Saturday, March 21, 2015

Goat Fry




தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 20
ராம்நாடு  குண்டு மிளகாய் - 10
நறுக்கிய தக்காளி - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
தட்டிய இஞ்சி  - 1"
தட்டிய பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கொத்தமல்லி இலை  - கொஞ்சம்
தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை காயவைத்து,சோம்பு பொரிய விடவும்.
* இத்துடன் தட்டிய இஞ்சி வதக்கி, தட்டிய பூண்டினையும் சேர்த்து வதக்கவும். பின்பு ராம்நாடு குண்டு மிளகாய் 5 சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய  பாதி சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, ஆட்டுக்கறி சேர்த்து கிளறவும்.
* இத்துடன் தக்காளி  சேர்த்து கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் (கொஞ்சம் தண்ணீர் மட்டும்  சேர்த்தால் போதும்). உப்பு சேர்த்து, குக்கர் மூடி போட்டு 8 - 10 விசில் விடவும்.
* ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணை காயவைத்து, முதலில் 5 ராம்நாடு குண்டுமிளைகாய் கில்லி போட்டு வதக்கவும்,பின் கறிவேப்பிலை தாளிக்கவும்.
* இப்போது நறுக்கிய மீதி வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
*  இத்துடன் வெந்த கறியையும் சேர்த்து நன்கு புகைப்படத்தில் உள்ள பதத்திற்கு வறுக்கவும்.
ஆட்டுக்கறி பிரை ரெடி :)


சமையல் குறிப்பு: Mythili Thiyagu

Sunday, March 15, 2015

தேங்காய் பால் முட்டை கறி


தேவையான பொருட்கள்:

  வேகவைத்த முட்டை  2,  சீரகம் ஒரு ஸ்பூன் 
               ஒரு மூடி தேங்காய் அரைத்து எடுத்த பால் ..இரண்டு முறை எடுத்து தனி தனியாக வைக்கவும் .

ஓர் வெங்காயம் , நான்கு பல் பூண்டு , ஒரு துண்டு இஞ்சி , பட்டை ஒரு துண்டு , கசகசா ஒரு ஸ்பூன் , பச்சை மிளகாய் இரண்டு ..இவை அனைத்தையும் விழுதாக அரைக்கவும் .

தேங்காய் எண்ணெய்  இரண்டு ஸ்பூன் , நறுக்கிய வெங்காயம் ஒன்று 

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் சீரகம் தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கி அதில் அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை மணம் போகும்வரை வதக்கி பின் அதில் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து அதில் வேகவைத்த முட்டை உப்பு சேர்த்து கொதித்தவுடன் அதில் முதலாம் தேங்காய் பால் விட்டு ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்து இறக்கிவிடவும் 
..கொத்தமல்லி தூவி சைட் டிஷ் ஆகவோ அல்லது காலிஃபிளவர் ரைஸ் உடனோ சேர்த்து சாப்பிடலாம்


இந்த சுவையான,அசத்தலான சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)




பன்னீர் மஞ்சூரியன்



தேவையானவை பொருட்கள்:
பன்னீர்-100g (cubes) 
வெங்காயம் பெரியது-1
கேரட் துருவியது- 1 கையளவு 
காப்சிகம் -1
கெட்டி தயிர்-50ml

செய்முறை:
* தயிர் கெட்டியாக இருப்பது அவசியம்.கெட்டி தயிர் கிடைகவில்லையெனில் ஒரு வெள்ளை துணி அல்லது மஸ்லின் பேப்பர் மூலம் வடிகட்டி கொள்ளவும்
* ஒரு பாத்திரத்தில் இந்த தயிறுடன் மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,உப்பு  போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
* பின் சின்ன சின்னதாய் கட் பண்ணின வெங்காயத்தில் பாதி,காப்சிகம்,கேரட் போட்டு மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம்  ஊற வைக்கவும்   

* பின் ஒரு தவாவில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு தாளித்ததும் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும். பின் பன்னீர் மிக்ஸ் அதில் போட்டு நன்றாக வேகவிடவும்.அவ்வப்போது கிளறி விடவும்.
* இப்போது சிறிது மஞ்சள் பொடி,கரம் மசாலா தூவி கிளறவும்.பன்னீர் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்
* காரம்  கொஞ்சம் ஜாஸ்தி போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.விருப்பபட்டால் சிறிது லெமன் பிழிந்து விடலாம்


இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai" அவர்களுக்கு நன்றி :)

காளான் சூப்

செய்முறை:

தேவையான அளவு காளானை வெட்டி கழுவிக்கொள்ளுங்க.நான் ஒரு பாக்கெட் இரண்டு நாளைக்கு வச்சிக்குவேன். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டையை போட்டு லேசாக வதக்கணும். அப்புறம் கழுவிய காளான் துண்டுகளை வதக்கணும். இரண்டு தம்பளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு காளானை வேக விடணும்.வெந்தவுடன் பெப்பர் தூள், கொத்தமல்லி இலை போட்டால் காளான் சூப்பு ரெடி...

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Kirouchenasamy Ponnusundaram" அவர்களுக்கு நன்றி :)

Monday, March 9, 2015

மெக்சிகன் லெமன் செலண்ட்ரோ காலிரைஸ்



தேவையான பொருட்கள்:

ஏற்கெனவே காலிரைஸ் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சை
வெங்காயம்
கொத்தமல்லி இலைகள்
பூண்டு
.மிளகாய்
நெய்
கறிவேப்பிலை.
உப்பு

செய்முறை:

வெங்காயம் + பூண்டு + .மிளகாய்+கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கவும்.
* எலுமிச்சையின் மேற்புற மஞ்சள் நிறத் தோலை ஒரு துருவியில் தூள் தூளாகப் பொடியாக அரியவும்.
* வாணலியில் நெய் விட்டுக் காய வைக்கவும்.
* நெய் காந்ததும், வெங்காயம்ம்+.மிளகாய்+பூண்டு+கறிவேப்பிலை+கொ.மல்லி இலைகள்+ அரிந்த எலுமிச்சையின் மேற்புறத் தோலை (குறிப்பு: மஞ்சள் நிறத் தோல் மட்டுமே. ஏனெனில் அதனுள்ளிருக்கும் வெள்ளை நிற உட்புற லேயர் கசக்கும்.. ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்லது. சுவை சிலருக்குப் பிடிப்பதில்லை ) சேர்த்து வதக்கவும்.
* காலி-ரைஸ்ஸை இப்பொழுது சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து இப்பொழுது ஏற்கெனவே மேற்புறத்தினை சீவல் செய்த எலுமிச்சையின் சாற்றினைச் க் கிளறவும்.அடுப்பினை அணைத்துவிடவும்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran" அவர்களுக்கு நன்றி :)



பூசணிக்காய் வடை

தேவையான பொருட்கள்:
பூசணி-200g
அவகோடோ -2

செய்முறை:

பூசணிக்காயை விதை நீக்கி மிக்சி யில் பேஸ்ட் பண்ணவும் (நீர் சேர்க்கவேண்டாம்).அதனுடன் அவகோடோ வும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் க்கு சமமான அளவு சின்ன சின்னதாய் நறுக்கிய வெங்காயம் ,3 பச்சை மிளகாய், தேங்காய் ,இஞ்சி (மசால் வடைக்கு செய்வது போல் ) கருவேப்பிலை சேர்த்து ஒன்றாக பிசைந்து வடை போல தட்டி வைத்து கொள்ளவும்.இப்போது ஒரு ப்ளேட்டில் எண்ணெய் தடவி, இந்த வடைகளை mivrowave oven லில் குக் பண்ணினால் மிகவும் சுவையாக இருக்கும்.

இந்த சுவையான,புதுமையான கண்டுபிடிப்பு சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai" அவர்களுக்கு நன்றி :)

காளான் பட்டர் fry


தேவையான பொருட்கள்:
காளான்-4 
காப்சிகம்-1
வெங்காயம்-1
இஞ்சி பூண்டு 

செய்முறை:

எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய வெங்காயத்தை வணக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,சீரகம்,கருவேப்பிலை போட்டு தாளித்தவுடன் காப்சிகம் & இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் மிளகாய் பொடி,மல்லி பொடி சேர்த்து காளானையும் போட்டு வதக்கவும். காளான் 75% வெந்தவுடன் சிறிது கரம் மசாலா & வணக்கிய வெங்காயத்தையும் சேர்த்தால் காளான் fry ரெடி ...அதே சூட்டில் பட்டர் கார்னிஷ் பண்ணினால் அருமையாக இருக்கும்.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :)

Thursday, March 5, 2015

காடை கிரேவி


தேவையான பொருட்கள் :-
1. காடை இரண்டு
2. வெங்காயம் - 3
3. இஞ்சி பூண்டு விழுது
4. தாளிக்க தேங்காய் எண்ணெய் () நல்லெண்ணெய்
5. மஞ்சள் தூள் சிறிது
6. மிளகாய் தூள் சிறிது
7.சீரகத்தூள் சிறிது
8. ராக் சால்ட் சிறிது

செய்முறை
முதலில் காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காடையுடன் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 2லிருந்து 3 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

பின் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் வேகவைக்கப்பட்ட காடையை சேர்க்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு சிறிது சேர்த்து நன்றாக பிரட்டவும். வெங்காயம் நன்றாக மேஷ் ஆகி காடையுடன் சேர்ந்திருக்கும். சூப்பர் காம்பினேஷன் டிஷ் இது.

இந்த சுவையான, பாரம்பரிய  சமையல் முறை குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :)

பாலக்கீரை வெங்காய துளசி மசியல்



தேவையான பொருட்கள் :-
1. பாலக் கீரை (ஆர்கானிக் ஃபார்மில் வாங்கியது)
2. வெங்காயம் - 3
3. காய்ந்த மிளகாய் – 4
4. பூண்டு – 6 பல்
5. தாளிக்க தேங்காய் எண்ணெய்.
6. துளசி இலை – 5 முதல் 10
7. மஞ்சள் தூள் சிறிது
8. மிளகாய் தூள் சிறிது
9. ராக் சால்ட் சிறிது

செய்முறை
முதலில் பாலக்கீரையை தண்டுடன் கழுவி, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கீரையுடன் பூண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு லேசாக வேக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை போட்டு லேசாக வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கடாயில் இட்டு மீடியமாக வதக்கவும். பின் வேக வைத்த பாலக்கீரை, துளசி இலை , பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் சிம்மில் அடுப்பை வைத்துவிட்டு பின் அணைக்கவும்.

பாலக்கீரையும் வெங்காயமும் நன்றாக பசிதாங்கும் என்பதால் 5 மணி நேரத்திற்கு வேறு எதுவும் தேவைப்படாது.

இந்த சுவையான, பாரம்பரிய  சமையல் முறை குறிப்பினை வழங்கிய "Manikandavel" அவர்களுக்கு நன்றி :)



Zucchini, Carrot and Capsicum Alfredo



தேவையான பொருட்கள் :
zucchini - 1
காரட் - 1  
காப்சிகம் - 1
வெங்காயம் -1
பூண்டு - 6 பல்
முழு கொழுப்பு பால் - 1 கப்
சீஸ் ஸ்ப்ரெட் -  2 டேபிள்ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பேசில் இலை

செய்முறை:
* பேசில் இலை, cheddar சீஸ் , உப்பு , மிளகு தூள் .
zucchini, காரட் துருவி கொள்ளவும் , காப்சிகம் , வெங்காயம் நீள வாக்கில் சன்னமாக வெட்டிக்கொள்ளவும் .பூண்டு சிறு துண்டுகளாக .
* ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் வெங்காயம் , துருவிய காய் , காப்சிகம் , பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பின் அதில் ஒரு கப் பால் மற்றும் சீஸ் ஸ்ப்ரெட் சேர்த்து கொதித்து கெட்டியானவுடன் அதில் உப்பு மிளகுதூள் சேர்த்து , இறக்கி வைத்து பேசில் இலை மற்றும் துருவிய cheddar சீஸ் அலங்கரித்து பரிமாறவும். 


இந்த புதுமையான, சுவையான சமையல் குறிப்பினை வழகிய அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)