Saturday, May 23, 2015

ஹலீம்

ஹலீம் என்பது ஒரு இராணிய உணவு வகை. கோதுமையை முக்கியமான உள்ளடக்கமாகக் கொண்டு செய்யப்படுவது. ஹைதராபாதி உணவாக அதை மாற்றிய போது துவரம்பருப்பு, பாசிப் பருப்பு போன்றவற்றுடன் அதைச் செய்யத் தொடங்கினர். பேலியோவுக்கு ஆகாத பொருட்களைத் தவிர்த்து நமக்கான உணவாகக் கடந்த வாரம் அதை மாற்றிச் செய்து பரிசோதித்த போது நன்றாக வந்திருந்தது.
அதன் செய்முறை விவரங்கள் பின்வருமாறு.

தேவையான பொருட்கள் (நால்வருக்கு):
காலிப்ளவர் - 1 கிலோ (சுத்தம் செய்த பிறகு)
முட்டைக் கோசு - 250 கிராம்
மட்டன் அல்லது சிக்கன் - 500 கிராம்
நெய் - 200 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு எடுத்துப் பொடித்தது
பாதாம் 20 எண்ணம்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் 100 கிராம்
சிக்கன் தோல் அல்லது மட்டன் சுற்றுக் கொழுப்பு 100 கிராம்
மிளகு - 40 எண்ணம்
பச்சை மிளகாய் 4 குறுக்கே அரிந்த முழு மிளகாய்
மல்லித் தூள், மிளகாய்த் தூள் அவரவர் விரும்பும் காரம் மணத்துக்கு ஏற்றவாறு
செய்முறை
பாகம் 1 - ஹலீம்:
காலிப்ளவர், முட்டைக் கோசு, மிளகு (2 மணி நேரம் ஊற வைத்தது) இவற்றைக் கிரைண்டரில் அறைத்து ஈரம் குறைவான கெட்டி பேஸ்ட்டாக எடுத்து ஓரமா வைக்கவும்.
மட்டனை/சிக்கனை தண்ணீர் விட்டு 15 விசில் வேக விடவும். அதிகம்னு நெனைக்க வேணாம், மட்டன்/சிக்கன் லேயர் லேயரா பிரியறதுக்கு இந்த வேக்காடு அவசியம். ஒரு ஒரு ஸ்பூனிலும் கறி நம் வாயில் அகப்பட வேண்டும்.
பெரிய பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பிலேற்றி 100 மில்லி நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலப் பொடியை இட்டு பொறிய விடவும். அரிந்த மிளகாய், மல்லி மிளகாய்த் தூள் உடன் உப்பும் இட்டு அதையும் வதங்க விடவும். இப்போது ஓரமா வைச்ச பேஸ்ட்டையும் வேக வைத்த இறைச்சியுடன் (கறி வேவிச்ச தண்ணியுடன் சேர்த்து) அடுப்பைக் கிளறவும். நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். கறி சூப் மற்றும் பதார்த்தங்களில் இருக்கக் கூடிய ஈரம் சுண்டும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும். ஈரம் சுண்டி விட்டது தெரிந்தால் இன்னொரு 60 மில்லி நெய் விட்டு நன்கு கிளறவும்.

பாகம் 2 - சூப்:
சுற்றுக் கொழுப்பு அல்லது சிக்கன் தோலை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 விசில் விட்டு இறக்கவும். பட்டைக் கிராம்பு தாளித்து வேண்டிய உப்பு சேர்த்து அதில் அந்த சூப்பை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

பாகம் 3:
20
பாதாம் பருப்புகளைக் கழுவி ஈரம் போக உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீளவாக்கில் அரிந்து நெய்யில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நெய் விட்டு வெங்காயத்தை ஈரம் போக கரகரப்பாக வறுத்து எடுத்து வையுங்கள்.
பரிமாறும் விதம்:
அகன்ட குழிவான தட்டில் முதலில் ஹலீமைப் பறிமாறி அதன் மேல் நெய்யில் பொறித்த பாதாமைத் தூவவும். அதன் மேல் ஒரு கரண்டி சூப்பை ஊற்றி கரகர வெங்காயச் சீவல்களை மேலே தூவிப் பறிமாறலாம். பாதி முட்டையை அரிந்து மேலே வைத்து கொடுத்தா இன்னும் சூப்பர்.
தலா 250 கிராம் பறிமாறினால் 4 முதல் 6 பேர் வரை கூட பறிமாறலாம்.

இந்த அருமையான,சுவைமிக்க மற்றும் புதியமுறையில் சமையல் குறிப்பினை வழங்கிய "விஜய் கோபால் சாமி "அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment