தேவையான பொருட்கள்:-
ஒரு பெரிய கத்திரிக்காய் (அமெரிக்க ஐரோப்பா கண்டங்களில் கிடைக்கும் பெரிய கத்திரிக்காய் ) 1 (பொடியாக வெட்டி வைத்து கொள்ளவும்)
பட்டர் - 50 கிராம்ஸ்
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
மிளகு பொடி- 1 மேஜை கரண்டி
கொழுப்பு நீக்காத பால்- 300 மில்லி லிட்டர்
பாதாம் மாவு/பொடி - 150 கிராம்
செடார் சீஸ் - 150 கிராம் (பொடியாக துருவியது)
சிறிய பேகிங் பாத்திரம் மற்றும் வானலி.
ஸ்பைசுடு வைட் சாஸ் செய்முறை:-
* ஒவென் ஐ முதலில் ஆன் செய்து 200C சூடு பண்ணவும். ஓவென் சூடாகும் வேலையில், சாஸ் செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வானலியில் பட்டர் சேர்த்து கொதி வந்தவுடன் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும், பூண்டு வதங்கியவுடன் மிளகு பொடியை சேர்த்து வதக்கவும்.
* பிறகு பாதாம் மாவை சேர்த்து நன்றாக சிறிது நேரம் கிளறி விடவும், கடைசியாக பால் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பால் கட்டியான பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
பேகிங் செய்முறை:-
* சிறிய பேகிங் பாத்திரத்தில் வெட்டிய கத்திரிக்காய் மற்றும் வெங்காயத்தை போடவும். பிறகு தேவையான அளவு உப்பு துவி நன்றாக கிளறி கொள்ளவும்.
* அதன் மேல் தயார் செய்து வைத்து உள்ள ஸ்பைசுடு வைட் சாஸ்ஐ ஊற்றவும். பிறகு பொடியாக நறுக்கிய செடார் சீஸ் அதன் மீது துவி ஓவனில் வைத்து ஒரு 30 நிமிடம் பேகிங் செய்யவும்.
சூடான வேகவைத்த கத்திரிக்காய் /சீஸ் ரெடி.
இந்த சுவையான மற்றும் புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment