Monday, August 17, 2015

Thalana Batu Haalmasso Baduma




தேவையான பொருட்கள்:
தாய்லாந்து பச்சை கத்தரிக்காய் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் மீடியம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 10 பல்
கருவேப்பிலை - கொஞ்சம்
ரம்பா இலை - சிறிய துண்டு
சில்லி பிளேக்ஸ் - காரத்திற்கேற்ப 
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மாலத்தீவு கருவாடு - பொடித்தது 
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணை - 2-3 டேபிள்ஸபூன்

செய்முறை:
* கத்தரிக்காய் வாங்கும் போது சிறிய கத்தரிக்காயாக பெரிய நெல்லிக்காய் அளவு உள்ளது வாங்கவும். கத்தரிக்காய்களை கல்லால் தட்டினால் இரண்டாக உடையும். கத்தியால் அறுக்கக்கூடாது. கசப்பாகி விடும். தட்டியதும் தண்ணீரில் போடவும். இல்லாவிட்டால் நிறம் மாறிவிடும். தட்டிய கத்திரிக்காயை ஒரு ஸ்பூனால் உள்ளே உள்ள விதைகளை நீக்கவும். விரலை உபயோகித்தால் கறை ஏற்படும். நன்றாக கழுவி விதைகளை சுத்தமாக நீக்க்கவும். மீனை சுத்தப்படுவது போன்ற வேலை. விதைகள் மிகவும் கடினமாகவும், நிறைந்தும் இருக்கும். நமக்குத்தேவை சதைப்பற்று மாத்திரம்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பூண்டை வதக்கவும். உடனே வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் கருவாட்டு பொடியை போடவும். அத்துடன் சுத்தம் செய்த கத்தரிக்காய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்றவேண்டாம். வேண்டுமென்றால் லேசாக விரலினால் தண்ணீர் தெளிக்கலாம். இப்பொழுது மூடி போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். இடையில் அடிபிடிக்காதவாறு பிரட்டி விடவும். வெந்தவுடன் இறக்கவும்.
* மாலத்தீவு கருவாடு கிடைக்காதவரகள் நெத்திலி கருவாட்டை கழுவி வெங்காயம் போட்டு தாளித்தவுடன் போடலாம். சிறிது முறுகவிடவும். பின்பு கத்தரிக்காய் சேர்க்கலாம்.

குறிப்பு: இந்த ரெசிபி பெயரைப் பார்த்து பயப்பட வேண்டாம்இது நம் ஊர் பெயரில் கருவாட்டு கத்தரிக்காய் பிரை என்று சொல்லாம்இருபது வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டில் ஒரு ஶ்ரீலங்கா சமையல்காரர் ஒருவர் இருந்தார்அவர்கள் ஊர் ரெசிப்பிகளைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்வார்அதனால் தினமும் ஒரு வேளை அவர்கள் சமையலை செய்ய சொல்வோம்சிறிது காரமாக இருந்தாலும் சுவையாக இருக்கும்இவர்கள் அதிகம் கீரைகள்கத்தரிக்காய்தேங்காய்ப்பால்மஞ்சள்குத்து மிளகாய் (chilly flakes), ரம்பா இலைதேங்காய் எண்ணெய்மாலத்தீவு கருவாடு என்று நிறைய சேர்த்துக் கொள்வார்கள்இது பாலாட்டும் தாய்மார்களுக்கு நல்லது என்பதால் இன்று மகளுக்காக சமைத்தது.

இந்த சுவாரசியமான,சுவையான,ஆரோக்கிய  சமையல் குறிப்பினை அனுப்பிய "Abdul Farook"அவர்களுக்கு நன்றி :)




3 comments:

  1. ரெசிப்பி பகிர்வுக்கு நன்றி .இலங்கை தமிழ் கடையில் பார்த்திருக்கேன் .வாங்கி செய்கிறேன்

    ReplyDelete
  2. அஹா நல்ல கத்தரிக்காய் இலங்கையில் சுவை இன்னும் பிடிக்கும்.

    ReplyDelete
  3. வெண்டைக்காயில் நான் மாசி தூள் சேர்த்தேன் , இது கத்திரிக்காயில் கருவாடு சூப்பர்

    ReplyDelete