தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 150 gm
வெங்காயம் நறுக்கியது - பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 4 பல்(3inches)
கொத்தமல்லி இழை
உப்பு
நெய்
செய்முறை:
* சிறிதளவு தண்ணீரில் மட்டன் கீமா, இஞ்சி பூண்டு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* கறி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டால் போதும், அதிகம் தேவையில்லை. தண்ணீர் வற்றும் வரை கறியை வேக விடவும்.
* இறங்குவதற்கு 5 நிமிடங்கள் முன்பு பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பை அனைத்து ஆற விடவும்.
* இதனுடன் நறுக்கிய தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வழுவழுப்பாக அரைக்கவும்.
* உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.
* தோசை கல்லில் மிதமான சூட்டில் நெய் விட்டு அரைத்த கலவையை சிறிய வடைகளாக தட்டி போடவும்.
* ஒரு பக்கம் நன்கு வெந்த பிறகு நெய் விட்டு திருப்பி போட்டு வேக விடவும்.
சுவையான மட்டன் கீமா வடை ரெடி.
இந்த சுவையான, பாரம்பரிய சமையல் குறிப்பினை வழங்கிய "Faulin Diana" அவர்களுக்கு நன்றி.
இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து குடுத்த "Lakshmi Mani" அவர்களுக்கும் நன்றி.
No comments:
Post a Comment