ஸாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி - 2 கப் அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் - 2 சிறிய டின்
கீறிய பச்சை மிளகாய் - 4
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்
வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை ( விருப்பம் இருந்தால்) - 4 இலை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
கறி மசால் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணை - 1 ஸ்பூன்
செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய பூண்டு தாளிக்கவும். இத்துடன் வெங்காயம்,பச்சை மிளகாய், சேர்த்து வதக்கவும்.
* சிறிது வதக்கிய பின் வரமிளகாய் & பூண்டு பேஸ்ட் (வரமிளகாயினை சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊரவைத்து, பூண்டு சேர்த்து கண் மை போல அரைக்கவும்) விழுது சேர்த்து, வாசனை போகும் வரை வதக்கவும்.
* இதில் மிளகாய்த் தூள்,மல்லித்தூள்,கறி மசால் தூள்,மிளகுத் தூள்,உப்பு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
* இப்பொழுது வேகவைத்து,தோலுரித்து மசித்த தக்காளி அல்லது வேதிப்பொருட்களின் கலப்படம் இல்லாத தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்று கலக்கவும்.
* இதில் உப்புத்தூவி, தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.
பனீர் வித் சாஸ்:
* ஒரு கடாயில் வெண்ணெய் விட்டுக்காய்ந்ததும், பனீர் துண்டுகளை இருபுறமும் வேக வைக்கவும்.
* இத்துடன் மேலே குறிப்பிட்ட சாஸ் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கவும்.
சமையல் குறிப்பு: மைதிலி தியாகு