Wednesday, May 13, 2015

வெஜிடபிள் கட்லெட்



தேவையான பொருட்கள் :
1 காலிபிளவர்
1 குடைமிளகாய்
1 வெங்காயம்
1 கராட்
1 சிறிய துண்டு மஞ்சள்பூசணி
3 ஸ்லைஸ் சீஸ்
50 கிராம் பாதாம்
3 டீ ஸ்பூன் பிளக்ஸ் சீட்ஸ்
25 கிராம் பிஸ்தா
கொத்தமல்லி சிறிய கட்டு
பச்சை மிளகாய் தேவையான அளவு
சீரகம் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கரமசாலா பொடி 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க தேங்காய் எண்ணை
ரோஸ்ட் செய்ய நெய்

செய்முறை :
* குடைமளகாயையும் வெங்காயமும் பொடியாக நறுக்கி கொள்ளவும் . மீதி காய்கறிகளை பிரஷர் குக்கரில் வைத்து நன்றாக வேகவைக்கவும். பின்னர் பிரஷர்குக்கரில் உள்ள நீரை வடித்துவிட்டு காய்கறிகளை நன்றாக மசித்து கொள்ளவும். கொத்தமல்லியையும் பச்சைமிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் வைத்துகொள்ளவும் . பாதாம், பிளக்ஸ் சீட்ஸ், பிஸ்தா ஆகியவற்றை நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும் .
* வாணலியில் தேங்காய் எண்ணை விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும். அதனுடன் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய குடைமிளகாயை அதனுடன் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் பொடி, கரமசாலா பொடி, அரைத்த கொத்தமல்லி விழுதுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியவுடன் மசித்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். அடுப்பை அணைத்தவுடன், பொடித்து வைத்துள்ள நட்ஸ் பொடியை கொஞ்சம் தூவி கலக்கவும்.
* சிறிது சூடு ஆறியவுடன் , சிறிதாய் நறுக்கிய சீஸ் துண்டுகளை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டி மீதமுள்ள நட்ஸ் பொடியில் பிரட்டிக்கொண்டு சிறிய கட்லட் போல தட்டிகொள்ளவும் .
* தட்டிய கட்லட் துண்டுகளை தோசை கல்லில் போட்டு நெய் விட்டு மிதமான தீயில் இரண்டுபுறமும் சிவக்கும் வரை ரோஸ்ட் செய்து எடுத்தால், சுவையான ஆரோக்கியமான பேலியோ வெஜிடபிள் கட்லட் ரெடி !!


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Senthil Kumar " அவர்களுக்கு நன்றி :)




No comments:

Post a Comment