Monday, August 24, 2015

காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்



தேவையான் பொருட்கள்:
காலிஃப்ளவர் துருவி பிழிந்தது - 300 கிராம்
சிகப்பு மிளகாய்- 1 (மிகுந்த காரம் உள்ளது)
பச்சை மிளகாய்- 1
ஸ்பிரிங் ஆனியன் - 4 செடி (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு துண்டு குச்சி குச்சியாக நறுக்கியது
பூண்டு- 2 பல் குச்சி குச்சியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சால்ட்- தேவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன் அல்லது விருப்பம் போல்

செய்முறை:
* ஃப்ரை பேனில் தேங்காய் எண்ணெய்யை விட்டு நறுக்கி வைத்து இருக்கும் ஸ்பிரிங் ஆனியனில் பாதியை போட்டு வதக்கவும் பின்பு இஞ்சி, பூண்டு தொடர்ச்சியாக மிளகாய்களை போட்டு மிளகாய் சாஃப்ட் ஆகும் வரை வதக்கவும். 
* பின்பு பிழிந்து வைத்து இருக்கும் காலிஃப்ளவர் துருவலை போட்டு உப்பு சேர்த்து லைட் ஆக ப்ரவுன் ஆகும் வரை அல்லது காலிஃப்ளவர் வேகும் வரை வதக்கவும். 
* காலிஃப்ளவர் வெந்ததும் மீதம் இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் கொத்துமல்லி இலையை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பிரிட்டனின் புகழ் பெற்ற செஃப் ஜேமி ஆலீவரின் (Jame Oliver) சமையல் குறிப்பு.
விருப்பம் உள்ளவர்கள் இதில் கேரட் மற்றும் காப்சிகம் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். (நான் சேர்த்து இருக்கேன்)

இந்த புதுமையான,சுவையான & ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி.

No comments:

Post a Comment