Saturday, October 24, 2015

பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை/Panch Phoron with Stir Fry Vegetables




தேவையான பொருட்கள்:

காய்கறிகள்
காலிப்ளவர்
கோவைக்காய்
புரோக்கோலி
கேரட்
கத்திரிக்காய்
சிவப்பு குடமிளகாய்
எல்லாம் சேர்த்து – அரை கிலோ
உப்பு

தாளிக்க:
நல்லெண்ணை – 2 மேசை கரண்டி
பஞ்ச பூரன் - (கருஞ்சீரகம், சோம்பு, கடுகு, சீரகம், வெந்தயம்) - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
பச்சமிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது

செய்முறை:
* காய்கறிகளை அரிந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கருகாமல் தாளித்து காய்களை சேர்த்து நன்கு வதக்கி தீயின் தனலை குறைவாக வைத்து சிம்மில் அனைத்துகாய்களையும் வேகவிட்டு கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
* கவனிக்க :குஜராத் பெங்காலிகள் சமையலில் இந்த 5 வகை அஞ்சறை பெட்டி பொருட்கள் இல்லாமல் சமையல் கிடையாது. இதை( கருஞ்சீரகம், சோம்பு, கடுகு , சீரகம், வெந்தயம்) சம அளவில் கலந்து வைத்து கொண்டால் காய் வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

இந்த சுவையான,ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலா கமால்" அவர்களுக்கு நன்றி. 

காலிப்ளவர் தயிர் சாதம்




தேவையான பொருட்கள்:
காலிப்ளவர் – 150 கிராம்
தயிர் – 75 மில்லி
பால் - 50 மில்லி

தாளிக்க
நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
பூண்டு – ஒரு பல் பொடியாக அரிந்தது
பெருங்காயப்பொடி – அரை சிட்டிக்கை
கருவேப்பிலை – சிறிது
முந்திரி – பொடியாக அரிந்தது ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் – பொடியாக அரிந்தது ஒன்று
இஞ்சி துருவியது – அரைதேக்கரண்டி

செய்முறை:
* காலிப்ளவரை சிறிய பூவாக துருவி , வெண்ணிரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து காலிப்ளவரையும் சேர்த்து கொதிக்க விட்டு வெந்து வடிக்கட்டவும்.
* ஒரு வாயகன்ற சட்டியை அடிப்பில் வைத்து அதில் நெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வதக்கி தயிரையும் பாலையும் சேர்த்து தேவைக்கு உப்பு தூவி கொத்தி விட்டு நன்கு கிளறி இரக்கவும்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Jaleela Kamal" அவர்களுக்கு நன்றி.




எக் கபாப்



தேவையான பொருட்கள்:
முட்டை - 4
ஆச்சி கபாப் மசாலா - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு மேசைகரண்டி
ஆலிவ் ஆயில் (அ) தேங்காய் எண்ணை (அ) நெய் முன்ற தேக்க்ரன்டி

செய்முறை:
* முட்டையை அவித்து இரண்டாக வெட்டி வைக்கவும்.
* தயிரில் சிறிது தண்ணீர் மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்து கலந்து வெட்ட்டி வைத்த முட்டையின் இருபுறமும் தடவி வைக்க்க்வும்.
* தவ்வாவில் எண்ணை சூடாக்கி மசாலா தடவிய முட்டையை போட்டு இரண்டு புறமும் நன்கு மசாலா முட்டையில் ஏறும் வரை கருகாமல் பொரித்து எடுக்கவும்.

கவனிக்க: சில நேரம் முட்டையை போட்டதும் வெடிக்க ஆரம்பிக்கவும். ஆகையால் பொரிய விடும் போது முடி போட்டு கொள்ளவும்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Jaleela Kamal" அவர்களுக்கு நன்றி.


இறால் மசாலா



தேவையான பொருட்கள்:
இறால் - 300 gm
குடை மிளகாய் - பாதி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பல்
கேரட் - 1
சில்லி பேஸ்ட் - 2 ஸ்பூன் 
கறிவேப்பிலை 
உப்பு
வெண்ணெய் - 1 tsp

செய்முறை:
* கடாயில் வெண்ணெய் சூடு செய்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
* இதனுடன் பூண்டு, கறிவேப்பிலை, சில்லி பேஸ்ட், தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்
* பின்பு இறால், கேரட் சேர்த்து மேலும் 7 நிமிடங்கள் வேக விடவும்

* ஈரப்பதம் இல்லாமல் வெந்த பிறகு கடைசியில் குடை மிளகாய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான இறால் மசாலா ரெடி.

இந்த சுவையான, பாரம்பரிய பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Sathya Vani" அவர்களுக்கு நன்றி. 

பேலீயோ Egg Wrap






தேவையான பொருட்கள்:
வெண்ணை- 2 டேபிள் ஸ்பூன்
குடை மிளகாய் - 1 பெரியது
வெங்காயம் - 2
காரட்-2
முட்டை- 4
துருவிய சீஸ்- 1/2 கப்
கரம் மசாலா- 1 ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 ஸ்பூன்
olive - 10
மிளகு தூள்- தேவைக்கு ஏற்ப
உப்பு- தேவைக்கு ஏற்ப

செய்முறை:
* ஒரு வாணலியில் வெண்ணை விட்டு, வெங்காயம் வதக்கி கொள்ளவும்.
* பின்பு காரட், குடை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கி தேவையான கரம் மசாலா,சாட் மசாலா, உப்பு சேர்த்து கொள்ளவும்.
* காய் வதங்கியதும் ஆலிவ் மற்றும் சீஸ் தூவி கொள்ளவும்.
* ஒரு தோசை கல்லில் இரண்டு முட்டை உடைத்து, மிளகு தூள் தூவி ஆம்லேட் போட்டு கொள்ளவும்.
* ஆம்லேட்ஐ ஒரு தட்டில் வைத்து , வதக்கி வைத்துள்ள காய்கறி கலவையை அதற்குள் வைத்து உருட்டி வைக்கவும்.

சுவையான Egg wrap தயார்..தொட்டு கொள்ள கார சட்னி / சில்லி sauce வைத்து கொள்ளலாம்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Vidhya Lakshmi" அவர்களுக்கு நன்றி.

ஸ்டேக்



செய்முறை:

* வாணலியில் நிறைய வெண்ணெயை நிறைய விடவும்
* வெட்டிய ஸ்டேக் துண்டுகளை அதில் போடவும்
* சற்று உயர்வெப்பத்தில் உப்பை தூவி வறுக்கவும்
* ஏழு எட்டு நிமிடங்களில் ஸ்டேக் தயார். ரொம்ப வேகவிடவேண்டாம்... கடிக்கும் பதம் வந்தபின் நான் எடுத்துவிடுவேன்.
*  கருப்பாக எல்லாம் விடுவது கிடையாது. அது இறைச்சியின் சுவையை கெடுப்பது மாதிரி. அதுக்குன்னு ரொம்ப சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடவேண்டாம். ஸ்டேக் உள்ள ஜூஸியாகவும் இருக்கணும், சமைக்கபட்டிருக்கவும் வேண்டும். அந்த பதத்தில் டெக்னிக்கா எடுக்கணும்.

அதன்பின் வாணலியில் உள்ள ஆயில், கொழுப்பு எல்லாவற்றையும் ஸ்டேக் துண்டுகள் மேல் ஊற்றவும். பச்சை வெங்காயம் ஒன்றை வெட்டவும். வெங்காயத்தை கடித்துக்கொண்டே ஸ்டேக்கை மெதுவாக ரசித்து உண்ணவும். மசாலா, மிளகாய், பெப்பர் எதுவுமே தேவையில்லாமல் ஸ்டேக்கின் சுவையே தேவாமிருதமாக இருந்தது. வெங்காயமும் கறியும் சேருகையில் பேரானந்தம் சித்திக்கும். ஒருதரம் இப்படி மசாலா இல்லாம வெங்காயத்தை கடிச்சுகிட்டு சாப்பிட்டால் அதன்பின் அந்த பக்கமே போகமாட்டோம்.

பச்சை வெங்காயம் இயற்கையான கொலஸ்டிரால் குறைக்கும் தன்மை உடையது. தினம் 1 கப் ஒயின் சாப்பிட்டால் மாரடைப்பு வராது என்பார்கள். தினம் 1 பச்சை வெங்காயம் சாப்பிடுவது ரெட் ஒயினை எல்லாம் தூக்கி அடிக்கும் சக்தி கொண்ட மாரடைப்பை குணப்படுத்தும் மருந்தாகும். மூலவியாதி இருப்பவர்கள், மூக்கில் ரத்தமா ஒழுகுது என்பவர்களுக்கு இது அருமருந்து. வெங்காயம் வெட்டுகையில் கண்ணீர் வருவதுக்கு காரணம் அதில் உள்ல சல்பைடு. ஆனால் அது நம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள மிக உதவும். டயபடிஸ் உள்ளவர்களுக்கு வெங்காயத்தில் உள்ள க்ரோமியம் இன்சுலினை நன்றாக சுரக்கவும் உதவி சுகரை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஆனால் பச்சை வெங்காயத்தின் இயற்கையான சுவையே அதை உண்டு ரசிக்க போதுமான காரணமாகும். இறைச்சியுடன் சேர்கையில் அது வழங்கும் இயற்கையான சுவைக்கு ஈடாக எந்த மசாலாவும் வருவதில்லை என்பதே உண்மை.

இந்த சுவையான, மூதாதையரின் சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.

மஞ்சள் பூசனி பாலக் தில் கீரை சூப்



தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசனி துருவியது 4 மேசைகரண்டி
பாலக் பொடியாக அரிந்த்து – 2 மேசைகரண்டி
தில் கீரை பொடியாக அரிந்தது – 2 மேசைகரண்டி
வெங்காயம் – இரண்டு மேசைகரண்டி
பூண்டு – ஒரு பெரிய பல்
வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி ( தேவைக்கு)
பச்சமிளகாய் -1 பொடியாக நருக்கியது
தண்ணீர் – இரண்டரை கப்
பட்டர் – 10 கிராம்

செய்முறை:
* வாயகன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்கவிடவும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பூண்டு, மஞ்சள் பூசனி, பாலக் , தில் கீரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* தண்ணீர் அரை கப் அளவிற்கு வற்றட்டும். பிறகு வெள்ளை மிளகு தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு பிளன்டரில் லேசாக ஒரு திருப்பு திருப்பவும். பிறகு சூடான சூப்பில் பட்டரை சேர்த்து பருகவும்.
குறிப்பு: தில் கீரை என்பது அரபுநாடுகளில் அரபிக் சாலடில் பயன்படுத்துவார்கள், இதில் ஓமம் வாசனை அடிக்கும். சூப்பில் சேர்க்கும் போது சுவை அருமையாக இருக்கும்
இந்தியாவில் இந்த கீரை கிடைக்குமான்னு தெரியவில்லை, கிடைக்காதவர்கள் வல்லாரை, மண்தககளி, பொன்னாகன்னி கீரை இது போல் ஏதாவது இருவகைகீரைகளை சேர்த்து கொண்டு சிறிது வறுத்து திரித்த ஓமம் பொடியை சேர்த்து கொள்ளுங்கள்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலா கமால்" அவர்களுக்கு நன்றி. 

தில் கீரை பாலக் முட்டை தோசை



தேவையான பொருட்கள்:
முட்டை – 3
வெங்காயம் – பொடியாக அரிந்தது – 2 மேசைகரண்டி
பச்சமிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது
முவர்ண குடமிளகாய் – ஒரு மேசைகரண்டி பொடியாக அரிந்தது
தில் கீரை – இரண்டு மேசைகரண்டி பொடியாக அரிந்தது
பாலக் கீரை – இரண்டு மேசைகரண்டி பொடியாக அரிந்தது
உப்பு – அரை தேக்கரண்டி ( தேவைக்கு)
கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
கார்லிக் பட்டர் – ஒரு மேசைகரண்டி (தேவைக்கு)

செய்முறை:
* முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து அதில் மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருகளையும் நன்கு முட்டையில் சேர்த்து கலக்கவும்.
* தவ்வாவில் பட்டரை சூடு படுத்தி அதில் ஒரு தோசையாக வோ அல்லது இரண்டு தோசையாக வோ கலக்கிய முட்டையை கருகாமல் பொரித்து எடுக்கவும்.

கவனிக்க
* இதில் தில் கீரைகிடைக்காதவர்கள் , முடக்கத்தான் கீரை அல்லது வல்லாரை கீரையை சேர்த்து கொள்ளுங்கள்.
* கார்லிக் பட்டர் கிடைக்காதவர்கள் பேலியோ எண்ணை , நெய், பட்டர், ஆலிவ் ஆயில் ஏதாவது பயன்படுத்திகொள்ளுங்கள்.

இந்த சுவையான, புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "ஜலீலா கமால்" அவர்களுக்கு நன்றி. 

கோகோனட் சாக்லேட் சிப் குக்கீ




தேவையான பொருட்கள்:
கோகோனட் flour (தேங்காய் மாவு - தேங்காய் பால் எடுத்தவுடன் கிடைக்கும் சக்கையை உலர வைத்து மாவாக பயன்படுத்தலாம் ) - 1/3 கப்
முட்டை - 2
பட்டர்/ தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
வெண்ணிலா எஸ்சென்ஸ் - 2 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேன் - 1/2 கப் (completely optional - use only when serving to kids)
பேகிங் பவுடர் - 1 ஸ்பூன்
செமி ச்வீட் டார்க் சாக்லேட் சிப் - 1/3 கப்

செய்முறை:
* மேலே கொடுக்கபட்ட அனைத்தையும் ஒன்றாக கட்டியில்லாமல் கலந்து, சிறு துண்டகளாக தட்டி 350 டிகிரி preheat செய்த அவனில் 20-25 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
* நோட்:
கூடுதல் சுவைக்கு மாவுடன் தேங்காய் துருவல் சிறிது சேர்த்தும் செய்யலாம்
* தேன் கலக்காமலும் உப்பு குக்கீஸ் ஆக செய்யலாம்.
* சாக்லேட் சிப் இனிப்பு இல்லாத டார்க் சாக்லேட் சிப்ஸ் சேர்க்கலாம் (என் பையனுக்காக செய்ததால் தேன்,ஸ்வீட் சிப் சேர்த்தேன் )
* மிக சுலபமான , சுவையான soft cookies இது.கடையில் வாங்கும் biscuits ,snacks பதில் குழந்தைகளுக்கு சத்தான இனிப்பு வகை. airtight container-ல் வைத்து 2 வாரங்கள் வரை பயன் படுத்தலாம்.

இந்த அருமையான மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணும் பேலியோ சமையல் குறிப்பினைவழங்கிய "Nithi Jai" அவர்களுக்கு நன்றி.  

அவகாடோ ஸ்மூ(த்)தி






தேவையான பொருட்கள்:
பழுத்த அவகாடோ - 1
100% கோகோ பவுடர் - 2 டீஸ்பூன்
முழுக்கொழுப்பு பால் - 1/2 அல்லது 1 கப்



செய்முறை:
* மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் பிளண்டரில் 30 நொடிகள் அரைத்துப் பருகவும்.


இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Durga Andrew" அவர்களுக்கு நன்றி.