தேவையான பொருட்கள்:
பன்றி இறைச்சி
சின்ன வெங்காயம்
கறிவேப்பிலை
மஞ்சள் போடி
இஞ்சி பூண்டு விழுது
தேங்காய் எண்ணெய்
உப்பு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்
கடுகு
அரைக்க:
தேங்காய்
சோம்பு
பூண்டு 2 பல்
செய்முறை:
* இறைச்சியை சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் தே.எண்ணை சூடானதும் நறுக்கிய சின்னவெங்காயம், உப்பு போடவும்,
* வெங்காயம் வதங்கியபின் மஞ்சள்பொடி, கறிவேப்பிலை, இஞ்சிபூண்டுபேஸ்ட் போட்டு பச்சைவாடை போகும்வரை வதக்கவும்.
* பின் இறைச்சி போட்டு கிளறி விட்டு குக்கரை மூடி ஐந்து விசில் (தண்ணீர் ஊற்றகூடாது)
* மற்றொரு வாணலியில் தே.எண்ணை விட்டு சூடான பின் கடுகு (டப்...டப்) பின் குக்கரிலுள்ள இறச்சி +
மையாக இல்லாமல் பருமனாக அரைத்த அரவை (தேங்காய்+ சோம்பு+ பூண்டு(இரண்டு பல்))
போட்டு தண்ணீர் வற்றி நெய் மிதக்கும் வரை கிளறிவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
குறிப்பு: ஆட்டிறைச்சியானாலும், மாட்டிறைச்சியானாலும் ரெசிப்பி இது தான்
குக்கர் விசில் தான் எண்ணிக்கையில் மாறுபடும்.
இந்த சுவை மிகுந்த பேலியோ பன்றிகறி தோரன் சமையல் குறிப்பினை வழங்கிய "Kirshnakumar A S" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment