தேவையான பொருட்கள்:
தக்காளி - 4 பழுத்த பழம்
காலிபிளவர் - 1/4 பூ
வெங்காயம் - 1/2
பேசில் - 1/2 கப்
தேங்காய் பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல் தட்டியது
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின் வெண்ணெய் சேர்க்கவும்.
* இத்துடன் தட்டிய பூண்டு பற்கள்,பச்சை மிளகாய் சேர்த்து சிறுது வதக்கவும்.
* இப்பொழுது நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து, உப்பு தூவி 3 நிமிடங்கள் வதக்கவும்.
* இதில் நறுக்கிய காலிபிளவர் சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேக வைக்கவும்.
* இந்த தக்காளி,காலிபிளவர் கலவை பாதி வெந்ததும் பேசில் இலைகளை சேர்க்கவும் (சிறிது தனியாக எடுத்துவைக்கவும்).
* நன்கு கொதிவந்ததும் தேங்காய் பால் சேர்த்து சிறு தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
* இந்த சூப்பினை அடுப்பில் இருந்து எடுத்து, hand mixer ல் சூப் பதத்திற்கு அடிக்கவும்.
* சிறிது தனியாக எடுத்து வைத்த பேசில் இலைகளைத்துத் தூவி விடவும்.
* சுவையான தக்காளி பேசில் காலிபிளவர் சூப் ரெடி.
இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Kavitha Sundar"அவர்களுக்கு நன்றி.
புகைப்படம்: மைதிலி தியாகு