தேவையான பொருட்கள்:
முட்டைகள் - 12
5 கப் தண்ணீர்
உப்பு - 1 1/2 கப் அல்லது தேவைக்கேற்ப
சிகப்பு அல்லது பிங்க புட் கலர்
வினிகர் -1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
* 5 கப் தண்ணீரை கொதிக்க விடவும். இத்துடன் உப்பை சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து ஆற விடவும். பின்பு உப்புத் தண்ணீரை மூடியுடன் உள்ள ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக் ஜாரில் மாற்றவும்.
* முட்டைகளில் உப்புத்தண்ணீரில் இடுவதற்க்கு முன்பு உடையாத அல்லது விரிசல் உள்ள முட்டைகளா என்று கவனித்து இடவும். முட்டைகள் நன்றாக உப்பு தண்ணீரில் மிதக்காமல் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வேண்டுமென்றால் சிறிய கப்பை ஜாரின் உள்ளில் வைத்து அழுந்தச் செய்யலாம்.
* முட்டைகளை வெளிச்சம் படாதவாறு குளிர்ந்த இருட்டான இடங்களில் 21 நாட்கள் வைக்கவும். பின்பு ஒரு முட்டையை எடுத்து வேகவைத்து போதுமான உப்பு பிடித்திருக்கிறாதா என்று பாரக்கவும். உப்பு அதிகம் தேவையென்றால் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் அதிகமாக ஊற விடவும்.
* ஊறியவுடன் தண்ணீரை களைந்து கழுவிக்கொள்ளவும். இதை பிரிட்ஜில் பல மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது எடுத்து வேகவைத்து சாப்பிடலாம் அல்லது எல்லாவற்றையும் வேக வைத்தே பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்.
இந்த சுவையான,புதுமையான பேலியோ சமையல் குறிப்பினை வழங்கிய "Abdul Farook" அவர்களுக்கு நன்றி :)
No comments:
Post a Comment