தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி -1
வெந்நீரில் நனைத்து எடுத்த வரமிளகாய் - 5
இஞ்சி - 1 இஞ்ச்
பூண்டு - 4 பல்
மல்லித்தூள் - 1 டேபுள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் - சிறிதளவு (அதிகம் போட்டால் கறியின் கலர் மாறிவிடும்)
உப்பு - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 டேபுள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபுள்ஸ்பூன்
மல்லி இலை
செய்முறை:
* முட்டையை வேகவைத்து தோலுறித்து வைக்கவும்.
* ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, வெங்காயம் வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இத்துடன் தக்காளியை பெரிய துண்டங்களாக நறுக்கிப்போட்டு வதக்கவும்.
* இக்கலவை ஆறியவுடன் மல்லித்தூள்,கரம் மசாலா,மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு அரைக்கவும் (கண் மை போல் அரைக்க வேண்டும்)
* இப்போது அதே வாணலியில் வெண்ணெய் உருக்கி, அரைத்த மசாலா கலவை சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.பின்பு உப்பு சேர்க்கவும்.
* சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, வேகவைத்த முட்டையை 3 புறம் சிறிது கீறி இத்துடன் சேர்க்கவும்.
* மல்லி இலை தூவி பரிமாறவும்.
சமையல் குறிப்பு: Mythili Thiyagu
No comments:
Post a Comment