அவகாடோ - 2
பன்னீர் -100 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பாதாம் பவுடர் - சிறிதளவு
கொத்துமல்லி இலை வெட்டியது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* பன்னீரை உதிர்த்து அல்லது துருவி வைத்துக்கொள்ளவும். இத்துடன் அவகாடோ/அவகேடோ பழம்,நறுக்கிய பெரிய வெங்காயம்,இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத் தூள்,கொஞ்சம் பாதாம் பவுடர்,கொத்துமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.

* தோசைக்கல்லினை சூடேற்றி, அதில் பிசைந்து வைத்த கலவைகளை சிறு பந்து போல் உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் சிறிது தண்ணீர் தடவி கட்லெட் சேப்பில் அழுத்தி (மிதமாக அழுத்தவும்) வார்த்து எடுக்கவும்.
குறிப்பு: * இதில் பேலியோ காய்களை ஆவியில் வேகவைத்து பன்னீர், அவகாடோ கலவைகளுடன் சேர்த்துக்கொள்ளலாம். வேகவைத்த காய்களில் இருந்து தண்ணீரை நன்கு வடிகட்ட வேண்டும்.
இந்த ஆரோக்கியமான மற்றும் புதுமையான பேலியோ உணவின் சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment