Saturday, October 24, 2015

ஸ்டேக்



செய்முறை:

* வாணலியில் நிறைய வெண்ணெயை நிறைய விடவும்
* வெட்டிய ஸ்டேக் துண்டுகளை அதில் போடவும்
* சற்று உயர்வெப்பத்தில் உப்பை தூவி வறுக்கவும்
* ஏழு எட்டு நிமிடங்களில் ஸ்டேக் தயார். ரொம்ப வேகவிடவேண்டாம்... கடிக்கும் பதம் வந்தபின் நான் எடுத்துவிடுவேன்.
*  கருப்பாக எல்லாம் விடுவது கிடையாது. அது இறைச்சியின் சுவையை கெடுப்பது மாதிரி. அதுக்குன்னு ரொம்ப சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடவேண்டாம். ஸ்டேக் உள்ள ஜூஸியாகவும் இருக்கணும், சமைக்கபட்டிருக்கவும் வேண்டும். அந்த பதத்தில் டெக்னிக்கா எடுக்கணும்.

அதன்பின் வாணலியில் உள்ள ஆயில், கொழுப்பு எல்லாவற்றையும் ஸ்டேக் துண்டுகள் மேல் ஊற்றவும். பச்சை வெங்காயம் ஒன்றை வெட்டவும். வெங்காயத்தை கடித்துக்கொண்டே ஸ்டேக்கை மெதுவாக ரசித்து உண்ணவும். மசாலா, மிளகாய், பெப்பர் எதுவுமே தேவையில்லாமல் ஸ்டேக்கின் சுவையே தேவாமிருதமாக இருந்தது. வெங்காயமும் கறியும் சேருகையில் பேரானந்தம் சித்திக்கும். ஒருதரம் இப்படி மசாலா இல்லாம வெங்காயத்தை கடிச்சுகிட்டு சாப்பிட்டால் அதன்பின் அந்த பக்கமே போகமாட்டோம்.

பச்சை வெங்காயம் இயற்கையான கொலஸ்டிரால் குறைக்கும் தன்மை உடையது. தினம் 1 கப் ஒயின் சாப்பிட்டால் மாரடைப்பு வராது என்பார்கள். தினம் 1 பச்சை வெங்காயம் சாப்பிடுவது ரெட் ஒயினை எல்லாம் தூக்கி அடிக்கும் சக்தி கொண்ட மாரடைப்பை குணப்படுத்தும் மருந்தாகும். மூலவியாதி இருப்பவர்கள், மூக்கில் ரத்தமா ஒழுகுது என்பவர்களுக்கு இது அருமருந்து. வெங்காயம் வெட்டுகையில் கண்ணீர் வருவதுக்கு காரணம் அதில் உள்ல சல்பைடு. ஆனால் அது நம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள மிக உதவும். டயபடிஸ் உள்ளவர்களுக்கு வெங்காயத்தில் உள்ள க்ரோமியம் இன்சுலினை நன்றாக சுரக்கவும் உதவி சுகரை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஆனால் பச்சை வெங்காயத்தின் இயற்கையான சுவையே அதை உண்டு ரசிக்க போதுமான காரணமாகும். இறைச்சியுடன் சேர்கையில் அது வழங்கும் இயற்கையான சுவைக்கு ஈடாக எந்த மசாலாவும் வருவதில்லை என்பதே உண்மை.

இந்த சுவையான, மூதாதையரின் சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.

2 comments: