Saturday, August 1, 2015

பட்டேல் ஸ்டைல் மட்டன்



தேவையான பொருட்கள்: 
மட்டன் - 1/2 கிலோ
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தக்காளி பேஸ்ட் (அ) அரைத்த தக்காளி - 1/2 கப் (அ) நறுக்கிய பழுத்த தக்காளி பழம் - 1
தேங்காய் எண்ணெய் & வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க:
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
பூண்டு  - 5 பல்
இஞ்சி - 1 இஞ்ச்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
* ஒரு குக்கரில் வறுத்து அரைக்கக் குடுத்த அனைத்தையும் தேவையான தேங்காய் எண்ணையில் வதக்கிக்கொள்ளவும் (சிறிது வதக்கினால் போதும்). இதனை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
* அதே குக்கரில் வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும், அதில் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை வதக்கவும்.
* பின்பு மிளகாய்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து, பொடிகளின் பச்ச வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் பிறிந்து வரும்.
* இப்பொழுது அரைத்த விழுது சேர்த்து சிறிது வதக்கவும்.
* தக்காளி பேஸ்ட் (அ) அரைத்த தக்காளி - 1/2 கப் (அ) நறுக்கிய பழுத்த தக்காளி பழம், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து குக்கர் மூடிவைத்து 25 நிமிடங்கள் அல்லது 8 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
* விசில் அடங்கியதும், அடுப்பை பெரும் தீயில் வைத்து, சுருண்டு புகைப்படத்தில் உள்ளது போல் வரும் வரை  வறுத்து  (தீயாமல் பார்த்துக்கொள்ளவும்) சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: முட்டை பணியாரம்,முட்டை ஆம்லெட்,பேலியோ ப்ரட்,பேலியோ ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ள வேண்டுமெனில், தண்ணீர் கொஞ்சம் அதிகம் விட்டு 8 விசில் வந்ததும் அடுப்பை அனைத்து மல்லி தூவி பரிமாறவும்.

இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கியவர் "Mythili Thiyagu".









No comments:

Post a Comment