Tuesday, August 11, 2015

லாம்ப் மசாலா (lamb Masala)



தேவையான பொருட்கள்:-

செம்மறி ஆட்டு கறி கொழுப்புடன் 1/2 கிலோ (சிறிய துண்டுகளாக வெட்டி மஞ்சள் கலந்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும் )
பெரிய மஞ்சள் நிற வெங்காயம்( பேலியோவிற்கு சிறந்தது)  - 1 150 கிராம் (பொடியாக நறுக்கி கொள்ளவும் )
இஞ்சி/பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி (வீட்டில் அரைத்து பயன்படுத்துவது நன்றாக இருக்கும்)
தக்காளி - 2 சிறியது - 100 கிராம் ((பொடியாக நறுக்கி கொள்ளவும் )
பச்சை மிளகாய் - 4 (காம்பை நீக்கிவிட்டு நீல வாக்கில் பிளந்து கொள்ளவும் )
பொதினா/கொத்தமல்லி - ஒரு கை அளவு பொடியாக நறுக்கியது.
குழம்பு பொடி - 2 மேஜை கரண்டி.
மஞ்சள் பொடி - 1 சிறய கரண்டி 
ஆலிவ் எண்ணை (அல்லது )தேங்காய் எண்ணை - 2 மேஜை கரண்டி 

செய்முறை:-

* ஒரு சிறிய குக்கர் இல் ஆலிவ் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி கொள்ளவும்.எண்ணை காய்ந்தவுடன் பச்சை மிளகாய்  நறுக்கிய வெங்காயத்தை உப்பு கலந்து நன்றாக வதக்கவும், வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி/பூண்டு விழுது கலந்து நன்றாக வதக்கவும்
* பச்சை வாடை போனவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் மற்றும் குழம்பு பொடி கலந்து நன்றாக கிளறி விடவும்
* பிறகு நறுக்கிய செம்மறி ஆட்டு கறியை கலந்து நன்றாக மசாலா படும்படி பிரட்டி விடவும். பிறகு பொதினா கொத்தமல்லி இலைகளை துவி ஒரு 200 கிராம் தண்ணீர் கலந்து நன்றாக பிரட்டி விடவும். * பிறகு குக்கரை மூடி வெயிட் போட்டு ஒரு 10 விசில் வரும்வரி சமைக்கவும். பிறகு ஆவி அடங்கும் வரை  பொருத்திருந்து  பின் குக்கர்ஐ திறக்கவும். கொஞ்சம் தண்ணீர்ராக இருந்தால் மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் உங்கள் தேவைகேற்ப வற்றும் வரை  கிளறி விடவும்.  


இந்த புதுமையான,சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Manikandan PK" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment