Friday, August 14, 2015

பத்து நிமிட பனீர் கடாய்


தேவையான பொருட்கள்:
பன்னீர்
வெங்காயம்
குடைமிளகாய்
தக்காளி - 1 அல்லது 2
இஞ்சி - கொஞ்சம்
பூண்டு & இஞ்சி விழுது
மல்லித்தூள்
வரமிளகாய் தூள்
கரம் மசாலா - தேவைப்பட்டால்

செய்முறை:
* செய்வதற்கு வெகு சுலபமான, ஆனால் செம டேஸ்ட்டியான சைவ உணவு.
* வெங்காயம், கேப்சிகம் வேண்டிய அளவு வெட்டிக்கொள்ளவும். இரண்டும் சற்றே பெரிய பீஸ்களாக இருக்கட்டும். ரொம்பவும் சிறிதாக வேண்டாம். 1-2 தக்காளி வெட்டிக்கொள்ளவும் (தக்காளி புளிப்புக்காக). ஜூலியன் கட் செய்த (நீளவாக்கில் ஒல்லியாய்) இஞ்சி கொஞ்சம்.
கடாயில் நெய் விட்டு முதலில் வெங்காயம் வதக்கவும். அது பாதி வெந்ததும், கேப்சிகம் சேர்த்து வதக்கவும். அது பாதி வெந்ததும் ஜிஞ்சர் கார்லிக் விழுது சேர்க்கவும். பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
* இவை ஓரளவு வெந்த பிறகு, மல்லித்தூள் (Coriander powder), வரமிளகாய் தூள் (வேண்டுமென்றால் கரம் மசாலா - நான் சேர்க்கவில்லை) சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* சற்று தளர கிரேவியாய் வேண்டுமென்றால் அரை கப் திக்கான தயிர் சேர்க்கலாம்.
* கடைசியாய் பனீர் க்யூப்ஸ் சேர்க்கவும். பனீர் க்யூப்ஸ் உடையாது இருக்க வேண்டுமென்றால் தனியாய் ஒரு ஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளலாம்.
- கொத்தமல்லி, ஜூலியன் கட் இஞ்சி சேர்த்து இறக்கினால் அவ்வளவே தான், Done. Just add the ingredients step by step and saute them. No need to grind anything.

பனீரும், கேப்சிகமும் நன்கு ஜூசியாக, மசாலா ஏறி, சற்றே தக்காளி புளிப்பும் சேர்ந்து அட்டகாசமாய் டேஸ்ட் வரும்.

* செய்வதற்கு வெகு சுலபமானஆனால் செம டேஸ்ட்டியான சைவ உணவு.

இந்த ஆரோக்கியமான பேலியோ உணவு சமையல் குறிப்பினை வழங்கிய "Rasanai Sriram" அவர்களுக்கு நன்றி. 

1 comment: