடை மிளகாயில் வைத்து அதன் மேல் சீஸ், மிளகு தூள் போடவும். குடை மிளகாயில் வெண்ணை தடவி பேக்(bake) செய்யவும்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி.

இந்த பதிவினை தமிழாக்கம் செய்து வழங்கிய "Shan Mani" அவர்களுக்கும் நன்றி.

அவகோடா தேங்காய் சட்னி





Avocado Dip for Grill Item

தேவையான பொருட்கள்:
அவகோடா பழம் - 1
தேங்காய் துருவியது – கால் கப்
பச்சமிளகாய் -1
இஞ்சி - சிறிய துண்டு
கொத்துமல்லி கருவேப்பிலை – அரை கப்
லெமன் சாறு – ஒரு மேசைகரண்டி
பாதாம் - 15

செய்முறை:
* கொத்துமல்லி கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பாதாம் பருப்பை வெண்ணீரில் ஊறவைத்து தொலெடுத்து கொள்ளவும்.
அவகோடா பழத்தை கொட்டை மற்றும் தோலை எடுத்து விட்டுசேர்க்கவும்.
* மிக்சியில் பாதாம், அவகோடா, இஞ்சி, கொத்துமல்லி கருவேப்பிலை, உப்பு , பச்சமிளகாய், தேஙகாய் சேர்த்து அரைக்கவும் கடைசியாக லெமன் சாறு கலந்து ஒரு திருப்பு திருப்பி எடுக்கவும்.

கவனிக்க:
இது பேலியோ கட்லெட், வடை,பேன்கேக், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்ற கிரில் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.

காரம் அதிகம் விரும்புவோர் பச்சமிளகாய் இரண்டாக போட்டு கொள்ளலாம். நான் காரம் அதிகம் எடுக்க மாட்டேன்.

இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.

காலிப்ளவர் தேங்காய் சாதம்





தேவையான பொருட்கள்:
துருவிய காலிஃப்ளவர் – கால் கிலோ
தேங்காய் – அரை கப் (100 கிராம்)

தாளிக்க:
நெய் – 1 மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
பூண்டு – இரண்டு பல்
பச்சமிளகாய் – ஒன்று
காஞ்சமிளகாய் – ஒன்று
கொத்துமல்லி தழை – சிறிது

செய்முறை:
* காலிப்ளவரை துருவி வெண்ணீரில் உப்பு போட்டு இரண்டு கொதி கொதிக்க விட்டு தண்ணீரை வடிக்கவும்.
* ஒரு வாயகன்ற வானலியில் தாளிக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி காலிஃப்ளவர் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு கை தண்ணீ தெளித்து வதக்கி முடிபோட்டு 3 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.
* கடைசியாக சிறிது கொத்துமல்லி தழை மற்றும் ப்ரஷ் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடவும்.

குறிப்பு: இதற்கு தொட்டுக்கொள்ள பேலியோ மீன் குழம்பு, தந்தூரி மீன் கிரில், அவகோடா சட்னி..
மதிய உணவிற்கு மீல் ரெடி



இந்த அருமையான,ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலாகமால்" அவர்களுக்கு நன்றி.



Sunday, September 6, 2015

பாதாம் குழி பணியாரம்


தேவையான பொருட்கள்:-
பாதாம் பவுடர் :- 1 கப்
தயிர் - 1/4 கப்
பால் - 1/4 கப்
சால்ட் - தேவையான அளவு
வெங்காயம் - 1 no பெரியது (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 1 no
கடுகு - 1/2 ஸ்பூன்
ஆலீவ் எண்ணெய் - 1 மேஜை கரண்டி
கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை - தேவையான அளவு பொடியாக நறுக்கி கொள்ளவும்


செய்முறை:-
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை கலந்து தாளிக்கவும். ஒரு பாத்திரத்தில், பாதாம் பவுடர், தயிர், பால், பணியாற பதத்திற்கு கலந்து கொள்ளவும். தாளித்த பொருட்களை ஆரிய பின் கலந்து வைத்திருக்கும் மாவுடன் கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து பனியார கல்லில் இட்டு எடுத்தால், சுவையான பாதாம் குழி பணியாரம் தயார்!!

பிடித்த சட்னி உடன் சாப்பிடலாம்!!

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK"அவர்களுக்கு நன்றி. 

Monday, August 24, 2015

காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்



தேவையான் பொருட்கள்:
காலிஃப்ளவர் துருவி பிழிந்தது - 300 கிராம்
சிகப்பு மிளகாய்- 1 (மிகுந்த காரம் உள்ளது)
பச்சை மிளகாய்- 1
ஸ்பிரிங் ஆனியன் - 4 செடி (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு துண்டு குச்சி குச்சியாக நறுக்கியது
பூண்டு- 2 பல் குச்சி குச்சியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சால்ட்- தேவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன் அல்லது விருப்பம் போல்

செய்முறை:
* ஃப்ரை பேனில் தேங்காய் எண்ணெய்யை விட்டு நறுக்கி வைத்து இருக்கும் ஸ்பிரிங் ஆனியனில் பாதியை போட்டு வதக்கவும் பின்பு இஞ்சி, பூண்டு தொடர்ச்சியாக மிளகாய்களை போட்டு மிளகாய் சாஃப்ட் ஆகும் வரை வதக்கவும். 
* பின்பு பிழிந்து வைத்து இருக்கும் காலிஃப்ளவர் துருவலை போட்டு உப்பு சேர்த்து லைட் ஆக ப்ரவுன் ஆகும் வரை அல்லது காலிஃப்ளவர் வேகும் வரை வதக்கவும். 
* காலிஃப்ளவர் வெந்ததும் மீதம் இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் கொத்துமல்லி இலையை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பிரிட்டனின் புகழ் பெற்ற செஃப் ஜேமி ஆலீவரின் (Jame Oliver) சமையல் குறிப்பு.
விருப்பம் உள்ளவர்கள் இதில் கேரட் மற்றும் காப்சிகம் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். (நான் சேர்த்து இருக்கேன்)

இந்த புதுமையான,சுவையான & ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி.

சைவம் - காலிப்ளவர் சூப்






தேவையான பொருட்கள் :
காலிப்ளவர்- 100gm
பெ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 3 பல்
சீரகம் - 1 tsp
மிளகு - 1 tsp
தேங்காய் எண்ணெய் - 2 tbsp
கொத்தமல்லி தூள் - 1/2 tsp


செய்முறை:
* கடாயில் தேங்காய் எண்ணெய் காயவைத்து , சீரகம், பெ வெங்காயம் போட்டு வணக்கவும். பின் காலிப்ளவர் சேர்த்து சிறுது வணக்கிய பின் இஞ்சி, பூண்டு, மிளகு சேர்த்து , இவை அனைத்தும் மூழ்கும் வரை தண்ணீர் வூற்றி வேகவைக்கவும். 
* சிறுது ஆரிய பின் தண்ணீரோடு mixi யில் grind செய்து பரிமாறவும்.

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "கீழைராஜா" அவர்களுக்கு நன்றி.

இந்த சமையல் குறிப்பினை முயற்சித்துப்  புகைப்படம் அனுப்பிய "Sumi Venkat" அவர்களுக்கும் நன்றி.

காலிபிளவர் வெண்பொங்கல்




தேவையான பொருட்கள்:
காலிபிளவர்
முந்திரி
மிளகு
சீரகம்
தேங்காய் துருவல்
கறிவேப்பிலை
உப்பு

செய்முறை:
* காலிபிளவர் வெந்நீரில் போட்டு எடுத்து துருவிக் கொள்ளவும்.
* முந்திரி பருப்பு நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் நெய்யில் வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். 
* தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து காலிபிளவர் துருவலோடு அனைத்தையும் சேர்த்து கலந்தால் பொங்கல் தயார்.

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)


Wednesday, August 19, 2015

அவகாடோ சால்சா





தேவையான பொருட்கள்:
அவகாடோ பழம் - 2
தக்காளி -1
பெரிய வெங்காயம்- 1
எலுமிச்சம்பழம் -1
சால்ட் & பெப்பர்- தேவைக்கு ஏற்ப
ஜலபினோ மிளகாய்- 3 துண்டு
(பச்சை மிளகாயும் சேர்க்கலாம்)
ஆலீவ் ஆயில்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிது

செய்முறை:
* அவகாடோ, தக்காளி, வெங்காயம், ஜலபீனோ எல்லாவற்றையும் துண்டாக கட் பண்ணி எலுமிச்சை ஜூஸ், ஆலீவ் ஆயில், சால்ட் & பெப்பர் கலந்து அப்படியே சாப்பிடலாம்.
* அதை மிக்சியில் போட்டு அரைத்து வெள்ளரி, கேரட், செலரி, காப்சிகம் ஆகிய காய்கறிகளுடம் டிப் ஆகவும் சாப்பிடலாம். 3 நாட்கள் ஃப்ரிஜில் வைத்து இருக்கலாம்..... மீதம் இருந்தால்..!!

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)