Monday, August 24, 2015

காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்



தேவையான் பொருட்கள்:
காலிஃப்ளவர் துருவி பிழிந்தது - 300 கிராம்
சிகப்பு மிளகாய்- 1 (மிகுந்த காரம் உள்ளது)
பச்சை மிளகாய்- 1
ஸ்பிரிங் ஆனியன் - 4 செடி (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு துண்டு குச்சி குச்சியாக நறுக்கியது
பூண்டு- 2 பல் குச்சி குச்சியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சால்ட்- தேவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன் அல்லது விருப்பம் போல்

செய்முறை:
* ஃப்ரை பேனில் தேங்காய் எண்ணெய்யை விட்டு நறுக்கி வைத்து இருக்கும் ஸ்பிரிங் ஆனியனில் பாதியை போட்டு வதக்கவும் பின்பு இஞ்சி, பூண்டு தொடர்ச்சியாக மிளகாய்களை போட்டு மிளகாய் சாஃப்ட் ஆகும் வரை வதக்கவும். 
* பின்பு பிழிந்து வைத்து இருக்கும் காலிஃப்ளவர் துருவலை போட்டு உப்பு சேர்த்து லைட் ஆக ப்ரவுன் ஆகும் வரை அல்லது காலிஃப்ளவர் வேகும் வரை வதக்கவும். 
* காலிஃப்ளவர் வெந்ததும் மீதம் இருக்கும் ஸ்பிரிங் ஆனியன் மற்றும் கொத்துமல்லி இலையை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பிரிட்டனின் புகழ் பெற்ற செஃப் ஜேமி ஆலீவரின் (Jame Oliver) சமையல் குறிப்பு.
விருப்பம் உள்ளவர்கள் இதில் கேரட் மற்றும் காப்சிகம் பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம். (நான் சேர்த்து இருக்கேன்)

இந்த புதுமையான,சுவையான & ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி.

கேரளா ஸ்டைல் தேங்காய்பால் மட்டன்



தேவையான பொருட்கள்:
மட்டன் - 200 கிராம்
மிளகாய் பொடி - 3 ஸ்பூன் ( காரம் அதிகம் உள்ளது)
இஞ்சி - கட்டை விரல் அளவு ஒரு துண்டு
கறுவேப்பில்லை - சிறிது
உப்பு- தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
தேங்காய் பால்- 250 எம் எல் டின் அல்லது கறி மூழ்கும் அளவு.

செய்முறை:
* மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி வாணலியி இட்டு அத்துடன் மிளகாய் பொடி, பொடியாக வெட்டிய இஞ்சி, கறுவேப்பில்லை, உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை விட்டு பிசறி வைக்கவும். 10 நிமிசம் இருந்து 30 நிமிஷம் வரை ஊற வைக்கலாம்.
* பின்பு கறி மூழ்கும் வரை தேங்காய் பாலை விட்டு கேஸில் சிம்மில் வைத்து வேகவிட்டு கறி வெந்து சுண்டி திக் குழம்பு பக்குவத்தில் வரும் போது இறக்கவும்.
* இதை மேற்கொண்டு சுண்டவிட்டு செமி டிரையாக எடுத்து அப்படியேவும் சாப்பிடலாம்.
குறிப்பு: எந்தவிதமான மசால பொருட்களும் கலக்காத கறியின் ஒரிஜனல் டேஸ்ட்யை தேங்காய்பாலோட சேர்த்து கொடுக்கும் டிஷ் இது.

இந்த சுவையான & ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி.

மட்டன் கொழுப்பு வறுவல்


தேவையான பொருட்கள்:
மட்டன் கொழுப்பு - 200gm
சின்ன வெங்காயம் - 10 nos ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1tsp
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/4 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
தேங்காய் எண்ணெய் - 2 tbl ஸ்பூன் (அ) வெண்ணை - 10gm
உப்பு , மிளகு தூள் - தேவையான அளவு 

செய்முறை: 
* கடாயில் தே எண்ணெய் / வெண்ணை காயவைத்து வெங்காயம், கருவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வணக்கவும். 
* நன்கு வணங்கிய பின் மட்டன் கொழுப்பு, மஞ்சள் தூள் , மிளகாய் தூள் போட்டு வணக்கவும். மட்டன் கொழுப்பில் இருக்கும் தண்ணீர் ஏற்றவாறு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும். 
* மட்டன் கொழுப்பு நன்கு வெந்தவுடன் மிளகு தூள் , கொத்தமல்லி தலை தூவி இறக்கிவிடலாம். மட்டன் கொழுப்பு வறுவல் ரெடி!
இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Sumi Venkat" அவர்களுக்கு நன்றி. 

புகைப்படம்: Selvakumar Guruswamy அவர்களுக்கும் நன்றி.

சிக்கன் சூப் (நாட்டுக்கோழி)



தேவையான பொருட்கள்:
கோழி- 350 கிராம்
வெங்கயம் - 1ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
கொத்துமல்லி விதை- 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 4 (உங்க விருப்பம் போல)
பட்டை- 2 துண்டு
தக்காளி- 1
வெங்காயம்-1 (சிறிய வெங்காயம் என்றால் 50 கிராம்)
பூண்டு - 4 பல்
உப்பு

செய்முறை:
* கோழியை வெட்டி கழுவி மஞ்சள் பொடிபோட்டு பிசறி பின்பு கழுவி வைத்துவிடவும். 
* தனியாக ஒரு பேனில் வெந்தயம், சீரகம்,கொத்துமல்லி,காய்ந்த மிளகாய் , பட்டை எல்லாத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக்கொள்ளவும். 
* கோழியை வாணலியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் வெட்டிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பொடித்த மசாலா , உப்பு சேர்த்து மீடியமில் வைத்து நன்றாக கொதி வந்ததும் சிம்மில் வைத்து சிக்கன் வெந்து அதன் டேஸ்ட் இறங்கும் வரை வைத்து கறுவேப்பில்லை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
* ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்காமல் செய்தது ஆனால் சூப்பின் மீது மிதக்கும் எண்ணெய் பாருங்க அத்தனையும் கோழியின் கொழுப்பு.

இந்த பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி. 

சைவம் - காலிப்ளவர் சூப்






தேவையான பொருட்கள் :
காலிப்ளவர்- 100gm
பெ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 3 பல்
சீரகம் - 1 tsp
மிளகு - 1 tsp
தேங்காய் எண்ணெய் - 2 tbsp
கொத்தமல்லி தூள் - 1/2 tsp


செய்முறை:
* கடாயில் தேங்காய் எண்ணெய் காயவைத்து , சீரகம், பெ வெங்காயம் போட்டு வணக்கவும். பின் காலிப்ளவர் சேர்த்து சிறுது வணக்கிய பின் இஞ்சி, பூண்டு, மிளகு சேர்த்து , இவை அனைத்தும் மூழ்கும் வரை தண்ணீர் வூற்றி வேகவைக்கவும். 
* சிறுது ஆரிய பின் தண்ணீரோடு mixi யில் grind செய்து பரிமாறவும்.

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "கீழைராஜா" அவர்களுக்கு நன்றி.

இந்த சமையல் குறிப்பினை முயற்சித்துப்  புகைப்படம் அனுப்பிய "Sumi Venkat" அவர்களுக்கும் நன்றி.

பொருநன் வறுவல் ரெசிபி






தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கொழுப்பு கால் கிலோ
காளான் கால் கிலோ
தக்காளி 2
பெரிய வெங்காயம்- அரை
உப்பு- 2 டிஸ்ப்பூன்
இறைச்சி மசாலா பவுடர்- 2 டிஸ்பூன்

செய்முறை:
* வாணலியை எண்னெய் இல்லாமல் நன்றாக சூடாக்கவேன்டும். 
* கொழுப்பே எண்ணெய் என்பதால் தனியாக எண்னெய் அவசியம் இல்லை. அதன்பின் அதில் ஆட்டுக்கொழுப்பை இடவேண்டும். 
* கொழுப்பு சூடாகி சற்று உருகதுவங்கியவுடன் அதில் வெங்காயம், தக்காளி, காளானை இட்டு உப்பு, பவுடரை இட்டு நன்றாக கலக்கவேண்டும். 
* ஒரு ஏழெட்டு நிமிடத்தில் சுவையான பொருநன் வறுவல் தயாராகிவிடும்.

இந்த சுவையான மற்றும் பாரம்பரிய உணவினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

பேலியோ- கறிமசால் பொடி





தேவையான பொருட்கள்: 
வரமிளகாய்-1/4 கிலோ
நாட்டுகொத்தமல்லி-1/2கிலோ
மிளகு100 gm
சீரகம் 150gm
சோம்பு 100gm
கசகசா 50gm
பட்டை 25gm
லவங்கம் 25gm 
ஏலக்காய் 10gm 
ஜாதிபத்ரி 10gm
கல்பாசி10gm
அன்னாசிமொக்கு10gm
மராட்டி மொக்கு 10gm 

செய்முறை:
அனைத்து சாமான்களையும் காயவைத்து வறுத்து அரைக்கவும்

குறிப்பு: கறிமசால்,வெஜ் -நான்வெஜ் ரெண்டுக்குமே யூஸ் பண்ற மெயின் இன்ரியெண்ட்னு சொல்லலாம். 

இந்த பாரம்பரிய மற்றும் பேலியோ உணவிற்குத் தேவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Ms-saranya Mohan"அவர்களுக்கு நன்றி :)





பேலியோ சாம்பார் பொடி/குழம்பு மிளகாய் பொடி


தேவையான பொருட்கள்:
வரமிளகாய்-1/4 கிலோ
நாட்டு வரகொத்தமல்லி-1/4கிலோ
மிளகு-50கிராம்
சீரகம்-100 கிராம் வெந்தயம்-50கிராம்
கடுகு 25கிராம் கருவேப்பிலை150கிராம் 

செய்முறை:
அனைத்தையும் வெயிலில் காயவைத்து வறுத்து அறைக்கவும்.(கடையில் வாங்கும் சாம்பார் பொடியில் கடலைபருப்பு அரிசி கலந்திருக்கும்)

இந்த பாரம்பரிய மற்றும் பேலியோ உணவிற்குத் தேவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Ms-saranya Mohan"அவர்களுக்கு நன்றி :)

ரோஸ்மில்க்



தேவையான பொருட்கள்: 
காய்ச்சிய பால் - இரண்டு கப்
பீட்ரூட் சாறு - இரண்டு டீஸ்பூன்
பன்னீர் ரோஜா பூ - இரண்டு
ரோஸ் எசன்ஸ் -இரண்டு துளிகள்

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பிரிட்ஜில் வைத்து கூலாக அருந்தலாம்.

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)

காலிபிளவர் வெண்பொங்கல்




தேவையான பொருட்கள்:
காலிபிளவர்
முந்திரி
மிளகு
சீரகம்
தேங்காய் துருவல்
கறிவேப்பிலை
உப்பு

செய்முறை:
* காலிபிளவர் வெந்நீரில் போட்டு எடுத்து துருவிக் கொள்ளவும்.
* முந்திரி பருப்பு நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் நெய்யில் வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். 
* தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து காலிபிளவர் துருவலோடு அனைத்தையும் சேர்த்து கலந்தால் பொங்கல் தயார்.

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)


Wednesday, August 19, 2015

அவகாடோ சால்சா





தேவையான பொருட்கள்:
அவகாடோ பழம் - 2
தக்காளி -1
பெரிய வெங்காயம்- 1
எலுமிச்சம்பழம் -1
சால்ட் & பெப்பர்- தேவைக்கு ஏற்ப
ஜலபினோ மிளகாய்- 3 துண்டு
(பச்சை மிளகாயும் சேர்க்கலாம்)
ஆலீவ் ஆயில்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிது

செய்முறை:
* அவகாடோ, தக்காளி, வெங்காயம், ஜலபீனோ எல்லாவற்றையும் துண்டாக கட் பண்ணி எலுமிச்சை ஜூஸ், ஆலீவ் ஆயில், சால்ட் & பெப்பர் கலந்து அப்படியே சாப்பிடலாம்.
* அதை மிக்சியில் போட்டு அரைத்து வெள்ளரி, கேரட், செலரி, காப்சிகம் ஆகிய காய்கறிகளுடம் டிப் ஆகவும் சாப்பிடலாம். 3 நாட்கள் ஃப்ரிஜில் வைத்து இருக்கலாம்..... மீதம் இருந்தால்..!!

இந்த புதுமையான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

பேலியோ சைனீஸ் உப்பு முட்டை (ITLOG NA MAALAT பிலிப்பைன் மொழியில்)


தேவையான பொருட்கள்:
முட்டைகள் - 12
5 கப் தண்ணீர்
உப்பு - 1 1/2 கப் அல்லது தேவைக்கேற்ப
சிகப்பு அல்லது பிங்க புட் கலர்
வினிகர் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
* 5 கப் தண்ணீரை கொதிக்க விடவும். இத்துடன் உப்பை சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து ஆற விடவும். பின்பு உப்புத் தண்ணீரை மூடியுடன் உள்ள ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக் ஜாரில் மாற்றவும்.
* முட்டைகளில் உப்புத்தண்ணீரில் இடுவதற்க்கு முன்பு உடையாத அல்லது விரிசல் உள்ள முட்டைகளா என்று கவனித்து இடவும். முட்டைகள் நன்றாக உப்பு தண்ணீரில் மிதக்காமல் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வேண்டுமென்றால் சிறிய கப்பை ஜாரின் உள்ளில் வைத்து அழுந்தச் செய்யலாம்.
* முட்டைகளை வெளிச்சம் படாதவாறு குளிர்ந்த இருட்டான இடங்களில் 21 நாட்கள் வைக்கவும். பின்பு ஒரு முட்டையை எடுத்து வேகவைத்து போதுமான உப்பு பிடித்திருக்கிறாதா என்று பாரக்கவும். உப்பு அதிகம் தேவையென்றால் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் அதிகமாக ஊற விடவும்.
* ஊறியவுடன் தண்ணீரை களைந்து கழுவிக்கொள்ளவும். இதை பிரிட்ஜில் பல மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது எடுத்து வேகவைத்து சாப்பிடலாம் அல்லது எல்லாவற்றையும் வேக வைத்தே பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.

இந்த சுவையான,புதுமையான  பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Abdul Farook" அவர்களுக்கு நன்றி :)

ஸ்டிர் ஃப்ரை சிக்கன் வித் வெஜிடபிள்


தேவையான பொருட்கள்:
சிக்கன் - 200 கிராம்
பட்டன் மஸ்ரூம்- 10
செலரி - 2 ஸ்டிக்
கேரட் - 1
வெங்காயம் -1
ரெட் காப்சிகம்- 1
காலிஃப்ளவர்+ப்ரொக்கோலி- 6 துண்டு
டொமோட்டோ சாஸ்- 2 ஸ்பூன்
பெப்பர் பவுடர் - 1 ஸ்பூன்
Cayenne chilly powder- 1/2 ஸ்பூன் ( நார்மல் மிளகாய் தூளும் போடலாம்)
தைம் (thyme )- 3 ஆர்க்

செய்முறை:
* சிக்கனை ஸ்ட்ரிப் ஆக வெட்டிக்கொள்ளவும் தோலுடன், பானில் ஆலீவ் ஆயில் அல்லது வெண்ணெய் சேர்த்து சிக்கனை நன்கு ஸ்ட்ரை ப்ரை செய்யவும் காஸ்யை ஹை ப்ளேமில் வைத்து. லைட் ஆக ப்ரவுன் கலர் வந்தவுடன் சிக்கனை பானில் இருந்து எடுத்துவிட்டு அதே பானில் வெட்டி வைத்து இருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் ஹைப்ளேமில் காய்கள் அரை பதம் வெந்ததும் சிக்கன், சோயாசாய், டொமோட்டோ சாய், பெப்பர், மிளகாய்தூள், உப்பு எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி வாசனைக்கு தைம் சேர்த்து இறக்கவும். கொத்துமல்லி இலையும் சேர்க்கலாம். காய் முக்காபதம் வெந்து இருந்தால் போதும்.


இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

சிக்கன் லெட்டூஸ் கப்




தேவையான பொருட்கள்:
சிக்கன் - 100 கிராம்
கார்லிக் பவுடர் - 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள்- 1/2 ஸ்பூன்
பெப்பர் தூள்- 1/2 ஸ்பூன்
சால்ட் - தேவையான அளவு
டொமேட்டோ பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 2 ஸ்லைஸ்
தக்காளி - 2 ஸ்லைஸ்
வெள்ளரி - 1 துண்டு
லெட்டூஸ் - 2 இதழ்

செய்முறை:
* சிக்கனை கார்லிக் பவுடர்,பெப்பர்,மிளகாய்தூள், சால்ட், டொமேட்டோ பேஸ்ட் போட்டு நன்கு பிரட்டி அரை மணி ஊற வைக்கவும்.
* பின்பு கிரில் செய்து எடுத்து. லெட்டூஸ் இதழில் வைத்து மேலே தக்காளி, வெங்காயம். வெள்ளரி கொண்டு அலங்கரிக்கவும்.
* அப்படியே சுருட்டி சாப்பிடலாம் இல்லை என்றால் உங்கள் மனம் கவரும் டிப்பிங் சாஸ்சுடன் சாப்பிடலாம்.


இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

பாதாம் மில்க்



இது ரொம்ப ஈசி ரெசிபி
எப்படியும் நாம் மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்க்கு என பாதாம் ஊறபோடுவோம் அதில் இருந்து 10 யை இந்தபக்கமா தள்ளி வச்சுக்கோங்க.

தேவையான பொருட்கள் :
ஊற வைத்த பாதம் - 10
ஃபுல் பேட் பால்- 200 எம் எல்
குங்குமப்பூ - 1 பின்ச் (சிட்டிகை)
ஏலக்காய்- 2 தோலுடன்

செய்முறை:
* கொஞ்சம் பால்விட்டு பாதாமை நைஸ் ஆக அரைத்து மீதம் உள்ள பாலில் கலந்து அடுப்பில் வைத்து 2 ஏலக்காயை தோலுடன் லைட் ஆக தட்டி போட்டு ஒரு சிட்டிகை குங்குமப்பூவையும் சேர்த்து பொங்க விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் பாலில் பாதாம் வெந்து லைட் ஆக கெட்டி ஆகும் அப்போது இறக்கிடலாம்.
* லைட் ஆ மஞ்சள் கலர் , குங்குமபூ ஏலக்காய் வாசனையோட பாதாம் மில்க் ரெடி.

வெறும் பால் குடிக்காதவர்கள் கூட குங்குமப்பூ வாசனைக்கு கண்டிப்பாக விரும்பி குடிப்பார்கள்.


இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

Poached Egg




தேவையான பொருட்கள்:
முட்டை - 2
வினிகர் - 3 ஸ்பூன்
கொஞ்சம் - தண்ணீர்.
பெப்பர் சால்ட் - தேவைக்கு

செய்முறை:
* ஒரு pan- ல் அளவாக தண்ணீர் விட்டு அதில் 3 ஸ்பூன் வினிகர் சேர்த்து காயவிட வேண்டும். தண்ணீர் லைட் ஆக கொதிக்கும் போது முட்டையை மஞ்சள் கரு கலங்காமல் உடைத்து விட்டு , கொதிக்கும் நீரை ஸ்பூனினால் மெல்ல முட்டையின் மேல் பாகம் படும் படி லைட் ஆக தள்ளி விட்டு வேக விட்டு எடுத்து பெப்பர் & சால்ட் சேர்த்து சாப்பிடவும்.
* முட்டையின் வெள்ளை கரு வெந்து மஞ்சள் கரு உள்ளே ஆஃப் பாயில் இருப்பது பார்க்கவும் சாப்பிடவும் செம டேஸ்ட் மற்றும் ஹெல்தி.


இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

மஞ்சள் பூசனி சூப் (Pumpkin soup)


தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசனி - 100 கிராம்
கேரட் - 1 சிறியது
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1
cinnamon powder - 1/4 tsp
Nutmeg powder - 1/4 tsp
பிரிஞ்சி இலை -1
ஹாட் பாப்பரிக்கா - 1/2 ஸ்பூன் (இது காஷ்மீரி மிளகாய்பொடி)
சால்ட்- தேவைக்கு ஏற்ப
வெண்ணெய்- 30 கிராம்
திக் ஃப்ரஸ்கிரீம்- 2 ஸ்பூன்

செய்முறை:
* மஞ்சள் பூசனையை தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வாணலியில் இட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் விட்டு வேகவிடவும்
* தனியாக  ஒரு ஃப்ரைங் பேனில் 50 கிராம் வெண்ணெய்யில் வெங்காயம், பூண்டு வதக்கி அத்துடன் பொடியாக வெட்டிய கேரட் ஸ்பைஸ் பொடிகள் எல்லாம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்
* வேக வைத்த மஞ்சள் பூசனியை நீரில் இருந்து வடித்து எடுத்து கேரட் கலவையுடன் சேர்த்து கலக்கவும் அத்தோடு வேகவைத்த நீர் மற்றும் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து கேரட் வெந்ததும் பிளண்டரில் இட்டு அரைத்து பௌலில் விட்டு பறிமாறவும்.இன்னைக்கு டின்னர் பம்கின் சூப்.

இந்த ஆரோக்கியமான, சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "சாந்தி ராஜ்" அவர்களுக்கு நன்றி :)

Paleo style Begun Bhaja, Roasted Cauliflower



தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் 
சீஸ் 
கொத்தமல்லி இலை 

ஊறவைக்க:
தயிர் 
காரப்பொடி 
இஞ்சி & பூண்டு விழுது 
மசாலாத்தூள் 
நெய் 

செய்முறை:
* கத்திரிக்காய் (பெரிது ) அதை மெல்லிசான வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிறிது தயிர்,உப்பு,காரப்பொடி,வீட்டில் செய்த இஞ்சி & பூண்டு விழுது, மசாலா தூள்,கொஞ்சம் நெய் சேர்த்து நன்றாக கலக்கி அதில் கத்திரிக்காய துண்டுகளை ஒரு ஒரு மணி நேரம் marinate செய்து வைக்கவும்.
*  பின் அதை ஒரு baking டிஷ்க்கு மாற்றி மைக்ரோ ஓவென்ல் க்ரில் மோட் பத்து நிமிடம் வைத்து எடுக்கவும்.,மேலே சீஸ்..கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

Roasted Cauliflower

காலிஃப்லவர் துண்டுகளை உப்பு சேர்த்த கொதி நீரில் சிறிது நேரம் வைத்து விட்டு மேலே சொன்ன அதே மாதிரி மசாலா கலவையில நன்றாக பிரட்டி க்ரில் செய்யவும்

இந்த அருமையான,சுவை மிகுந்த பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய  அம்மா "Dolly Bala" அவர்களுக்கு நன்றி :)




Monday, August 17, 2015

முட்டைக் கறி



தேவையான பொருட்கள்: 
வேகவைத்த முட்டை - 4
பெரிய வெங்காயம்  - 1
தக்காளி -1
வெந்நீரில் நனைத்து எடுத்த வரமிளகாய்   - 5
இஞ்சி - 1 இஞ்ச்
பூண்டு  - 4 பல்
மல்லித்தூள் - 1 டேபுள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - சிறிதளவு (அதிகம் போட்டால் கறியின் கலர் மாறிவிடும்)
உப்பு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய்  - 1 டேபுள்ஸ்பூன்
வெண்ணெய்  - 1 டேபுள்ஸ்பூன்
மல்லி இலை

செய்முறை: 
* முட்டையை வேகவைத்து தோலுறித்து வைக்கவும்.
* ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இத்துடன் தக்காளியை பெரிய துண்டங்களாக நறுக்கிப்போட்டு வதக்கவும்.
* இக்கலவை ஆறியவுடன் மல்லித்தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு அரைக்கவும் (கண்  மை போல் அரைக்க வேண்டும்)
* இப்போது அதே வாணலியில் வெண்ணெய் உருக்கி, அரைத்த மசாலா கலவை சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.பின்பு உப்பு சேர்க்கவும்.
* சிறிது தண்ணீர்  சேர்த்துக் கொதிக்க விட்டு, வேகவைத்த முட்டையை 3 புறம் சிறிது கீறி இத்துடன் சேர்க்கவும்.
* மல்லி இலை தூவி பரிமாறவும்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu






Thalana Batu Haalmasso Baduma




தேவையான பொருட்கள்:
தாய்லாந்து பச்சை கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் மீடியம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பல்
கருவேப்பிலை - கொஞ்சம்
ரம்பா இலை - சிறிய துண்டு
சில்லி பிளேக்ஸ் - காரத்திற்கேற்ப 
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மாலத்தீவு கருவாடு - பொடித்தது 
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணை - 2-3 டேபிள்ஸபூன்

செய்முறை:
* கத்தரிக்காய் வாங்கும் போது சிறிய கத்தரிக்காயாக பெரிய நெல்லிக்காய் அளவு உள்ளது வாங்கவும். கத்தரிக்காய்களை கல்லால் தட்டினால் இரண்டாக உடையும். கத்தியால் அறுக்கக்கூடாது. கசப்பாகி விடும். தட்டியதும் தண்ணீரில் போடவும். இல்லாவிட்டால் நிறம் மாறிவிடும். தட்டிய கத்திரிக்காயை ஒரு ஸ்பூனால் உள்ளே உள்ள விதைகளை நீக்கவும். விரலை உபயோகித்தால் கறை ஏற்படும். நன்றாக கழுவி விதைகளை சுத்தமாக நீக்க்கவும். மீனை சுத்தப்படுவது போன்ற வேலை. விதைகள் மிகவும் கடினமாகவும், நிறைந்தும் இருக்கும். நமக்குத்தேவை சதைப்பற்று மாத்திரம்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பூண்டை வதக்கவும். உடனே வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் கருவாட்டு பொடியை போடவும். அத்துடன் சுத்தம் செய்த கத்தரிக்காய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்றவேண்டாம். வேண்டுமென்றால் லேசாக விரலினால் தண்ணீர் தெளிக்கலாம். இப்பொழுது மூடி போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். இடையில் அடிபிடிக்காதவாறு பிரட்டி விடவும். வெந்தவுடன் இறக்கவும்.
* மாலத்தீவு கருவாடு கிடைக்காதவரகள் நெத்திலி கருவாட்டை கழுவி வெங்காயம் போட்டு தாளித்தவுடன் போடலாம். சிறிது முறுகவிடவும். பின்பு கத்தரிக்காய் சேர்க்கலாம்.

குறிப்பு: இந்த ரெசிபி பெயரைப் பார்த்து பயப்பட வேண்டாம்இது நம் ஊர் பெயரில் கருவாட்டு கத்தரிக்காய் பிரை என்று சொல்லாம்இருபது வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டில் ஒரு ஶ்ரீலங்கா சமையல்காரர் ஒருவர் இருந்தார்அவர்கள் ஊர் ரெசிப்பிகளைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்வார்அதனால் தினமும் ஒரு வேளை அவர்கள் சமையலை செய்ய சொல்வோம்சிறிது காரமாக இருந்தாலும் சுவையாக இருக்கும்இவர்கள் அதிகம் கீரைகள்கத்தரிக்காய்தேங்காய்ப்பால்மஞ்சள்குத்து மிளகாய் (chilly flakes), ரம்பா இலைதேங்காய் எண்ணெய்மாலத்தீவு கருவாடு என்று நிறைய சேர்த்துக் கொள்வார்கள்இது பாலாட்டும் தாய்மார்களுக்கு நல்லது என்பதால் இன்று மகளுக்காக சமைத்தது.

இந்த சுவாரசியமான,சுவையான,ஆரோக்கிய  சமையல் குறிப்பினை அனுப்பிய "Abdul Farook"அவர்களுக்கு நன்றி :)




Friday, August 14, 2015

ஈசி சிக்கன் கறி



தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 gms
தயிர் - 100 ml
இஞ்சி பூண்டு விழுது 
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி - 2tbls
மல்லி பொடி
மிளகு பொடி - 2tsp
வினிகர் - 1tsp அல்லது பாதி எலுமிச்சை
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு

ஊறவைக்க
* சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, மிளகு பொடி, வினிகர் அல்லது பாதி எலுமிச்சை, உப்பு சேர்த்து குளிர் சாதன பெட்டியில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்

செய்முறை: 
* ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கறிவேப்பிலை மற்றும் ஊற வைத்த சிக்கனை போட்டு கொதிக்கும் வரை விடவும்
* இடையில் சிக்கனை திருப்பி விடவும், சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது. நன்கு வெந்த பிறகு தண்ணீர் வற்ற விடவும்
* கடைசியில் கொத்தமல்லி தழை போடவும்.

இந்த ஆரோக்கிய ஈசி சிக்கன் கறி சமையல் குறிப்பினை வழங்கிய "Arun K Chandran"அவர்களுக்கு நன்றி :)

இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து அனுப்பிய "Shan Mani" அவர்களுக்கு நன்றி :)









தாய் கிரீன் பேஸ்ட் & தாய் கிரீன் கறி




தேவையான பொருட்கள் 
நறுக்கிய பச்சை மிளகாய் - 5tblsp
பூண்டு பற்கள் - 6
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
இஞ்சி
கொத்தமல்லி இலை  - 6
துறுவிய எலுமிச்சை தோல் -1/2 tsp
எலுமிச்சை சாறு - 1tsp
மல்லி பொடி - 1 tbsp
சீரகப்பொடி - 2 tbsp
லெமன் க்ராஸ் (lemongrass) - 2
உப்பு - தேவைக்கேற்ப 

மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் 1/3 கப் தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தாய் கிரீன் கறி
தேவையான பொருட்கள்

வெண்ணை
வெங்காயம் 
குடை மிளகாய் 
பன்னீர் 
தாய் கிரீன் பேஸ்ட்
தேங்காய் பால்
உப்பு

செய்முறை

* பாத்திரத்தில் வெண்ணை போட்டு சூடான பிறகு நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
* இதில் தாய் கிரீன் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதங்கிய பிறகு பன்னீர் க்யூப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்
* பிறகு தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.

இந்த புதுமையான மற்றும் சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி :)

இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து அனுப்பிய "Shan Mani" அவர்களுக்கு நன்றி :)





பத்து நிமிட பனீர் கடாய்


தேவையான பொருட்கள்:
பன்னீர்
வெங்காயம்
குடைமிளகாய்
தக்காளி - 1 அல்லது 2
இஞ்சி - கொஞ்சம்
பூண்டு & இஞ்சி விழுது
மல்லித்தூள்
வரமிளகாய் தூள்
கரம் மசாலா - தேவைப்பட்டால்

செய்முறை:
* செய்வதற்கு வெகு சுலபமான, ஆனால் செம டேஸ்ட்டியான சைவ உணவு.
* வெங்காயம், கேப்சிகம் வேண்டிய அளவு வெட்டிக்கொள்ளவும். இரண்டும் சற்றே பெரிய பீஸ்களாக இருக்கட்டும். ரொம்பவும் சிறிதாக வேண்டாம். 1-2 தக்காளி வெட்டிக்கொள்ளவும் (தக்காளி புளிப்புக்காக). ஜூலியன் கட் செய்த (நீளவாக்கில் ஒல்லியாய்) இஞ்சி கொஞ்சம்.
கடாயில் நெய் விட்டு முதலில் வெங்காயம் வதக்கவும். அது பாதி வெந்ததும், கேப்சிகம் சேர்த்து வதக்கவும். அது பாதி வெந்ததும் ஜிஞ்சர் கார்லிக் விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
* இவை ஓரளவு வெந்த பிறகு, மல்லித்தூள் (Coriander powder), வரமிளகாய் தூள் (வேண்டுமென்றால் கரம் மசாலா - நான் சேர்க்கவில்லை) சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* சற்று தளர கிரேவியாய் வேண்டுமென்றால் அரை கப் திக்கான தயிர் சேர்க்கலாம்.
* கடைசியாய் பனீர் க்யூப்ஸ் சேர்க்கவும். பனீர் க்யூப்ஸ் உடையாது இருக்க வேண்டுமென்றால் தனியாய் ஒரு ஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளலாம்.
- கொத்தமல்லி, ஜூலியன் கட் இஞ்சி சேர்த்து இறக்கினால் அவ்வளவே தான், Done. Just add the ingredients step by step and saute them. No need to grind anything.

பனீரும், கேப்சிகமும் நன்கு ஜூசியாக, மசாலா ஏறி, சற்றே தக்காளி புளிப்பும் சேர்ந்து அட்டகாசமாய் டேஸ்ட் வரும்.

* செய்வதற்கு வெகு சுலபமானஆனால் செம டேஸ்ட்டியான சைவ உணவு.

இந்த ஆரோக்கியமான பேலியோ உணவு சமையல் குறிப்பினை வழங்கிய "Rasanai Sriram" அவர்களுக்கு நன்றி. 

Thursday, August 13, 2015

அவகாடோ & பனீர் கட்லெட்



தேவையான போருடகள்:
அவகாடோ - 2
பன்னீர் -100 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பாதாம் பவுடர் - சிறிதளவு
கொத்துமல்லி இலை வெட்டியது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* பன்னீரை உதிர்த்து அல்லது துருவி வைத்துக்கொள்ளவும். இத்துடன் அவகாடோ/அவகேடோ பழம்,நறுக்கிய பெரிய வெங்காயம்,இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத் தூள்,கொஞ்சம் பாதாம் பவுடர்,கொத்துமல்லி இலை மற்றும்  உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். 
* தோசைக்கல்லினை சூடேற்றி, அதில் பிசைந்து வைத்த கலவைகளை சிறு பந்து போல் உருண்டைகளாக்கி, உள்ளங்கைகளில் சிறிது தண்ணீர் தடவி கட்லெட் சேப்பில் அழுத்தி (மிதமாக அழுத்தவும்) வார்த்து எடுக்கவும். 

குறிப்பு: * இதில் பேலியோ காய்களை ஆவியில் வேகவைத்து பன்னீர், அவகாடோ கலவைகளுடன் சேர்த்துக்கொள்ளலாம். வேகவைத்த காய்களில் இருந்து தண்ணீரை நன்கு வடிகட்ட வேண்டும்.  

இந்த ஆரோக்கியமான  மற்றும் புதுமையான பேலியோ உணவின் சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி :)

காரசார வெண்டைக்காய் மசாலா


தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் 
வெங்காயம் 
தக்காளி 
சீரகம் 
பச்சை மிளகாய் 
கடுகு 
பெருங்காயம் 
கறிவேப்பிலை 
மிளகுத்தூள்
தனியாத்தூள் 
மஞ்சள் தூள் 
உப்பு 

செய்முறை:
* வெண்டைக்காயை குறுக்கே நீளமாக ஃப்ரெஞ்ச் ஃப்ரை போல நறுக்கிக்கொள்ளவும். மேல் முனையை நறுக்கினால் போதும், கீழ்முனையை நறுக்கவேண்டியதில்லை.
* ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாகியதும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும், பிறகு உப்பு, பச்சை மிளகாய், தனியா, மஞ்சள் தூள் போட்டு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். 
* மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும், அதில் நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும், மிளகுத்தூள் (காரம் தேவையான அளவு) சேர்க்கவும்.
* வதக்கிய வெங்காயம், தக்காளி மசாலாவை இதில் கொட்டிக் கிளறிப் பரிமாறவும்.

* விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம்.


இந்த ஆரோக்கியமான பாரம்பரிய உணவின் சமையல் குறிப்பினை வழங்கிய "உமா தரணி" அவர்களுக்கு நன்றி :) 





கத்திரிக்காய் செடார் சீஸ்



தேவையான பொருட்கள்:-
ஒரு பெரிய கத்திரிக்காய் (அமெரிக்க ஐரோப்பா கண்டங்களில் கிடைக்கும் பெரிய கத்திரிக்காய் ) 1 (பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும்)
பட்டர் - 50 கிராம்ஸ் 
பூண்டு - 5 பல் (பொடியாக  நறுக்கி கொள்ளவும் )
மிளகு பொடி- 1 மேஜை கரண்டி
கொழுப்பு நீக்காத பால்- 300 மில்லி லிட்டர்
பாதாம் மாவு/பொடி  - 150 கிராம் 
செடார் சீஸ் - 150 கிராம் (பொடியாக துருவியது)
சிறிய பேகிங் பாத்திரம் மற்றும் வானலி.


ஸ்பைசுடு வைட் சாஸ் செய்முறை:- 
* ஒவென் முதலில் ஆன் செய்து 200C சூடு பண்ணவும். ஓவென் சூடாகும் வேலையில், சாஸ்  செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வானலியில் பட்டர் சேர்த்து கொதி வந்தவுடன் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும், பூண்டு வதங்கியவுடன் மிளகு பொடியை  சேர்த்து வதக்கவும்
* பிறகு பாதாம் மாவை சேர்த்து நன்றாக சிறிது நேரம் கிளறி விடவும், கடைசியாக பால் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பால் கட்டியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்

பேகிங்  செய்முறை:-
* சிறிய பேகிங் பாத்திரத்தில் வெட்டிய கத்திரிக்காய் மற்றும் வெங்காயத்தை போடவும். பிறகு தேவையான அளவு உப்பு  துவி நன்றாக கிளறி கொள்ளவும்
* அதன் மேல் தயார் செய்து வைத்து உள்ள  ஸ்பைசுடு வைட் சாஸ்ஐ  ஊற்றவும். பிறகு பொடியாக நறுக்கிய செடார் சீஸ் அதன் மீது  துவி ஓவனில் வைத்து ஒரு 30 நிமிடம் பேகிங் செய்யவும்.


சூடான வேகவைத்த கத்திரிக்காய் /சீஸ் ரெடி.

இந்த சுவையான மற்றும் புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK" அவர்களுக்கு நன்றி :)


Wednesday, August 12, 2015

பேலியோ சாலட்



தேவையான பொருட்கள்:
சிறுதுண்டங்களாக நறுக்கிய அவகேடோ - 1
சிறுதுண்டங்களாக நறுக்கிய வெள்ளரிக்காய்   - 2 சிறியது
சிறுதுண்டங்களாக நறுக்கிய தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1பழம்
ஹிமாலயா உப்பு - தேவையான அளவு
சீரகத்தூள் - சிறிதளவு
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்

செய்முறை: 
* மேலே கூரிய அனைத்துத் தேவையான பொருட்களையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து உப்பு,சீரகத்தூள் தூவி, ஆலிவ் ஆயில் சேர்த்து பரிமாறவும்.

இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி :)





Vegetable Augratin-Paleo Style



தேவையான பொருட்கள்:
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் 
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 
நறுக்கி,வேகவைத்த காய்கள் 
(கேரட்,காலிபிளவர்,குடைமிளகாய்,சுரைக்காய்,புடலங்காய்) - 2 கப் 
வெள்ளை சாஸ் (white sause) - 1 கப் (செய்முறை கீழே பார்க்கவும்)
மொசரலா (Mozzarella) சீஸ் - 2 டேபிள்ஸ்பூன் 
உப்பு -  தேவையான அளவு 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - 1/4 டீஸ்பூன் 

செய்முறை: 
* கடாயில் வெண்ணெய் உருக்கி, அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
* இத்துடன் வேகவைத்த காய்கள்,வெள்ளை சாஸ்(white sause),உப்பு,மிளகுத்தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
* இந்த கலவையை ஓவன் பாத்திரத்தில் ஊற்றி,மேல்பகுதியில் சீஸ் தூவவும்.
* இதனை ஓவனில் வைத்து 200 டிகிரி செல்சியஸ் (400 டிகிரி F) சூட்டில் 5-7 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை வேகவைத்து எடுக்கவும்.  

வெள்ளை சாஸ் (white sause)செய்யும் முறை: 
* ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடேற்றி, தட்டிய பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
* நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* கடைசியாக பின்வரும் கலவைகளை நன்கு கலக்கி சேர்க்கவும். 
     கலவைகள்:
     பால் - 1 கப் 
     பன்னீர் - 50 கிராம் 
     இவற்றை ஹேண்ட் மிக்ஸ்சி அல்லது  மிக்ஸ்சியில் அடிக்கவும்.
* இந்த கலவையினைச் சேர்த்து கிளறி,கெட்டியாகி வந்தவுடன் இறக்கவும். வெள்ளை சாஸ் ரெடி.

இந்த சுவையான, புதுமையான பேலியோ உணவின் சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி. 





Tuesday, August 11, 2015

லாம்ப் மசாலா (lamb Masala)



தேவையான பொருட்கள்:-

செம்மறி ஆட்டு கறி கொழுப்புடன் 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக வெட்டி மஞ்சள் கலந்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும் )
பெரிய மஞ்சள் நிற வெங்காயம்( பேலியோவிற்கு சிறந்தது)  - 1 150 கிராம் (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
இஞ்சி/பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி (வீட்டில் அரைத்து பயன்படுத்துவது நன்றாக இருக்கும்)
தக்காளி - 2 சிறியது - 100 கிராம் ((பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 4 (காம்பை நீக்கிவிட்டு நீல வாக்கில் பிளந்து கொள்ளவும் )
பொதினா/கொத்தமல்லி - ஒரு கை அளவு பொடியாக நறுக்கியது.
குழம்பு பொடி - 2 மேஜை கரண்டி.
மஞ்சள் பொடி - 1 சிறய கரண்டி 
ஆலிவ் எண்ணை (அல்லது )தேங்காய் எண்ணை - 2 மேஜை கரண்டி 

செய்முறை:-

* ஒரு சிறிய குக்கர் இல் ஆலிவ் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி கொள்ளவும்.எண்ணை காய்ந்தவுடன் பச்சை மிளகாய்  நறுக்கிய வெங்காயத்தை உப்பு கலந்து நன்றாக வதக்கவும், வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி/பூண்டு விழுது கலந்து நன்றாக வதக்கவும்
* பச்சை வாடை போனவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் மற்றும் குழம்பு பொடி கலந்து நன்றாக கிளறி விடவும்
* பிறகு நறுக்கிய செம்மறி ஆட்டு கறியை கலந்து நன்றாக மசாலா படும்படி பிரட்டி விடவும். பிறகு பொதினா கொத்தமல்லி இலைகளை துவி ஒரு 200 கிராம் தண்ணீர் கலந்து நன்றாக பிரட்டி விடவும். * பிறகு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு 10 விசில் வரும்வரி சமைக்கவும். பிறகு ஆவி அடங்கும் வரை  பொருத்திருந்து  பின் குக்கர்ஐ திறக்கவும். கொஞ்சம் தண்ணீர்ராக இருந்தால் மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் உங்கள் தேவைகேற்ப வற்றும் வரை  கிளறி விடவும்.  


இந்த புதுமையான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK" அவர்களுக்கு நன்றி :)

சுரைக்காய் முட்டை கறி



தேவையானவை:
சுரைக்காய் -சிறியது 1
முட்டை - 3
மிளகாய் போடி - 1/2 spoon
மஞ்சள் போடி -1/2 spoon 
சோம்பு - 1 spoon 
தேங்காய் - 4 சில்லு 
கறி வடகம் - 1/2 spoon
தே .எண்ணை - தேவையான அளவு 

அரைக்க

தேங்காய் & சோம்பை சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்துகொள்ளவும் .

செய்முறை :
1.சுரைக்காயை தோல் அகற்றி தேங்காய் பல் அளவில் நறுக்கி கொள்ளவும்.
2.எண்ணை சட்டியை அடுப்பில் ஏற்றி சிறிது நீர் விட்டு மிளகாய் போடி ,மஞ்சள் போடி , சிறிது உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் சுரைக்காயை போடவும் . மிதமான தீயில் வேகவிடவும் .
3.முக்கால் பதத்திற்கு வந்தவுடன் அரைத்த கலவையை சேர்க்கவும் .
4.மற்றொரு பாத்திரத்தில் தே .எண்ணை  ஊற்றி ,அடுப்பில் ஏற்றி காய்ந்தவுடன் கறி வடகத்தை போட்டு 3 முட்டையை உடைத்து ஊற்றவும் . சிறிது உப்பு சேர்த்து போடி மாஸ் பதத்தில் வந்தவுடன் . சுரைக்காய் உடன் சேர்த்து சிறிது நேரம் கிளறி முடிக்கவும்.


குறிப்பு : சுரைக்காய் நீர் காய் என்பதால் வேகவைக்கும் போது அளவாக நீர் வைக்கவும் .

இந்த அருமையான பாரம்பரிய சமையல் குறிப்பினை வழங்கிய "Balaguru kalyanasundaram" அவர்களுக்கு நன்றி :)



Saturday, August 1, 2015

இமா டாச்சி (ema datshi) - Ema - மிளகாய் datshi - சீஸ்



                                                          Tomato added ema datshi


தேவையான பொருட்கள்:
1. (நீள வகை) பச்சை மிளகாய் - 200 g 
2. Feta சீஸ் - 50g 
3. பெரிய வெங்காயம் - 1
4. தக்காளி - 1 (தேவைப்பட்டால் மட்டும் )
5. பூண்டு - 5 பல் 
6. unsalted பட்டர் - 1 ஸ்பூன் 
7. white சீஸ் - 200g    
8. தண்ணி - ரெண்டு கப் 

செய்முறை:
* கடாய்ல வெங்காயம். தக்காளி, பூண்டு எல்லாம் வெட்டிப் போட்டு கொஞ்சமா ஒரு திருப்பு திருப்பிட்டு (வனக்க எண்ணை தேவை இல்லை). ரெண்டு கப் தண்ணிய ஊத்தி மித சூட்ல கொதி வர வரைக்கும் மூடி வைங்க 
* பின்ன Feta சீஸ் + பட்டர் போட்டு நல்லா கலக்குங்க ஒரு அஞ்சு நிமிசம் மூடி வச்சுருங்க. அப்புறம் white சீஸ் கலந்து நல்லா கலக்கி விடுங்க, நல்லா வெந்து வர்ற  நேரம் வரைக்கும்  மித சூட்ல வச்சு இருங்க 
* சுவை பார்த்துட்டு தேவைப்பட்டா மட்டும் உப்பு சேர்த்துக்குங்க 
தக்காளியும் தேவைப்பட்டா மட்டும் சேர்த்திக்கலாம்
* இது கூடவே காளான் கலந்தும் செய்யலாம் அது பேரு மஷ்ரூம் இமா டாச்சி  
* மிளகாய்க்கு பதிலா உருளைக்கிழங்கு போட்டா அது கேவாடாச்சி
*சுவை ரொம்ப அருமையா இருக்கும். இமயமலைப் பகுதிகள்ல குளிர் தாங்க உதவும் உணவு. அரிசி சோறு கூட சாப்பிடுவாங்கநாம அப்படியே சாப்பிடலாம்.

இந்த சுவையான,புதுமையான மற்றும் ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Sethupathy Subramaniam" அவர்களுக்கு நன்றி.