Sunday, May 31, 2015

ஈரல் மற்றும் கொழுப்பு வறுவல்


தேவையான பொருட்கள்:
ஈரல் & கொழுப்பு 
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - ஒரு கை 
இஞ்சி - 10 கிராம் 
கறிவேப்பிலை 
கொத்தமல்லி 
தக்காளி  - 1 
கறிமசால் தூள் 
மிளகுத்தூள் 
குழம்பு மிளகாய்த்தூள் 
உப்பு 

செய்முறை:
* வடசட்டில 2 spoon எண்ண ஊத்தி 15 சின்ன வெங்காயம் ஒருகை உரித்த பூண்டு 10கிராம் இஞ்சி நைசா இடிச்சி போட்டு சிவக்க வருத்து கருவேப்பில கெத்தமல்லி 1 தக்காளி போட்டு கழுவி அறுத்தகொழுப்பு+ ஈறல் போட்டு வணக்கவும் உப்பு+ கறிமசால் தூள்+ மிளகு தூள்+குழம்பு மிளகாய்தூள் போட்டு குறைவான தீயில் வணக்கவும்.
* 50ml தண்ணீர் விட்டு மூடி வைத்து வெந்த பின் இறக்கவும் (கொழுப்பில் இருந்து வரும் எண்ணெயே போதுமானது)* சூடாக இருக்குமா போதே சாப்பிட்டுவிடுங்கள்.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "MS-Sarayan Mohan" அவர்களுக்கு நன்றி :)

Thursday, May 28, 2015

ஸ்பைசி மிண்ட் பன்னீர் மஷ்ரூம்



தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் இருநூறு கிராம்
பன்னீர் இருநூறு கிராம்
வெங்காயம் இரண்டு
புதினா ஒரு கட்டு
பச்சை மிளகாய் மூன்று
பூண்டு ஐந்து பல்
வெண்ணை ஐம்பது கிராம்

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் , பூண்டு பொடியாக நறுக்கவும்
புதினா பச்சை மிளகாய் கொஞ்சம் நீர் விட்டு விழுமனாக அரைத்து வைக்கவும்

வெண்ணையை ஒரு வாணலியில் இட்டு அது உருகியவுடன் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி அதில் நன்கு கழுவிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும் ....நன்றாக வதங்கி மேலே ப்ரௌன் கலராக மஷ்ரூம் மாறியவுடன் அதில் பன்னீர் சேர்த்து அளவாக உப்பும் அரைத்து வைத்த விழுதையும் சேர்க்கவும் ....நன்றாக பச்சை மணம் போக வதங்கியவுடன் இறக்கி வைக்கவும் ..கம கம என்று புதினா மணத்துடன் ஸ்பைசி மஷ்ரூம் பன்னீர் தயார்.

இந்த சுவை மிகுத்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய அம்மா "Dolly Bala"அவர்களுக்கு  நன்றி :)

Wednesday, May 27, 2015

Egg stuffed காப்சிகம்



தேவையான பொருட்கள்:
 முட்டை-3
வெங்காயம்-பொடிப்பொடி துண்டுகள் 
காப்சிகம்-5 (காம்புடன்)
தூளாக்கிய பன்னீர் - 1 ஸ்பூன் 
மசாலா பொடி ,உப்பு, நெய் 

செய்முறை:
காப்சிகிமை படத்தில் உள்ளது போல் நறுக்கி துளை செய்து கொள்ளுங்கள்.
மசாலா பொடியை நீர்,உப்பு  விட்டு பேஸ்ட் போல் செய்து காப்சிகத்தின் வெளிப்புறத்தில் நல்லா மசாலாவை தடவுங்கள்.3 முட்டை,வெங்காயம் சேர்த்து  ஆம்லெட் கலவை செய்து அதனுடன் பண்ணேர் தூளை சேர்த்து   காப்சிகத்தின் துளையில் உள்ளே ஊற்றி காம்பை வைத்து மூடி,தவாவில் சிறிது நெய் விட்டு அதில் மீன் வறுப்பது போல அப்பப்ப திருப்பி போட்டு  வேக விடுங்கள்...மிதமான தீயில் 10 நிமிடம் வறுத்தால் சரியாக இருக்கும்..

தக்காளி சட்னியுடன் அமோகமாக இருக்கும்.

இந்த புதுமையான மற்றும் சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :).

அருமையான எருமை வால் சூப்


எருமை வால் மிகுந்த கொழுப்பு சத்து நிரம்பிய உணவாகும்...அத்தனை எளிதில் கிடைக்காது. சற்று சிரமபட்டு தான் தேடிப்பிடித்தேன்.
வாலில் இறைச்சியும் எலும்புகளும் இருக்கும்...பார்த்தால் வால் மாதிரி தெரியாது. மற்ற பீஸ் மாதிரிதான் இருக்கும்.அது வால்னு நீங்க சொல்லாம யாருக்கும் தெரியாது. அதனால் தைரியமா சாப்பிடலாம் .

வாலை சமைக்கும் முறை
வாலை நன்றாக கழுவி எடுத்து டவலில் துடைக்கவேண்டும்
அதன்பின் வாணலியை உயர்வெப்பத்தில் வைத்து நெய் விட்டு வால் துண்டுகளை கேரமலைஸ் செய்யவேண்டும். கேரமலைஸ் என்பது சற்று பிரவுன் ஆகும் வரை வறுப்பது. கேரமலைஸ் செய்வதால் இறைச்சியில் உள்ள ஜூஸ்கள் எல்லாமே அதனுள்ளேயே தங்கிவிடும். சுவையும் அதிகரிக்கும்
அதன்பின் ஸ்லோகுக்கரில் வால் துண்டுகளை இட்டு அவை மூழ்கும் வரை சிக்கன் ஸ்டாக் ஊற்றவேண்டும் (இல்லையெனில் நீர் சேர்க்கலாம்)
அதன்பின் 2 ஸ்பூன் உப்பு
2
ஸ்பூன் சாம்பார் பவுடர்
1
ஸ்பூன் கரம் மசாலா
1
ஸ்பூன் மல்லிப்பொடி
1
ஸ்பூன் மிளகாய்ப்பொடி
1
ச்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்
2
செலரி துண்டுகள்
1
காரட்
இதை குக்கரில் இட்டு மூடி ஸ்லோ செட்டிங்கில் வைத்து 8 மணிநேரம் வேக விடவேண்டும்

வெந்தபின் எடுத்து உண்டால் அருமையான சூப் தயார்....இதில் ஜெலடின், கொலாஜன் எல்லாம் இருப்பதால் ஆர்த்ரைட்டிஸ், எலும்பு, ஜாயின்ட்களுக்கு மிக நன்மையளிப்பது

இந்த ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவை மிகுந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :) 

Saturday, May 23, 2015

ஹலீம்

ஹலீம் என்பது ஒரு இராணிய உணவு வகை. கோதுமையை முக்கியமான உள்ளடக்கமாகக் கொண்டு செய்யப்படுவது. ஹைதராபாதி உணவாக அதை மாற்றிய போது துவரம்பருப்பு, பாசிப் பருப்பு போன்றவற்றுடன் அதைச் செய்யத் தொடங்கினர். பேலியோவுக்கு ஆகாத பொருட்களைத் தவிர்த்து நமக்கான உணவாகக் கடந்த வாரம் அதை மாற்றிச் செய்து பரிசோதித்த போது நன்றாக வந்திருந்தது.
அதன் செய்முறை விவரங்கள் பின்வருமாறு.

தேவையான பொருட்கள் (நால்வருக்கு):
காலிப்ளவர் - 1 கிலோ (சுத்தம் செய்த பிறகு)
முட்டைக் கோசு - 250 கிராம்
மட்டன் அல்லது சிக்கன் - 500 கிராம்
நெய் - 200 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு எடுத்துப் பொடித்தது
பாதாம் 20 எண்ணம்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் 100 கிராம்
சிக்கன் தோல் அல்லது மட்டன் சுற்றுக் கொழுப்பு 100 கிராம்
மிளகு - 40 எண்ணம்
பச்சை மிளகாய் 4 குறுக்கே அரிந்த முழு மிளகாய்
மல்லித் தூள், மிளகாய்த் தூள் அவரவர் விரும்பும் காரம் மணத்துக்கு ஏற்றவாறு
செய்முறை
பாகம் 1 - ஹலீம்:
காலிப்ளவர், முட்டைக் கோசு, மிளகு (2 மணி நேரம் ஊற வைத்தது) இவற்றைக் கிரைண்டரில் அறைத்து ஈரம் குறைவான கெட்டி பேஸ்ட்டாக எடுத்து ஓரமா வைக்கவும்.
மட்டனை/சிக்கனை தண்ணீர் விட்டு 15 விசில் வேக விடவும். அதிகம்னு நெனைக்க வேணாம், மட்டன்/சிக்கன் லேயர் லேயரா பிரியறதுக்கு இந்த வேக்காடு அவசியம். ஒரு ஒரு ஸ்பூனிலும் கறி நம் வாயில் அகப்பட வேண்டும்.
பெரிய பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பிலேற்றி 100 மில்லி நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலப் பொடியை இட்டு பொறிய விடவும். அரிந்த மிளகாய், மல்லி மிளகாய்த் தூள் உடன் உப்பும் இட்டு அதையும் வதங்க விடவும். இப்போது ஓரமா வைச்ச பேஸ்ட்டையும் வேக வைத்த இறைச்சியுடன் (கறி வேவிச்ச தண்ணியுடன் சேர்த்து) அடுப்பைக் கிளறவும். நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். கறி சூப் மற்றும் பதார்த்தங்களில் இருக்கக் கூடிய ஈரம் சுண்டும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும். ஈரம் சுண்டி விட்டது தெரிந்தால் இன்னொரு 60 மில்லி நெய் விட்டு நன்கு கிளறவும்.

பாகம் 2 - சூப்:
சுற்றுக் கொழுப்பு அல்லது சிக்கன் தோலை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 விசில் விட்டு இறக்கவும். பட்டைக் கிராம்பு தாளித்து வேண்டிய உப்பு சேர்த்து அதில் அந்த சூப்பை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

பாகம் 3:
20
பாதாம் பருப்புகளைக் கழுவி ஈரம் போக உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீளவாக்கில் அரிந்து நெய்யில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நெய் விட்டு வெங்காயத்தை ஈரம் போக கரகரப்பாக வறுத்து எடுத்து வையுங்கள்.
பரிமாறும் விதம்:
அகன்ட குழிவான தட்டில் முதலில் ஹலீமைப் பறிமாறி அதன் மேல் நெய்யில் பொறித்த பாதாமைத் தூவவும். அதன் மேல் ஒரு கரண்டி சூப்பை ஊற்றி கரகர வெங்காயச் சீவல்களை மேலே தூவிப் பறிமாறலாம். பாதி முட்டையை அரிந்து மேலே வைத்து கொடுத்தா இன்னும் சூப்பர்.
தலா 250 கிராம் பறிமாறினால் 4 முதல் 6 பேர் வரை கூட பறிமாறலாம்.

இந்த அருமையான,சுவைமிக்க மற்றும் புதியமுறையில் சமையல் குறிப்பினை வழங்கிய "விஜய் கோபால் சாமி "அவர்களுக்கு நன்றி :)

Thursday, May 21, 2015

பைசன் ரிப் ஐ ஸ்டேக்


இன்றைய உணவு: 
ரிப் ச்டேக் என்பது எருமையின் நெஞ்சுபகுதி மாமிசம். மிகுந்த கொழுப்பு சத்தும், கொலஸ்டிராலும், உறைகொழுப்பும் நிரம்பிய அதியற்புத உணவு. வீட்டில் இருந்து ஏழுமைல் தொலைவில் உள்ள பண்னையில் மிக மலிவாக கிடைத்தது. பவுண்டு எட்டுடாலர். கடைகளில் 11 முதல் 15 டாலர் வரும். சுமார் 700 கிராம் ஸ்டேக் இன்றைய உணவுக்காக எடுத்து சுத்தம் செய்தேன்.

ஸ்டேக் உண்பதும், சமைப்பதும் ஒரு தனி அனுபவம்...முக்கால் கிலோ ஸ்டேக்கில் சுமார் 1500 காலரி இருக்கும். சுமார் 75% கொழுப்பு மட்டுமே. இதை நன்றாக கழுவவேண்டும். கழுவி பேபப்ர் டவலால் நன்றாக துடைக்கவேண்டும். அதன்பின் மேலே 2- 3 ஸ்பூன் உப்பை இருபக்கமும் தூவவேண்டும். அதன்பின் நாலைந்து ஸ்பூன் பெப்பர். ஸ்டேக்கை பொறுத்தவரை அதிகமாக மசாலா எதுவுமே வேண்டியதில்லை. உப்பும், மிளகுமே போதும்

அதன்பின் ஒன்று உடனடியாக எடுத்து வாணலியில் வைக்கவேண்டும். அல்லது குறைந்தது 1 மணிநேரம் காத்திருக்கணும். காரணம் என்னவெனில் உப்பு இறைச்சியில் உள்ல ஜூஸை எல்லாம் வெளியே கொண்டுவரும். ஆனால் 45 நிமிடம் விட்டால் அதை மீண்டும் உள்ளிழுத்துக்கொள்ளும். இதை ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் என்பார்கள். இப்படி செய்தால் சுவை கூடும்

அதன்பின் வாணலியை எடுத்து ஏழெட்டு ஸ்பூன் நெய்யை விடவேண்டும். சற்று அதிக வெப்பத்தில் வாணலியை வேகவிடவேண்டும். நெய் அளவு அதிகமானால் பிரச்சனை இல்லை. அதை டிப்பிங் சாஸாக பயன்படுத்தலாம்

இப்ப வெட்டி வைத்த ஸ்டேக்கை எடுத்து வாணலியில் வைக்கவும். வைத்ததும் சள,சள என வாணலியில் சத்தம் கேட்கணும்....அடுத்து உயர்வெப்பத்தில் இறைச்சி ஒரு ஐந்து நிமிடம் வெந்தபின் திருப்பி அடுத்த பக்கத்துக்கு மாற்றவும். அதில் ஒரு ஐந்து நிமிடம்.

இறைச்சி ஆனதா என்பதை கண்டறிய மீட் தெர்மாமீட்டர் என கடைகளில் வைப்பார்கள். அதை எடுத்து இறைச்சியின் நடுபக்கம் வரை குத்தினால் 165- 170 டிகிரி காட்டினால் அதை "வெல்டன்" (நங்கு வெந்த மாமிசம்) என அழைப்பார்கள். 145 டிகிரி, 150 டிகிரியில் எடுத்தால் மீடியம், மீடியம் ரேர் என அழைக்கபடும்.

அதன்பின் இறைச்சியை எடுத்து தட்டில் வைக்கவும்..உடனே உண்னவேண்டாம். 10 நிமிடம் காத்திருக்கவும். அப்போதுதான் இறைச்சியில் உள்ள ஜூஸ் எல்லாம் மையபகுதிக்கு இறங்கும். உடனே உண்ன ஆரம்பித்தால் ஜூஸ் தட்டில் வழிந்துவிடும். 10 நிமிடம் கழித்து ஒரு கத்தி (உணவு உண்ணும் கத்தி போதாது. ஸ்டேக் கத்தி தனியாக கிடைக்கும்) மற்றும் போர்க்குடன் உண்ண துவங்கலாம். இறைச்சி 10 நிமிடம் காத்திருக்கையில் அதன் மேலே நான் சில துண்டு வெண்னெயை வைத்தேன். அது உருகி வழிந்து இறைச்சியுடன் செம்புலபெயர் நீர் போல கலந்தது

வானலியில் உள்ள நெய், ஸ்டேக்கில் கலந்து பிரவுன் கலரில் காட்சியளிக்கும். அதை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின் கத்தியால் சின்ன துண்டாக வெட்டி எடுத்து டிப்பிங் சாஸில் தொட்டு உண்டால்

அதற்கு ஒப்பான அனுபவமாக உலகில் எந்த உணவையும் கூற இயலுமா என்பது சந்தேகம் தான். பேகனை உண்பதை மாத்திரமே கூற இயலும் என நினைக்கிறேன்...ஜூஸி சிகப்பிறைச்சி நம் வயிற்றில் இறங்க, இறங்க அதை கண்ணை மூடி ரசித்து உண்டால் நம் ஆதிமூதாதையர் இதே போல பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காட்டுகுகையில் ஸ்டேக்கை நெருப்பில் சுட்டு உண்டு மகிழும் நினைவு வரும்..இந்த ப்ரைமல் சுவை (primal taste) நம் ஜீன்களுக்கு பேரானந்தம் அளிக்கும் தன்மை கொண்டது...தமிழ்நாட்டில் பொதுவாக சிக்கன், மீன் மிஞ்சினால் ஆடு...அதுக்கு மேல் போவது கிடையாது.இறைச்சியை பொறுத்தவரை சிக்கன், மீன் எல்லாம் குழந்தைகள் சாப்பிடலாம்..ஆடு ஒரு அளவு ஓக்கே..ஆனால் அதுக்கு மேலே போய் பெரிய மிருகங்களை உண்கையில் கிடைக்கும் சுவையை இந்த குட்டி மிருகங்கள் எல்லாம் கொடுக்கவே கொடுக்காது......

சின்ன சின்ன துண்டாக வெட்டி எடுத்து நெய்யில் தொட்டு உண்கையில் ஒவ்வொரு துண்டும் தனி தனி சுவையை அளிக்கும்....நடுவே உள்ள மாமிசம் பிங் நிறத்திலும், அதை சுற்றி உள்ள மாமிசம் சிகப்பு நிறத்திலும் மேலே உள்ள மாமிசம் பிரவுன் நிறத்திலும் இருக்கும்....ஒவ்வொன்றும் தனி சுவை...இழுக்க, இழுக்க பேரின்பம்..பற்கள் முழுக்க இறைச்சிதுண்டுகளால் நிரம்ப அதை குத்தி எடுத்தபடிதான் இத்தனை இறைச்சியையும் உண்ணமுடியும்...வெறுமனே உண்ணமுடியாது...

இதை உண்டு முடிக்க சுமார் முக்கால் மணிநேரம் ஆனது. அதன்பின் பல் குத்தி பிளாஸ் செய்ய ஒரு 15 நிமிடம்.....மணகண்ணில் பலலட்சம் ஆண்டு பின்சென்று காட்டுகுகையில் குடும்பத்துடன் நெருப்பை சுற்றி அமர்ந்து ஸ்டேக்கை பகிர்ந்து உண்டு, அதன்பின் குச்சியால் பல்லைகுத்திய ஆதிமூதாதையர் நினைவுக்கு வந்தார்கள்...உணவு என்பது அன்று ஒரு சமூகமாக கூடிமகிழும் தருணம்..அதன் காரணம் ஸ்டேக்கே...

இத்தனை பேரானந்தம் அளிக்கும் ஸ்டேக் மட்டுமே இன்றைய உணவு...ஒரு வேளை உண்பவன் யோகி என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? ஸ்டேக்கை உண்டால் நாமும் யோகியே..


வாழ்க ஸ்டேக். இத்தனை சுவையான இறைச்சியை கொடுத்த அந்த எருமையின் ஆன்மா பரமன் பாதம் அடைந்து நற்கதி பெறவும் பரம்பொருளை வேண்டிக்கொண்டேன்....

இந்த பெருமை முழுதும் "நியாண்டர் செல்வன்" ஜி அவர்களுக்கே சேரும். நன்றி :)


Wednesday, May 20, 2015

ஆட்டுக்கால்சூப்





மாலைநேரத்தில் ஆட்டுக்கால்சூப் எடுக்கும்போது உற்சாகமாக உணரமுடிகிறது.! 
இந்தசூப் செய்வது எப்படி??
எளிமையான முறையில் செய்யலாம் 
விறகு அடுப்பாஇருந்தா சுவைஅதிகமாகும்.
முடிநீக்கிய ஆட்டுக்காலை சின்னதாவெட்டிய பின்பு நீரில் கல்உப்பு கைப்பிடிஅளவு போட்டு காலைகழுவ வேண்டும் காலைதனியா எடுத்துட்டு சமையலுக்கு தயாராகலாம் 3கரணடிமிளகு,
2கரண்டிசீரகம்,
2கரண்டிமல்லி,
10சின்னவெங்காயம்,
5பூண்டு,
இதெல்லாம் அம்மில அரைச்சு ஒரளவுக்குதான் அரைக்கனும் பின்பு
வாணலியில் நல்லெண்ணய் காய்ந்தவுடன் கருவேப்பிலை 1பச்சமிளகாய், 2தக்காளி தாளிச்சபின் அம்மிலஅரச்சமசாலா கால்துண்டுகள் போட்டு கிளறியபின் லேசா மஞ்சள்தூள் 3லிட்டர் தண்ணிஊத்தி தேவையானஉப்பு சேர்த்து நல்லாகொதிக்கவிட்டபின் 6,7மணிநேரமாவது அனல்இருக்குற அடுப்புலயே மூடிவைக்கனும் காலையில பண்ணத மாலையில சூடுபண்ணி சாப்டோம்னாதான் சுவையாஇருக்கும் இரவில் பண்ணியத காலையில சூடுபண்ணி சாப்டாதான் சுவையாஇருக்கும் .

அப்பவேசாப்டுறது சுவையிருக்காது
சுவையகூட்டலாம்னு அஜினாமோட்டோ சேர்க்கவேண்டாம்..!


இந்த அருமையான,சுவைமிகுந்த, தெளிவான சமையல் குறிப்பினை வழங்கிய "Murugan Theethan"அவர்களுக்கு நன்றி :)

முட்டை மஞ்சூரி



செய்முறை;
* தக்காளி,பூண்டு,இஞ்சி எல்லாத்தையும் மிக்சில கெட்டியா அரைக்கணும். 
* ஒரு தவாவில் எண்ணெய் விட்டு வெங்காயம் காப்சிகம் வதக்குங்க ...நல்லா வணக்கியதும் அந்த தக்காளி பேஸ்ட்,உப்பு போட்டு வதக்குங்க (தக்காளியை லைட்டா வதக்கினால் போதும் ) இப்போ பரி பண்ணி வைத்துள்ள முட்டை கபாப் (http://munnorunavu.blogspot.com/2015/05/blog-post_91.html)  இதனுடன் சேர்த்து சில்லி சாஸ், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு இறக்கினால் முட்டை மஞ்சூரியன் ரெடி.
* சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்..

குறிப்பு; மஞ்சூரியன் சிறிது புளிப்பு சிறிது இனிப்பு கலந்த கலவையாக இருக்கணும்...அதனால தக்காளிய தாராளமாவே சேர்க்கலாம்

இந்த புதுமையான, சுவை நிறைந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai" அவர்களுக்கு நன்றி :)

முட்டை கபாப்

தேவையான பொருட்கள்:
முட்டை-6, வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு -4 பல் இஞ்சி-1/4 inch அளவு காப்சிகம் -1
செய்முறை:
* முட்டைகளை உடைத்து உப்பு,மிளகுத்தூள் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணுங்க... 
* அதை microwave ஓவன் ல வச்சு 3 நிமிஷம் சூடு பண்ணினால் (அப்பப்ப கிண்டி விடுங்க) நல்ல கெட்டியா வரும்.இதை பன்னீர் சைஸுக்கு கட் பண்ணிகோங்க.. microwave இல்லைனா இட்லி குக்கரிலும் செய்யலாம்.
* ஒரு பாத்திரத்தில் மிளகாய் பொடி, உப்பு,கரம் மசாலா,மல்லி பொடி,தேங்காய் பொடி,(கொஞ்சமே கொஞ்சமா அரிசி மாவு or கடலை மாவு - ஒரு ஸ்பூனுக்கு மேல் சேர்க்க வேண்டாம்,) சிறிது நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல ஆனால் அதைவிட கொஞ்சம் திக் க்கா பண்ணிகோங்க ..
* இப்போது கட் பண்ணி வைத்துள்ள முட்டை மீது இந்த மசாலாவை தடவி, தோசைகல்லில் 2 ஸ்பூன் எண்ணெய் போட்டு fry பண்ணவும்...அவ்ளோ தான் முட்டை கபாப் ரெடி...
* இதை அப்படியே சாப்பிட்டாலும் நல்லா தான் இருக்கும்.. இன்னும் டேஸ்ட்ட சாப்பிடனும்னா மஞ்சூரி பண்ணிக்கலாம்

இந்த புதுமையான, சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :)

Wednesday, May 13, 2015

பேகன் வித் முட்டை



செய்முறை: 

* பேகனை சிறிது துண்டங்களாக வெட்டி காடாயில்  வதக்கவும்.
* இப்போது நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்  (பாகனில் இருந்து வெளிவரும் கொழுப்பில் வெங்காயம் வதங்கிவிடும்)
* வெங்காயம் வதங்கியதும் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி,நன்கு  சுருண்டு வரும் வரை வறுத்து இறக்கவும்.

செய்முறை: Mythili Thiyagu

ஆட்டுக்கால் பாயா

Attukal Paya Recipie for 1 attukal ( 2 legs will be there): 1 set attukal should be rinsed in water thoroughly ( see to that it is sutta kaal which we can cook directly, if not then the process is tedious), 2 onion, 2 tomatto, 3-4 spoons of malli/ Dhania vidai, 5 nos dried red chilly, 3-4 green chillies, 1 big piece or 25 grams of ginger, 50 grams of garlic, 2-3 spoons of pepper depends on you spice level, curry and coriander leaves, 1/2 moodi coconut scraped and taken milk. Preparation: Usually the attukal should be bought previous day night, clean the attukal thouroughly add enough amount of water and pressure cook it for atleast 30 minutes. switch off the fire and keep aside for the whole night. Next day saute the Dania, red chilly, pepper with little oil and keep aside, 1 onion cut into pieces, 1 tomato cut into peices, ginger, garlic, green chillis saute in oil and keep it for cooling. First powder the dania, redchilly and pepper and then add the remaining ingredients and make it into a nice paste. Take the coconut milk. Take a wide mouth vessel, add oil, add cinnamon, cloves, annachi poo, after it splitter add the remaining onion fry it and add the tomoatto once it is done, add the attukal and nicely saute and add the soup of attukal into it and make it to slightly boil and add the grinded masala and add salt, check the attukal has cooked soft if not again keep it for 3 to 4 whistles, once it is nicely boiling add the coconut milk and make it to boil for 5 minutes and sprinkle the coriander leaves here your attukal paya is ready. If it is soup you no need to add Daniya and coconut milk and no need to add the onion and tomato paste, the preparation is same like other soups only. Before adding coconut milk to the paya just check the spice and salt if the spice is less you can add pepper powder or chilly powder according to your spice level and make it to boil for one more time and then add the coconut milk. Attukal paya is very healthy for respiratory issues, strength of the bones and it improves your immunity. - By Vijayapriya Panneerselvam


சுவையான இறால் வறுவல்




தேவையான பொருட்கள்:
இறால் அரை கிலோ
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மல்லி தூள் அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
தேங்காய் தேவையான அளவு
பட்டை = 2
கிராம்பு = 3


செய்முறை:
* முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும்.
* பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்
* பின்பு மஞ்சள்தூள் மிளகாய் தூள் மல்லி தூளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும், பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும்
* தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்கவும். இறால் வருவல் ரெடி - kavitha kuppusamy


- by Anbu http://www.vanangal.com/2013/03/blog-post_2872.html . 

வெஜிடபிள் கட்லெட்



தேவையான பொருட்கள் :
1 காலிபிளவர்
1 குடைமிளகாய்
1 வெங்காயம்
1 கராட்
1 சிறிய துண்டு மஞ்சள்பூசணி
3 ஸ்லைஸ் சீஸ்
50 கிராம் பாதாம்
3 டீ ஸ்பூன் பிளக்ஸ் சீட்ஸ்
25 கிராம் பிஸ்தா
கொத்தமல்லி சிறிய கட்டு
பச்சை மிளகாய் தேவையான அளவு
சீரகம் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கரமசாலா பொடி 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க தேங்காய் எண்ணை
ரோஸ்ட் செய்ய நெய்

செய்முறை :
* குடைமளகாயையும் வெங்காயமும் பொடியாக நறுக்கி கொள்ளவும் . மீதி காய்கறிகளை பிரஷர் குக்கரில் வைத்து நன்றாக வேகவைக்கவும். பின்னர் பிரஷர்குக்கரில் உள்ள நீரை வடித்துவிட்டு காய்கறிகளை நன்றாக மசித்து கொள்ளவும். கொத்தமல்லியையும் பச்சைமிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் வைத்துகொள்ளவும் . பாதாம், பிளக்ஸ் சீட்ஸ், பிஸ்தா ஆகியவற்றை நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் .
* வாணலியில் தேங்காய் எண்ணை விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும். அதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய குடைமிளகாயை அதனுடன் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் பொடி, கரமசாலா பொடி, அரைத்த கொத்தமல்லி விழுதுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்தவுடன், பொடித்து வைத்துள்ள நட்ஸ் பொடியை கொஞ்சம் தூவி கலக்கவும்.
* சிறிது சூடு ஆறியவுடன் , சிறிதாய் நறுக்கிய சீஸ் துண்டுகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டி மீதமுள்ள நட்ஸ் பொடியில் பிரட்டிக்கொண்டு சிறிய கட்லட் போல தட்டிகொள்ளவும் .
* தட்டிய கட்லட் துண்டுகளை தோசை கல்லில் போட்டு நெய் விட்டு மிதமான தீயில் இரண்டுபுறமும் சிவக்கும் வரை ரோஸ்ட் செய்து எடுத்தால், சுவையான ஆரோக்கியமான பேலியோ வெஜிடபிள் கட்லட் ரெடி !!


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Senthil Kumar " அவர்களுக்கு நன்றி :)




Pan Fried butter Chicken (100th post)



தேவையான பொருட்கள்: 
சிக்கன் லெக் - 4 துண்டங்கள்
அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன்
எழுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
வெண்ணெய்  - 1 டேபிள்ஸ்பூன்

அரைக்க:
வெந்நீரில் ஊறவைத்த சிவப்பு மிளகாய் - 8
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1/2 இன்ச்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* மேலே அரைக்க கொடுத்தவைகளை மை போல அரைத்து வைக்கவும்.
* சிக்கனை கத்தி முனையால் கீறி, அரைத்த மசாலாவில் எழுமிச்சை சாறு கலந்து, சிக்கனில் தடவி, பிரிட்ஜ்ல் குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
* ஒரு பேனில் (pan)  வெண்ணெய் சேர்த்து மிதமாக சூட்டில் காயவைக்கவும்.
* இதில் மசாலா தடவி, ஊறவைத்த சிக்கன் சேர்த்து வேகவிடவும். எல்லா பாக்கமும் திருப்பி விட்டு நன்கு வெந்ததும், வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu

zucchini பொரியல்




தேவையான பொருட்கள்:
zucchini - 2
வெங்காயம் - 1/2
கடுகு  - 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* zucchini சிறு துண்டங்களாக அறுத்து வைக்கவும்.
* ஒரு காடாயில் தேங்காய் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
* இப்போது காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி..அடுப்பில் இருந்து எடுத்துவிடவும்.


சமையல் குறிப்பு: Mythili Thiyagu

Sunday, May 10, 2015

காய்கறி அவியல்



தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் , கேரட்முருங்கைவாழை மற்றும் பேலியோ காய்கள் 
தேங்காய் எண்ணெய் 
உப்பு

மசாலா அரைக்க தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி  
பச்சை மிளகாய்  - 2 
சின்ன வெங்காயம் - 1 
தயிர் - 1-1/2 கப் 

தாளிக்க:
தேங்காய் எண்ணெய்  
கடுகு 
கறிவேப்பிலை 

செய்முறை:
* கத்தரிக்காய் , கேரட், முருங்கை, வாழை மற்றும் பேலியோ காய்கள் அனைத்தும் கூட ஒகே தான். இதை நீள நீளமாய் கட் பண்ணுங்க. பாத்திரத்தில் தாரளமாக தேங்காய் எண்ணெய் விட்டு (அவியலுக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தனும்) நறுக்கிய காய் களை போட்டு 2 நிமிடம் வதக்கனும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் போல் நீர் சேர்த்து காய்களை வேக விடவும். (அரைக் கிலோவிற்கு 50 to 80 மி.லி நீர் போதுமானது). 
*  இப்ப இந்த சைடு கேப்ல மசாலா ரெடி பண்ணலாம் வாங்க... ஒரு கப் துறுவிய தேங்காய், சீரகம் (பச்சமிளகாய், சின்ன வெங்காயம-1, ஒன்னரை கப் தயிர்.. இது அனைத்தையும் மிக்ஸியில் அரைச்சா மசாலா ரெடி.. ஒகே காய் வெந்துருச்சானு பாருங்க.80% வேக வைத்தால் போதும். இப்ப மிக்ஸியில் உள்ள மசாலாவை காயுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறுங்க.. திக் செமி கிரேவி பதத்தில் சாப்பிடுங்கள்.. * கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.அமிர்தமாய் இருக்கும்.. இது தமிழக தென் மாவட்டங்களில் மிகப் பிரபலம்.




இந்த பாரம்பரிய, என்றும் புதுப்பொழிவுடனும், அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும் இந்த அவியல் சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai" அவர்களுக்கு நன்றி :)






பன்றிகறி தோரன்


தேவையான பொருட்கள்:
பன்றி இறைச்சி 
சின்ன வெங்காயம் 
கறிவேப்பிலை 
மஞ்சள் போடி 
இஞ்சி பூண்டு விழுது 
தேங்காய் எண்ணெய் 
உப்பு 

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 
கடுகு 

அரைக்க:
தேங்காய்
சோம்பு
பூண்டு 2 பல் 

செய்முறை:
* இறைச்சியை சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் தே.எண்ணை சூடானதும் நறுக்கிய சின்னவெங்காயம், உப்பு போடவும்,
* வெங்காயம் வதங்கியபின் மஞ்சள்பொடி, கறிவேப்பிலை, இஞ்சிபூண்டுபேஸ்ட் போட்டு பச்சைவாடை போகும்வரை வதக்கவும்.
* பின் இறைச்சி போட்டு கிளறி விட்டு குக்கரை மூடி ஐந்து விசில் (தண்ணீர் ஊற்றகூடாது)
* மற்றொரு வாணலியில் தே.எண்ணை விட்டு சூடான பின் கடுகு (டப்...டப்) பின் குக்கரிலுள்ள இறச்சி
மையாக இல்லாமல் பருமனாக அரைத்த அரவை (தேங்காய்+ சோம்பு+ பூண்டு(இரண்டு பல்))
போட்டு தண்ணீர் வற்றி நெய் மிதக்கும் வரை கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.

குறிப்பு: ஆட்டிறைச்சியானாலும், மாட்டிறைச்சியானாலும் ரெசிப்பி இது தான் 
குக்கர் விசில் தான் எண்ணிக்கையில் மாறுபடும்.

இந்த சுவை மிகுந்த பேலியோ பன்றிகறி தோரன் சமையல் குறிப்பினை வழங்கிய "Kirshnakumar A S" அவர்களுக்கு நன்றி :)





Wednesday, May 6, 2015

பேக்டு சிக்கன்





தேவையான பொருட்கள்:
சிக்கன் லெக் பீஸ் - 2 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - சிறிது 
கரம் மசாலா - 2 தேக்கரண்டி 
வரமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 
மிளகு தூள் - சிறிது 
உப்பு தேவையான அளவு 
எலுமிச்சை சாறு  - 1/2 பழம் 

செய்முறை:
* சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும் .
* மேலே கொடுத்த அனைத்தையும், சிக்கனுடன் ஒன்றாக கலந்து குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும். 
* ஓவனை 350 டிகிரி சூட்டில் வைத்து, 1 மணிநேரம் வேக வைக்கவும். (30 நிமிடத்தில் சிக்கனை மறுபுறம் திருப்பி வைக்கவும்).
* கடைசியாக 10-15 நிமிடங்கள் ப்ராயில் (Broil Mode) மோடில் வைத்து வறுத்து எடுக்கவும். 
* சூடான பேக்டு சிக்கன் ரெடி.

இந்த சுவை மிகுந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Aarthy Karthik"அவர்களுக்கு நன்றி :)

புகைப்படம்: Mythili Thiyagu

Tuesday, May 5, 2015

சிக்கன் பிரியாணி


For Marination: 
-ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, மல்லி பொடி , மிளகாய் பொடி சீரகப் பொடி (அல்லது பிரியாணி பொடி இருந்தால் அது மட்டும் போதும்), உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஒரு கப் தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். இரண்டு ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து மசாலா பேஸ்ட் போல பண்ணவும்.பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிசையவும். இதனுடன் நறுக்கிய புதினா , கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து பிசைந்து பின் 6 மணி நேரம் ஊற வைக்கவும். (அல்லது நைட் முழுவதும் ப்ரிட்ஜில் வைத்து விடவும் ) (Minimum marination 6 hours).


Preparation: 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற வைத்த சிக்கனை பரப்பி வைக்கவும்.chicken must be in contact with bottom and sides of the vessel. பின் சிறிது புதினா இலையை அதன் மேல் பரப்பி நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸை (முட்டைக்கோஸ உப்பு சுடுநீரில்10 நிமிடம் ஊற வைத்து நீரை வடிகட்டிய பின்-பிரியானிக்கு நீர் ஒரு சொட்டு கூட இருக்ககூடாது ) பரப்பி வைக்கவும். உடனே பாத்திரத்தை இறுக மூடி அதன் மேல் ஒரு வெயிட் வைக்கவும் (வெயிட் வைப்பது தம் effective ஆக இருப்பதிற்கு மட்டுமே. பாத்திரத்தின் மூடி தம் போடும் அளவிற்கு டைட்டாக இருந்தால் வெயிட் தேவையில்லை) பின் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி முதல் 5 - 8 நிமிடம் high flame பின் medium/low flame 20 நிமிடங்கள் வைத்து பின் அடுப்பை அணைக்கவும். பிரியாணி ரெடி. .10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பரிமாறவும்.


இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :)

Monday, May 4, 2015

பன்னீர் மஞ்சூரியன்


தேவையான பொருட்கள்:
பனீர்-100g (cubes) 
வெங்காயம் பெரியது-1
கேரட் துருவியது- 1 கையளவு 
காப்சிகம் -1
கெட்டி தயிர்-50ml

செய்முறை:
ஸ்டார்ட் மியூசிக் :தயிர் கெட்டியாக இருப்பது அவசியம்.கெட்டி தயிர் கிடைகவில்லையெனில் ஒரு வெள்ளை துணி அல்லது மஸ்லின் பேப்பர் மூலம் வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த தயிறுடன் மிளகாய் பொடி,கரம் மசாலா பொடி,உப்பு  போட்டு நன்றாக மிக்ஸ் பண்ணவும்.பின் சின்ன சின்னதாய் கட் பண்ணின வெங்காயத்தில் பாதி,காப்சிகம்,கேரட் போட்டு மிக்ஸ் பண்ணி ஒரு மணி நேரம்  ஊற வைக்கவும்   

பின் ஒரு தவாவில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் போட்டு தாளித்ததும் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும். பின் பன்னீர் மிக்ஸ் அதில் போட்டு நன்றாக வேகவிடவும்.அவ்வப்போது கிளறி விடவும்.இப்போது சிறிது மஞ்சள் பொடி,கரம் மசாலா தூவி கிளறவும்.பன்னீர் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். காரம்  கொஞ்சம் ஜாஸ்தி போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.விருப்பபட்டால் சிறிது லெமன் பிழிந்து விடலாம்.

இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :)