தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-பொடிப்பொடி துண்டுகள்
காப்சிகம்-5 (காம்புடன்)
தூளாக்கிய பன்னீர் - 1 ஸ்பூன்
மசாலா பொடி ,உப்பு, நெய்
செய்முறை:
காப்சிகிமை படத்தில் உள்ளது போல் நறுக்கி துளை செய்து கொள்ளுங்கள்.
மசாலா பொடியை நீர்,உப்பு விட்டு பேஸ்ட் போல் செய்து காப்சிகத்தின் வெளிப்புறத்தில் நல்லா மசாலாவை தடவுங்கள்.3 முட்டை,வெங்காயம் சேர்த்து ஆம்லெட் கலவை செய்து அதனுடன் பண்ணேர் தூளை சேர்த்து காப்சிகத்தின் துளையில் உள்ளே ஊற்றி காம்பை வைத்து மூடி,தவாவில் சிறிது நெய் விட்டு அதில் மீன் வறுப்பது போல அப்பப்ப திருப்பி போட்டு வேக விடுங்கள்...மிதமான தீயில் 10 நிமிடம் வறுத்தால் சரியாக இருக்கும்..
தக்காளி சட்னியுடன் அமோகமாக இருக்கும்.
இந்த புதுமையான மற்றும் சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :).
No comments:
Post a Comment