Saturday, October 24, 2015

முட்டை பீசா


தேவையான பொருட்கள்:
5 முட்டைகள்
சிறிது வெங்காயம் (வில்லையாக அரிந்தது)
சிறிது குடைமிளகாய் (நீளவாக்கில் அரிந்தது)
அரை வட்டமாக அறிந்த தக்காளித் துண்டுகள்
வட்டமாய் அரிந்த மிளகாய்த் துண்டுகள்
நெய்/தே. எண்ணெய்/இறைச்சிநெய் வாணலியில் ஒட்டாமல் வருமளவுக்கு
உப்பு, மிளகுத் தூள் சுவைக்கு வேண்டிய மட்டும்
சிறிது ஒலிவ எண்ணெய்
கொஞ்சம் சீஸ் துருவல்

 செய்முறை:
* முட்டைகளை உடைத்து நன்கு கலக்கி ஒரு பக்கம் வைத்துவிடவும். வாணலி விளிம்பு உயரமாக உள்ள வாணலி என்றால் முட்டை நன்கு மொத்தமாக வரும். 
* இளந்தீயில் வாணலியில் நெய் விட்டுப் பரப்பி முட்டையை நடுவில் ஊற்றவும். ஒரே மட்டமாகப் பரவும். முட்டையின் மேற்பரப்பு நீர்மமாக இருக்கையிலேயே எல்லாக் காய்களையும் அதில் பரவலாகப் போடவும். உப்பு மிளகுத் தூள் தூவி இப்போது வாணலியை மூடி போட்டு சிறிது நேரம் வேக விட்டுத் திறக்கவும். சிறிது நேரம் என்பது 60 முதல் 90 வினாடிகள் வரை.நெடு நேரம் விட்டால் உப்பிவிடும். 
* முட்டையின் மேற்பரப்பு வெந்து இறுகிவிட்டது தெரிந்ததும் சீஸ் துருவலைப் பரவலாகத் தூவவும். மீண்டும் மூடி வைத்து சீஸ் உருகும் வரை காத்திருக்கவும். 
* இப்போது தட்டில் எடுத்து மேலே கொஞ்சம் ஒலிவ எண்ணெய் பரவலாக ஊற்றிக் கீற்று போட்டு சூடு ஆறுவதற்குள் விண்டு விண்டு மென்று விழுங்க வேண்டியது தான். கோழிக் கால் தொட்டுக் கொள்வதற்கு.

இந்த சுவையான  மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய"விஜய் கோபால்சாமி" அவர்களுக்கு நன்றி. 






No comments:

Post a Comment