தேவையான பொருட்கள்
நறுக்கிய பச்சை மிளகாய் - 5tblsp
பூண்டு பற்கள் - 6
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
இஞ்சி
கொத்தமல்லி இலை - 6
துறுவிய எலுமிச்சை தோல் -1/2 tsp
எலுமிச்சை சாறு - 1tsp
மல்லி பொடி - 1 tbsp
சீரகப்பொடி - 2 tbsp
லெமன் க்ராஸ் (lemongrass) - 2
உப்பு - தேவைக்கேற்ப
மேலே கூரிய அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் 1/3 கப் தண்ணீருடன் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தாய் கிரீன் கறி
தேவையான பொருட்கள்
வெண்ணை
வெங்காயம்
குடை மிளகாய்
பன்னீர்
தாய் கிரீன் பேஸ்ட்
தேங்காய் பால்
உப்பு
செய்முறை
* பாத்திரத்தில் வெண்ணை போட்டு சூடான பிறகு நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* இதில் தாய் கிரீன் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதங்கிய பிறகு பன்னீர் க்யூப் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
* பிறகு தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.
இந்த புதுமையான மற்றும் சுவையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி :)
இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து அனுப்பிய "Shan Mani" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment