தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் , கேரட், முருங்கை, வாழை மற்றும் பேலியோ காய்கள்
தேங்காய் எண்ணெய்
உப்பு
மசாலா அரைக்க தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 1
தயிர் - 1-1/2 கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
செய்முறை:
* கத்தரிக்காய் , கேரட், முருங்கை, வாழை மற்றும் பேலியோ காய்கள் அனைத்தும் கூட ஒகே தான். இதை நீள நீளமாய் கட் பண்ணுங்க. பாத்திரத்தில் தாரளமாக தேங்காய் எண்ணெய் விட்டு (அவியலுக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தனும்) நறுக்கிய காய் களை போட்டு 2 நிமிடம் வதக்கனும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் போல் நீர் சேர்த்து காய்களை வேக விடவும். (அரைக் கிலோவிற்கு 50 to 80 மி.லி நீர் போதுமானது).
* இப்ப இந்த சைடு கேப்ல மசாலா ரெடி பண்ணலாம் வாங்க... ஒரு கப் துறுவிய தேங்காய், சீரகம் (பச்சமிளகாய், சின்ன வெங்காயம-1, ஒன்னரை கப் தயிர்.. இது அனைத்தையும் மிக்ஸியில் அரைச்சா மசாலா ரெடி.. ஒகே காய் வெந்துருச்சானு பாருங்க.80% வேக வைத்தால் போதும். இப்ப மிக்ஸியில் உள்ள மசாலாவை காயுடன் சேர்த்து 2 நிமிடம் கிளறுங்க.. திக் செமி கிரேவி பதத்தில் சாப்பிடுங்கள்.. * கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.அமிர்தமாய் இருக்கும்.. இது தமிழக தென் மாவட்டங்களில் மிகப் பிரபலம்.
இந்த பாரம்பரிய, என்றும் புதுப்பொழிவுடனும், அனைவருக்கும் பிடித்ததாகவும் இருக்கும் இந்த அவியல் சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai" அவர்களுக்கு நன்றி :)
Boss,this recipe is side dish or we should have it as main dish ? Im planning to start paleo. Pls advise.
ReplyDeleteMain dish in paleo. But dont use vazalkai
ReplyDelete