Saturday, January 31, 2015

இறால் ப்ரை


தேவையான பொருட்கள்:
இறால் - 10
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பாதாம் பவுடர் (option) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சிறிது பிளந்த பச்சை மிளகாய் - 2
நசுக்கிய பூண்டு பல் - 5
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
* சுத்தம் செய்த இறாலுடன்,மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு,பாதாம் பவுடர் சேர்த்து, நன்கு கலந்து ஊறவைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இத்துடன் இறால் கலவையை சேர்த்து...இறால் பாதி அளவு வேகும் வரை வறுக்கவும்.
* இப்பொழுது கீறிய பச்சைமிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டினை சேர்த்து வறுக்கவும்.
* கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து இறக்கவும்.
* சுவையான இறால் ப்ரை தயார்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu

Grilled Asparagus



தேவையான பொருட்கள்:
Asparagus - 5 டு 7
நெய் அல்லது வெண்ணெய் - 1 டீஸ்பூன் 
நசுக்கிய பூண்டு - 5 பல் 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
துருவிய வெண்ணெய் - சிறிது 
எழுமிச்சை - 1/2 பழம்

செய்முறை:
* கிரில் பான் (Grill pan) சூடான பிறகு சிறிது நெய் விட்டு, Asparagus யை வருசையாக வைக்கவும். * சிறிதுநேரம் க்ரிலான பிறகு,திருப்பிவிட்டு,நசுக்கிய பூண்டு, உப்பு,மிளகுத்தூள் ,வெண்ணை தூவி விடவும்
* க்ரிலான பிறகு தட்டில் வைத்து எழுமிச்சை பிழிந்துவிடவும். மிகவும் சுவையான கிர்ல் ஏஷ்பராகுஷ் ரெடி.
குறிப்பு: பேலியோ தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

சமையல் குறிப்பு: "Mythili Thiyagu"

சுரைக்காய் தயிர் பச்சடி


தேவையான பொருட்கள்:
சுரைக்காய் (பொடியாக நறுக்கியது) - 1  
கடுகு - 1 டீஸ்பூன் 
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் 
பச்சை அல்லது சிவப்பு மிளகாய் - 2 
கறிவேப்பிலை - சிறிதளவு  
வீட்டில் அரைத்த சாம்பார் பொடி - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1 
சீரகத்தூள் - சிறிதளவு 
மிளகுத்தூள் - சிறிதளவு 

செய்முறை:
* கடாயில் எண்ணை காய்ந்ததும், கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம்,பச்சை அல்லது சிவப்பு மிளகாய்,கறிவேப்பில்லை தாளிக்கவும்
* வெங்காயம் வதங்கியதும், பொடியாக நறுக்கிய சுரக்காய் சேர்க்கவும். இத்துடன் சிறிதளவு சாம்பார் பொடி,உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேகவிடவும்
* காய் பாதிக்கு மேல் வெந்ததும், நடுவில் குழி செய்து பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்தவும்.இத்தக்காளியை சுற்றியும் சுரைக்கையால் மூடி, பாத்திரத்தை மூடி வைக்கவும்.. 5 நிமிடம் சிறு தீயில் வேகவைத்து இறக்கவும்
* வெந்த சுரைக்காயை ஒரு பாத்திரத்தில் ஆறவைக்கவும்
* இத்துடன் தயிர்,சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி


சமையல் குறிப்பு: "Mythili Thiyagu" - பரம்பரை சமயல் :)




குயிக்பிக்ஸ் பேலியோ கருவேப்பிலை சூப்


தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
பாதாம் பவுடர்  - டேபிள்ஸ்பூன்
பூண்டு பவுடர் - 1/2 டீஸ்பூன்
ஜிஞ்சர் பவுடர் - 1/2 டீஸ்பூன்
இந்துப்பு - தேவையான அளவு 
தேங்காய்பால்  - 1 கப் 
தேவையான அளவு  பட்டர் அல்லது அரை ஸ்பூன் நெய்

செய்முறை:
ஒரு கைப்பிடி கருவேப்பிலையை மிக்சியில் தண்ணீர் சேர்த்து அடித்து 250 ml ஜீஸ் எடுத்துக்கொள்ளவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பவுடருடன் அரை டீஸ்பூன் பூண்டு பவுடர், அரை டீஸ்பூன் ஜிஞ்சர் பவுடர், தேவையான இந்துப்பு சேரத்து கட்டியில்லாமல் கலக்கவும். அடுப்பில் வைத்து சூடாக்கும் பொழுது கட்டி விழாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். 3 நிமிடங்களுக்கு பிறகு கடைசியில் 1 கப் தேங்காய்பால் சேர்த்து சூடானவுடன் தேவையான பட்டர் அல்லது அரை ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளவும். சாப்பிடும் பொழுது மிளகு பொடி தேவையென்றால் பாதி லெமன் பிழிந்துகொள்ளவும். ஸ்பைசியாக வேண்டுமென்றால் சிறிதளவு மஞ்சள் பொடியும், ஜீரகப்பொடியும் சேரத்துக்கொள்ளலாம்.

பாதாம் பவுடரை தவிர்ப்பது நல்லது. இதற்க்கு பதிலாக பாதாம் பால் சேர்த்துக்கொள்வது நல்லது.

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Abdul Farook" அவர்களுக்கு நன்றி :)

தயிர் பப்பாளி



ஆவியில் வெந்த பப்பாளி துண்டுகளை ஆறவைக்கவும்,  

கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சூடு பண்ணாத தயிர் மேல் ஊற்றி  அதை பப்பாளி துண்டுகளுடன் கலந்து சாப்பிடவும்.


 இந்த சுவையான,சத்து நிறைந்த சமையல் குறிப்பினை வழங்கிய அய்யா "Subash Krishnasamy" அவர்களுக்கு நன்றி :)

Thursday, January 29, 2015

குடல் ஃப்ரை

குடல் ஃப்ரை:
(ட்ரை ஃபிரையும் இல்லாமல் குழம்பாகவும் இல்லாமல் சத சத பக்குவத்துடன் செய்வது. இட்லி தோசைக்கு மட்டும் சூப்பர். சாதத்துக்கு ஓகே. பேலியோவுக்கு இதை மட்டும் தனியாக, காரம் குறைவாக, இன்னும் ட்ரையாக வைக்கலாம்)
தேவையான பொருட்கள்.:
ஒரு ஆட்டுக் குடல் - ஆட்டுக் குடல் சுத்தம் செய்தது (சிறிய துண்டுகளாக (1 இஞ்ச்) நறுக்கி, மூங்கில் அல்லது பிளாஸ்டிக் தட்டுக் கூடையில் தேய்த்துத் தேய்த்து வெந்நீரை ஊற்றி பலமுறை கழுவ வேண்டும்)
தேவையான பொருட்கள்:
சுத்துக் கொழுப்பு - சிறிதளவு தேவையைப் பொறுத்து
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - ஆறு பல்
வர மிளகாய் - 10
சோம்பு - 1/4 டீஸ்பூன்
தனியா - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கிலோ சின்ன / பெரிய வெங்காயம், சிறியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துறுவல் - தூவுவதற்கு சிறிதளவு மட்டும்
கொத்து மல்லி தழை - தேவைக்கு
செய்முறை:
இஞ்சி, பூண்டு, வர மிளகாய், சோம்பு, தனியா அனைத்தையும் சிறிதளவு நீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
அதை குக்கரில் சுத்தம் செய்த குடலுடன் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு போட்டு அது முழுகும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். (சுமார் 4 அல்லது 5 விசில் மீடியம் ஃப்ளேமில்)
வெந்தவுடன் குடலை மட்டும் வடி கட்டி எடுத்து வைக்கவும். (இந்த தண்ணீரை சூப் போலவும் குடிக்கலாம்)
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு வணக்கி, குடலையும் சுத்துக் கொழுப்பையும் போட்டு நன்றாக தண்ணீர் ஓரளவு ட்ரை ஆகும் வரை வணக்கவும். உப்பு சரிபார்த்து, நறுக்கிய கொத்து மல்லி தேங்காய் துறுவல் இரண்டையும் போட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
இதில் தேங்காய் கொத்துமல்லி தழை போடும் முன் ரத்தம் சேர்த்து ஃபிரை செய்தும் சமைக்கலாம். இதில் ரத்தம் ஃபிரை ஆனவுடன் தேங், கொ.மல்லி சேர்க்கவும். ரத்தம் சேர்ப்பதாக இருந்தால் ப.மிளகாயையும் வெங்காயத்தையும் 1/4 மடங்கு அதிகப் படுத்தவும்.
குடல் ஃபிரை ரெடி. இதனுடன் இட்லி 15 அல்லது கல் தோசை 20 சாப்பிடவும். பேலியோவுக்கு இட்லி தோசை தவிர்த்து குடலை மட்டும் சாப்பிடவும்.

இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Sivaram Jagadeesan"அவர்களுக்கு நன்றி :)

வாழைக்காய் கட்லெட்


தேவையான பொருட்கள்:
வாழக்காய் 
காரட் துருவியது 
காலிஃப்ளவர் துருவியது
முட்டை கோஸ் 
வெங்காயம் 
பூண்டு 
முட்டை 
கார பொடி 
மிளகு பொடி 
கரம் மசாலா பொடி 
சீஸ் 
நெய் அல்லது பட்டர் 
உப்பு 

1. வாழைக்காயை தோலுடன் வேகவைத்து பின் தோலை உரித்து எடுத்துவிட்டு நன்றாக கையால் மசித்துக் கொள்ளவும் ..
2. காரட் துருவியது , காலிஃப்ளவர் கொஞ்சம் துருவியது , கோஸ் பொடியாக நறுக்கியது , வெங்காயம் பொடியாக , பூண்டு பொடியாக,புதினா , கொத்தமல்லி இலை சீஸ் சேர்க்கவும் 
3. தேவையான அளவு உப்பு , கார பொடி, மிளகு தூள் , கரம் மசாலா பொடி ..எல்லாமே நான் வீட்டில் செய்தது
4. சீஸ் துருவியது , நெய் அல்லது பட்டர் , முட்டை ஒன்று பீட் செய்தது ..

கொஞ்சம் வெண்ணையில் ITEM 2 ND 3 சேர்த்து வதக்கி வைத்து அதில் ITEM 1 சேர்த்து நன்றாக பிசைந்து நமக்கு வேண்டிய ஷேப்ல செய்து ஒரு தவாவில் இரண்டு பக்கமும்முட்டையில் டிப் செய்து வெண்ணையில் PAN FRY செய்து எடுக்கவும்.

இந்த சுவையான, அருமையான சமையலைக் கற்றுக்கொடுத்த "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)

வெள்ளரி ஊறுகாய்


முந்தி எல்லாம் ப்ரிட்ஜ் கண்டுபிடிக்குமுன் காய்கறிகளை ஊறுகாய் போட்டுத்தான் பாதுகாத்து வந்தார்கள். இதில் வெள்ளரியை ஊறுகாய் போட்டு பெர்மெண்ட் செய்வது மிக எளிது என்பதுடன் சமைக்காமல் செய்வதால் அதில் ப்ரோபயாடிக்ஸும் கிடைக்கும்.
செய்முறை
நன்றாகக்காற்றுபுகாமல் மூடக்குடிய கண்ணாடி ஜாடி ஒன்றை மூடியுடன் எடுங்கள். ஜாடியையும், மூடியையும் நன்றாகக்கழுவி வெந்நீரில் இட்டு ஸ்டெரிலைஸ் செய்யவும்.
தேவையான பொருட்கள்:
2- 3
வெள்ளரி. அதை நாலாக அல்லது எத்தனை பீஸாக வேண்டுமானாலும் வெட்டவும். ஜாடி கொள்ளும் அளவு வெள்ளரியை உள்ளே போடலாம்
3
மேஜைக்கரண்டி வினிகர்
1
மேஜைக்கரண்டி உப்பு
20
மிளகுகள்
1/2
மேஜைக்கரண்டி சிகப்புமிளகாய் துண்டுகள்
செய்முறை:
* ஜாடியை எடுத்து அதில் வெள்ளரியை இட்டு நிரப்பவும். அதன்பின் நீரைத்தவிர மற்ற இன்க்ரிடியண்ட் அனைத்தையும் இடவும்
* அதன்பின் நீரை ஊற்றி வெள்ளரி அனைத்தும் மூழ்கும் அளவு ஊற்றவும். ஆனால் பாட்டிலை முழுக்க நீரால் நிரப்பவேண்டாம். மேலே கொஞ்சம் வெற்றிடம் இருக்கவேண்டும். அதன்பின் காற்றுபுகாமல் இறுக்க மூடிவிடவேண்டும்.
* பாட்டிலை நன்றாகக்குலுக்கி அதை கவுண்டர்டாப்பில் வைத்துவிடவும். 12 மணிநேரம் அதைத்தொடவேண்டாம்
* அதன்பின் மீண்டும் எடுத்து நன்றாக ஒரு குலுக்கு குலுக்கி வைத்துவிடவும்
* 24
மணிநேரம் கழித்து தினம் 1- 2 துண்டு எடுத்து சாப்பிட தேவாமிர்தமாய் இனிக்கும். ப்ரிட்ஜில் வைத்து ஒரு மாதம் சாப்பிடலாம்.


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)









Wednesday, January 21, 2015

Butternut Squash Stir fry for dinner


பட்டர் நட் ஸ்கவாஷ் சூப் அப்படின்னு இங்கே செல்வன் ஒரு முறை போட்டிருந்த ஞாபகம் ...அதில் மஞ்சள் பூசணிக்காய் , வெண்ணெய், வெங்காயம் சேர்த்து கூட ஆப்பிள் போட்டு வதக்கி , காரத்திற்கு மிளகும் கூட உப்பும் சேர்த்து அரைத்து சூப் போல சாப்பிடலாம் என்று இருந்தது ..அதை நான் ஒருமுறை செய்தும் சாப்பிட்டேன் ...அதையே இப்போ கொஞ்சம் மாற்றி கூட காப்சிகம் சேர்த்து வெறும் காய்கறியாக செய்தேன் ...

தேவையான பொருட்கள்:
பட்டர்நட் பூசணி 
சீரகம்
சோம்பு 
ரைத்த பட்டை கிராம்பு மசாலா
வெங்காயம்
பூண்டு 
குடைமிளகாய் 
மிளகு
மிளகாய் தூள்
உப்பு
ஆப்பிள் துண்டங்கள்
கொத்தமல்லி

செய்முறை:

வெண்ணெய் மூன்று டேபிள்ஸ்பூன் ஒரு வாணலியில் விட்டு அது உருகிய பின் அதில் சீரகம், கொஞ்சம் சோம்பு , வீட்டில் அரைத்த பட்டை கிராம்பு மசாலா ஒரு ஸ்பூன் , வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய பூசணி துண்டுகள்குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி வெந்தவுடன் அதில் உப்பு , கொஞ்சம் காரம் அதிகமாக மிளகு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி பின் அதில் நறுக்கிய ஆப்பிள் துண்டங்களும் கொத்தமல்லியும் சேர்த்து ஒரே ஒரு கிளறு கிளறிவிட்டு இறக்கிவிடவும் ...இது வட இந்தியாவில் செய்யும் kaddu sabzi போலதான் கொஞ்சம் மாற்றத்துடன்.


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)

CHEESY MINT STUFFED POTATOES




தேவையான பொருள்:
இரண்டு உருளை பெரியது தோல் நீக்கியது
ஒரு சிறிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
பூண்டு நாலு பல் பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் இரண்டு , மூன்று பொடியாக நறுக்கியது
புதினா இலை ..கொஞ்சமாக ..பொடியாக நறுக்கியது ,
சீஸ் துருவியது இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் அல்லது உருக்கிய நெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .
உருளை கிழங்கின் நடுவில் ஒரு கத்தியால் ஸ்கூப் செய்து எடுத்துவிடவும் ....படம் ஒன்று
பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து , ஸ்கூப் செய்து எடுத்த உருளையும் சேர்த்து வதக்கி உப்பு தேவையான அளவு சேர்த்து, நறுக்கிய புதினா சேர்த்து ஒரு முறை வதக்கி விட்டு இறக்கி வைத்து அத்துடன் சீஸ் துருவியது சேர்த்து எடுத்து வைக்கவும் ..இது ஃ பில்லிங் ..
அடுத்து ஒரு கப் போல இருக்கும் படம் ஒன்று உருளையின் உள் பகுதியிலும் , வெளியிலும் உருக்கிய நெய் அல்லது தேங்காய் எண்ணையில் கலந்த வரமிளகாய் தூள் , உப்பு கலவையை நன்றாக தடவி பின் அதன் உள்ளில் ஃபில்லிங் நன்றாக அழுத்தி நிரப்பவும் .படம் இரண்டு ..
ப்ரேஷேர் கூகேரில் நீர் விட்டு இட்லி தட்டில் இந்த நிரப்பிய உருளையை வைத்து ஒரே ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்கிவிடவும் ..பத்து நிமிடம் கழித்து திறந்தால் அளவாக உருளை வெந்திருக்கும் . பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் இந்த உருளையை மெதுவாக எல்லா பக்கமும் ரோஸ்ட் ஆகுமாறு திருப்பி விடவும் ..
அதை ஒரு தட்டில் வைத்து சரிபாதியாக வெட்டி சாப்பிடவும் ..
இதை பேகிங் ஓவன் இருந்தால் அதில் செய்யலாம் ..அப்போ கூகர் அவசியமில்லை ...ஆனால் மைக்ரோ ஓவன்ல செய்ய எனக்கு கொஞ்சம் பயம் ..உருளை முழுவதாக இருப்பதால் வெடித்து விடுமோ என்று ..
வெந்த உருளை கிழங்கில் இது போல ஸ்கூப் செய்து எடுத்துவிட்டு செய்யலாம் ..ஆனால் அது உருளை அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால் ஸ்டஃப் செய்ய முடியாது

இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)

சுத்துக் கொழுப்பு ஃபிரை:


தேவையானவை:
ஆடு சுத்துக் கொழுப்பு: 1/4 கிலோ (சுத்துக் கொழுப்பு மட்டும்)
பெரிய வெங்காயம் : 1 அல்லது சின்ன வெங்காயம் 150 கிராம்
கறிவேப்பிலை: ஒரு கொத்து
பச்சை மிளகாய்: 8
கறி மசால் பொடி: 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்: 1/4 ஸ்பூன்
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் வெங். . மிளகாய் கறிவேப்பிலை போட்டு வதங்கியவுடன் கொழுப்பைப் போட்டி வதக்க வேண்டும். கொழுப்பு வெந்தவுடன் (சுமார் 15 நிமிடம்) பின்பு உப்பு, கறி மசால் பொடி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து மீடியம் ஃப்ளேமில் ட்ரை ஆகும் வரை சமைக்கவும். சுவையான சுத்துக் கொழுப்பு ஃபிரை ரெடி.


அசைவம்  சாப்பிடுபவர்களின் நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Sivaram Jagadeesan"அவர்களுக்கு நன்றி :)

Tuesday, January 20, 2015

காலிப்ளவர் லெமன் ரைஸ்




தேவையான பொருட்கள்:

காலிப்ளவர் துருவியது - 1 கப்
எழுமிச்சை ஜூஸ்  - தேவையான அளவு (கொஞ்சம் போதும்)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
கடுகு
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள்
மஞ்சள்த்தூள்
கறிவேப்பிலை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி  -  சிறிதளவு
உப்பு
எண்ணெய்

செய்முறை:
* துருவிய காலிப்ளவரை ஆவியில் வேகவைத்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகை பொரிய விடவும். இத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பொரிய விடவும்.
* இப்பொது பச்சை மிளகாய் சேர்த்து, வெள்ளை நிறம் வரும்வரை  வதக்கவும். பின்பு பூண்டு சிறிது வதக்கி, வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* நன்கு வதங்கியது அடுப்பினை அணைத்து (off), எலுமிச்சை பிழியவும் (சிறிது எழுமிச்சை சாறு போதும்
)
* இத்துடன் துருவி,ஆவியில் வேகவைத்த காலிப்ளவர் சேர்த்து கிளறி, சிறிதுநேரம் மூடி வைக்கவும் (காலிப்ளவர் அதிகம் வேகக்கூடாது).
* கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu

குறிப்பு: இன்று எனது மகளுக்குப்  பிடித்த எழுமிச்சை சாதம் செய்தேன்.எழுமிச்சை சாதம் சாப்பிட தோன்றியதால், இதோ நமக்கான  காலிப்ளவர் லெமன் ரைஸ் கண்டுபிடிக்கப்பட்டது :)
மேலும் நான் எழுமிச்சை சாதத்திற்கு வெங்காயம்,பூண்டு சேர்க்க மாட்டேன். என் அம்மா சேர்ப்பாங்க...அப்போ இது எங்க அம்மா சமையல் முறை காலிப்ளவர் லெமன் ரைஸ் :)




முந்திரி வறுவல்



செய்முறை:

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்/நெய்/நல்லெண்ணெய் 1 ஸ்பூன் விட்டு, காய்ந்ததும் முந்திரிப் பருப்பை சேர்த்து வறுக்கவும். பின்பு ஹிமாலயா உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும். 

இந்த சுவையான,மொறுமொறுப்பான நொறுக்குத்தீனியை வழங்கிய "Sathis Str" அவர்களுக்கு நன்றி.

STR's ஸ்பெஷல் நாட்டுக்கோழி வறுவல்



தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி - 1/2 கிலோ
மிளகாய் தூள்
ஹிமாலயம் உப்பு
மல்லித்தூள்
மஞ்சள் தூள்
சீரகம்,மிளகு தூள்

செய்முறை: 
மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்து எடுக்கவும்.


இந்த சமையல் குறிப்பினை வழங்கி,அதனை நமது ப்ளாக் கில் போடுவதற்கு பொறுமையாக காத்திருந்த "Sathis Str" அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி :)


மண்சட்டி மஷ்ரூம் கறி ( Kadai Mushroom Curry)


இது கிரேவி உணவு வகை ..சைட் டிஷ் ஆக செய்வதை நான் எனக்கு மெயின் உணவாக மாற்றி செய்வேன் ..

இதை பன்னீர் சேர்த்தும் , நான்வெஜ் உண்பவர்கள் சிக்கென் சேர்த்தும் செய்யலாம் ..

தேவையான பொருட்கள்:

மஷ்ரூம்   200 gm,
காப்சிகம்     ஒன்று
வெங்காயம்   பெரிது இரண்டு
தக்காளி           மீடியம் இரண்டு
உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) கொஞ்சம்
ஐம்பது கிராம் முந்திரி ஊறவைத்து அரைத்து கொள்ளவும்

கரம் மசாலா பொடி அரைக்க தேவையானது
கொத்தமல்லி விதை .ஒரு டீஸ்பூன்
சீரகம்    ஒரு டீஸ்பூன்                         
பட்டை, கிராம்பு              தேவையான அளவு
கசகசா       ஒரு டீஸ்பூன்                      
மிளகு              ஒரு டீஸ்பூன்               
வரமிளகாய்                     ஐந்து

இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைக்கவும்

வெண்ணை  நூறு கிராம்


உப்பு தேவையான அளவு .

இந்த உணவை நல்ல மண் சட்டியில் செய்வது அதற்கு ஒரு தனி சுவையை தரும்

மஷ்ரூம் நன்றாக மண் போக கழுவி சிறிய துண்டங்களாக வெட்டி அதை கொஞ்சம் வெண்ணையில் வதக்கி நன்றாக நீர் வற்றும் வரை வேக விடவேண்டும் ..தனியாக நீர் சேர்க்க தேவையில்லை ..

வெங்காயம் மற்றும் காப்சிகம் இரண்டையும் சிறு துண்டங்களாக வெட்டி அதையும் வெண்ணையில் நன்றாக வதக்க வேண்டும்

 ..தக்காளியை அரைத்து இந்த வதக்கிய மஷ்ரூம், வெங்காயம் , காப்சிகத்துடன் சேர்த்து பச்சை மணம் போக வதக்கி , அத்துடன் அரைத்த மசாலா பொடி, உப்பு , மற்றும் அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி வைக்கும்போது உலர்ந்த வெந்தய இலை மற்றும் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து சேர்வ் செய்யவும் ..சைட் டிஷ் ஆக செய்யும்போது கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும் ..நமக்கோ இது மெயின் டிஷ் ..அதனால் இதை கெட்டியாக செய்தால் போதும்


இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)

Sunday, January 18, 2015

பிரெஞ்சு ஆம்லெட்




தேவையான பொருட்கள்:
முட்டை - 2
வெண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - சிறிதளவு
பால் - இரண்டு ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தக்காளி - பொடிதாக நறுக்கியது இரு கைப்பிடி அளவு
சீஸ் - துருவியது

செய்முறை:
முதலில் பாலில் சர்க்கரையை நன்கு கரையவைக்கவும். பின் முட்டையை உடைத்து பாலில் கலந்து நன்றாக அடிக்கவும் அதனுடன் மிளகு தூளை கலக்கவும்.
ஒரு தவாவில் வெண்ணையை விட்டு அது உருகியவுடன் அடித்த முட்டையை ஊற்றி சிறுதீயில் வேக விடவும்.தீ அதிகம் வேண்டாம். ஒரு பாதி பகுதியில் மட்டும் நறுக்கிய தக்காளியை போடவும்.
முட்டை பாதி வெந்த உடன், துருவிய சீஸை தக்காளி மேல் போடவும். சீஸ் உருக ஆரம்பிக்கும்போது மீதி பாதி பகுதி முட்டையை மடித்து சீஸ் உள்ள பகுதியின் மீது மடித்து விடவும், வெந்த உடன் திருப்பி போட்டு நன்கு வேக விட வேண்டும்.

சுவை பீட்சாவை ஒத்து இருக்கும்

இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Velraj Ayyadurai" அவர்களுக்கு நன்றி :)

இந்த சமையல் குறிப்பினை செய்து பார்த்து புகைப்படம் அனுப்பிய "Dolly Bala" அம்மா அவர்களுக்கும்  நன்றி :)

Wednesday, January 14, 2015

சவ் சவ்(Chayote) ரைதா ரெசிபி

தேவையான பொருட்கள்: சவ் சவ், வெங்காயம், தயிர், நெய்/எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்த மல்லி இலை, பச்சை மிளகாய்.
சவ் சவ் காயை தோல் நீக்கி வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை தனியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்- சின்ன வெங்காயம் போட்டால் கூடுதல் சுவை, பிறகு கடாயில் நெய்/எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளவும். .
இதை தயிரில் சேர்க்கவும். சவ் சவ் நன்றாக ஆறினவுடன் அதையும் சேர்த்து கலக்கவும். கடைசி டச்சாக கொத்தமல்லி தளைகளை போட்டு கார்னிஸ் செய்யவும்.

எங்கள் தம்பி, தங்கக் கம்பி, சைனடு குப்பியின் கருத்து: இதன் மருத்துவ பலன்:
நூறு கிராம் அளவுள்ள சவ் சவ்வில் இருக்கும் கார்ப் அளவு மிக குறைவே(4.51 கிராம்) ஆதலால் பேலியோவுக்கு உகந்த உணவு. கூகிளிட்டு பார்த்தால், இதற்க்கு உயர் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதாக தெரிகிறது.
இதில் விட்டமின் சி மற்றும் Folate அபரிமிதமாக உள்ளது, Folate என்பது நீரில் கரையும் விட்டமின் இதய நோய் வருவதிலிருந்து காப்பாற்றும் என தெரிகிறது. விட்டமின் சி ஒரு ஆண்டி ஆக்ஸிடண்ட் என்பது நமக்கு தெரியும், அத்தோடு புற்று நோய் வராமல் பாதுகாக்குமாம். இதில் உள்ள மாங்கனிஸ் உடம்பில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பை எரிக்க உதவுமாம், அப்போ நிச்சயமாக பேலியோவுக்கு டயட்டுக்கு உகந்தது தான்.
இதில் உள்ள fiber மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு உதவும்.இது முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உகந்த உணவாம், காப்பர் உள்ளதால். இதில் உள்ள விட்டமின் பி 6, மூளையின் நினைவுத்திறனை அதிகப்படுத்துமாம்.

இந்த சுவையான, ஆரோக்கியமான பேலியோ உணவு முறையின் சமையல் குறிப்பை வழங்கிய எங்கள் தம்பி, தங்கக் கம்பி, சைனடு குப்பி "Vasan Bangalore" மற்றும் "திருமதி வாசன்" அவர்களுக்கும் நன்றி.அண்ணி உங்ககிட்ட இன்னும் நிறையா சமையல் குறிப்புகளை எதிர்பார்க்கிறோம், அனுப்பிவைங்க :)

Tuesday, January 13, 2015

காலிஃ ப்ளவேர் கஸ்ஸி / கோரி அல்லது மீன் கஸ்ஸி (gassi )



இது கர்நாடகாவில் குறிப்பாக மங்களூரில் மிக பிரபலமான உணவு ..இதை கோழி (கோரி ) அல்லது மீன் வைத்துதான் செய்வார்கள் ..நான் இங்கே காலிஃ ப்ளவேர்  உபயோகித்துள்ளேன் .

தேவை ...ஒரு பெரிய காலிஃ ப்ளவேர் , அல்லது அரைகிலோ கோழி ,// மீன்

1...அரை மூடி தேங்காய் அரைத்து எடுத்த கெட்டியான தேங்காய் பால்
-- 
2..ஒரு வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கடுகு , கறிவேப்பிலை சேர்த்து சுத்தம் செய்த காய் / கோழி , மீன் சேர்த்து நன்றாக வதக்கி பின் நீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக வேகவிடவும் ..

3..மசாலா வறுத்து அரைக்க :: ஒரு மேசை கரண்டி அளவு  சீரகம் , சோம்பு , மல்லி விதை , அரை மேசை கரண்டி கசகசா,மிளகு   தேவையான அளவு வரமிளகாய் ..இவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும் .

4..நறுக்கிய வெங்காயம் இரண்டு , தக்காளி ஒன்று  இதையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி அரைத்து கொள்ளவும்

5..தேவையான பூண்டு அரைக்கவும் ..

6..ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அரைத்த இந்த விழுதுகளை நன்றாக வதக்கி அத்துடன் மசாலா பொடியையும் சேர்த்து வேகவைத்த காய்/கோழி/மீன் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பின் அதில் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும் ..


7..இறக்கி வைத்து அதில் அரைத்து எடுத்த தேங்காய் பால்,   மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடவும் ..இதை நீர் தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள் ..நமக்கு இது மட்டுமே உணவு


இந்த சுவையான, அருமையான, வித்தியாசமான சமையலைக் கற்றுக்கொடுத்த "Dolly Bala" அம்மா அவர்களுக்கு நன்றி :)

Monday, January 12, 2015

scotch eggs for dinner



Ingredients:
Potatoes half a kilo , boiled and mashed well
Eggs. Four ...hard boiled shelled and pricked well
One egg beaten
Almond flour. Two tbsp
Mixed herbs. One tbsp
Pepper powder. Two tbsp
Salt to taste
Ghee. Four tbsp
Mix herbs, salt, pepper, almond flour with the mashed potatoes and knead well so that it turns like dough.
Make four palm size patties with the dough and place the egg in the center and cover it from all sides ..now it is like a ball..dip these balls in the beaten egg and cook them in a kadai in very low flame one by one adding one tbsp ghee to each...Turn them slowly in all sides so that they are roasted uniformly.. Since we cook in very low flame the potato balls don't turn black..Remove them allow it to cool and cut them into halves and serve with sauce if needed.. Its very filling..could eat just one egg ...but very tasty

Originally scotch eggs are made with minced pork or meat and then baked or deep fried.

Recipe from "DollyBala". Thank you amma :)

தமிழாக்கம் கூடியவிரைவில்.....

Sunday, January 11, 2015

செம்மறியாட்டுத்தோள்பட்டை சூப்




எலும்புகள், மூட்டுகளுக்கு நலமளிக்கும் செம்மறியாட்டுத்தோள்பட்டை   சூப்
செம்மறிஆட்டின் தோல்ப்பகுதி தசை மற்றும் எலும்புமஜ்ஜை ஆகியவற்றால் செய்த சூப் இது. எலும்புமஜ்ஜை உலகின் முதல் சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. அதில் சூப் செய்து அருந்தினால் எலும்புகளுக்கு நலனளிக்கும் கால்ஷியம், மக்னிசியம் முதலான மினரல்கள் அனைத்தும் கிடைக்கும்.

தேவையான பொருட்கள் :
150 கிராம் தோளெலும்பு
1- 2
சின்ன உருளைக்கிழங்கு
1
காரட்
3
செலரி துண்டுகள்
உப்பு, மசாலா தேவைக்கேற்ப. நான் பயன்படுத்தியது 2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் சாம்பார் பொடி, 1 ஸ்பூன் கரம் மசாலா, 1 ஸ்பூன் மல்லிப்பொடி

செய்முறை:
* வாணலியில் நெய்யை விட்டு தோளெலும்பு பகுதிகளை அதில் விட்டு நன்றாக பிரவுன் நிறம் வரும் வரை இருபுறமும் திருப்பிபோட்டு வணக்கவேண்டும். இப்படி வணக்குவது அதன் சுவையை அதிகரிக்கும்.
* அதன்பின் மாமிசத்தை ஸ்லோகுக்கரில் இட்டு, மேலே வெட்டிய காய்கறிகளை போட்டு மசாலாவை சேர்த்து இவை எல்லாம் மூழ்கும் அளவுக்கு சற்று மேல் நீரை ஊற்றி மூடிவிடவேண்டும். ஸ்லோகுக்கரில் 3 மணிநேரத்தில் சுவையான சூப் தயாராகிவிடும்.

குறிப்பு: ஸ்லோகுக்கர் இல்லையெனில் சாதாரண மூடி போட்ட பாத்திரத்தில் மூடி அடுப்பை மிதவெப்பத்தில் வைத்து மூன்றுமணிநேரம் சமைக்கலாம்.

தகவல்: சூப்பின் புகைப்படத்தில் எண்ணெய்படலம் போல் மிதப்பது முழுக்க உறைகொழுப்பு. இதை பகுதி உண்டுவிட்டு, ப்ரிட்ஜில் வைத்து அடுத்தநாள் எடுத்துப்பார்த்தால் கொழுப்புப்படலம் மேலே ஜெலடினாக படிவதைக்காணலாம். ஜெலடின் நம் எலும்புகளுக்கு மிக நல்லது.
அதனால் முதல்நாள் சிறிது திரவம், மற்றும் அனைத்துக்காய்கறி, மாமிசத்தையும் உண்டுவிட்டு மீதமிருந்த சூப்புத்திரவத்தை ப்ரிட்ஜில் வைத்தேன். அடுத்தநாள் கடும்குளிரில் திரவத்தை காப்பிக்கோப்பையில் ஊற்றிப்பருகுகையில் குளிருக்கு மிக இதமாக இருந்தது

தினந்தோறும் இத்தகைய்சூப்புகளைப்பருகிவருவதால் இக்குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் என எத்தொல்லையும் இல்லாமல் இருக்கிறேன்.


இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி.

திலபியா புட்டு (Tilapia puttu)



தேவையான பொருட்கள்:
திலபியா மீன் பில்லெட் (fillet) - 2
வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது  - 1
கறிவேப்பிலை  - சிறிது
மிளகாய்த்தூள்  - 1 tsp
மல்லித்தூள்  - 1 tsp
பட்டை -  1
கிராம்பு  - 2
பிரியாணி இலை - 1
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்

ஊறவைக்க:
திலபியா மீன் பில்லெட்
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
உப்பு
எழுமிச்சை சாரு

செய்முறை:
* தோசைக்கலில் சிறிது எண்ணெய் விட்டு திலபியா மீனை இருபுறமும் சுட்டு, உதிர்த்து வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து, சோம்பு,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து பொரிக்கவும் .
* இப்போது வெங்காயம்,பச்சைமிளகாய்  சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து, பச்ச வாசனை போகும்வரை வதக்கவும்.
*  இப்போது மிளகாய்த்தூள்,மல்லித்தூள்  மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பொடிகளின் பச்ச வாசனை போகும்வரை வதக்கவும்.  பின்பு நிளவாக்கில் லேசாக அறிந்த தக்காளி சேர்க்கவும். மூடிவைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
* நன்கு தக்காளி வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, சுட்டு உதிர்த்த மீனை சேர்த்து கிளறவும். மெதுவாக கிளற வேண்டும்.
* பச்ச கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு: தோசைக் கல்லில் தோலுடன் மீனைச் சுட்டால், ஒட்டிவிடும். தோலை தனியாக வதக்கி,கட் செய்து இத்துடன் சேர்க்கலாம் .

சமையல் குறிப்பு: Mythili Thiyagu


புதினா ப்ரோக்கோலி (Mint Broccoli)



தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி - 1
வெங்காயம் - 1/4
வட்டமாக நறுக்கிய காரட் - 1
புதினா - 1 சிறிய கப்
எழுமிச்சை சாறு - 1/2  tbsp
உப்பு தேவையான அளவு
மிளகுத்தூள்  - சிறிது
தேங்காய் எண்ணெய்

செய்முறை:
* வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் வத்தவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், காரட் சேர்க்கவும்.
* இரண்டும் ஓரளவும் வதங்கிய பின் ப்ரோக்கோலி சேர்த்து 8 -10 நிமிடங்கள் வத்தவும். தேவை என்றால் தண்ணீர் தெளிக்கலாம். நான் தண்ணீர் விடவில்லை. ப்ரோக்கோலி அதிகம் வேகவேண்டியதில்லை. கடிப்பதற்கு நறுக்கென்று இருக்க வேண்டும்.
* இப்போது புதினா சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
* ஹிமாலயா உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். இத்துடன் எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

குறிப்பு: இது "ரத்தினகுமார் ஸ்பெஷல் முட்டை/பன்னீர் வறுவல்" சமையல் குறிப்பில் இருந்து கண்டுபிக்கப்படது. ஆகையால் அவருக்கு மிகவும் நன்றி.

சமையல் குறிப்பு: Mythili Thiyagu



முட்டை பணியாரம்



தேவையான பொருட்கள்:
முட்டை - 4
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய முட்டை கோஸ்  - 1/3
துருவிய காரட் - 1
பொடியாக நறுக்கிய குடை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கொஞ்சம்
பொடியாக நறுக்கிய புதினா -  கொஞ்சம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு  - தேவையான அளவு
மிளகுத்தூள்  - 1 சிட்டிகை
நெய்/ எண்ணெய்


செய்முறை:
* ஒரு வாணலியில் நெய்/தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் வதக்கவும். பச்சை மிளகாய் வெள்ளை ஆனதும், வெங்காயம் வதக்கவும்.
* சிறிது வெங்காயம் வதங்கிய பின், குடை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* பின்பு முட்டை கோஸ்,காரட் சேர்த்து பிரட்டி விடவும். இந்த காய்கள் சேர்த்த பின்பு ரொம்ப வதக்கத்  தேவையில்லை.
* இப்போது அடுப்பை அனைத்து, புதினா,கொத்தமல்லி சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து நன்கு அடிக்கவும். இத்துடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.
* முட்டையுடன் வதக்கிய  காய்களை கலக்கவும்.
* பனியாரக்கல் சூடேறியதும் முட்டைக் கலவையை பணியாரம் போல் நெய்யில் வார்த்து/சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: பேலியோ தக்காளி சட்னியுடன் 2 பணியாரம் அதிகமாக உள்ளே போகும். பேலியோ தக்காளி சட்னியை  கூடிய விரைவில் சமையல் குறிப்பில் சேர்த்துவிடுகிறேன் :)

சமையல் குறிப்பு: Mythili Thiyagu

பன்னீர்




தேவையான பொருட்கள்:
முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர் 
எழுமிச்சை சாறு அல்லது வினிகர்  - 2 டு 3 பழம் / 3 டு 5 tbsp வினிகர் 
சீஸ் க்ளோத் (cheese cloth) அல்லது புதிய வெள்ளை துணி/துண்டு  - 1 

செய்முறை: 
* கெட்டியான பாத்திரத்தில் பாலை காயவைக்கவும். 
* பால் கொதிக்க ஆரம்பித்தவுடனே, எழுமிச்சை சாறு அல்லது வினிகர் ஊற்றவும்.
* சிறுதீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். 
* இந்த திரிந்த பாலை சீஸ் க்ளோத் (cheese cloth) அல்லது புதிய வெள்ளை துணி/துண்டு ஊற்றி தண்ணீரை வடிக்கவும்.
* ஒரு காய் கழுவும் சல்லடையை மேல் பகுதி கீழ் இருக்குமாறு கமுத்தி வைக்கவும்.
* இந்த பன்னீர் மூட்டையை சிறிது தளர்த்தி, சல்லடையின் அடிப்பகுதியின் மீது பரப்பிய  நிலையில் வைக்கவும்.
* சலடையின் அடிப்பகுதிக்கு தகுந்தவாறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பன்னீர் துணியின் மேல் வைக்கவும். 
* குறைந்தது ஒரு மணிநேரம் கழித்து எடுக்கவும். பன்னீரில் உள்ள தண்ணீர் நீங்கி கெட்டி பன்னீர் கிடைக்கும்.
* இதனை சிறு சிறு துண்டங்களாக வெட்டி,ஒரு கண்ணாடி குவளையில் போட்டு மூடி, குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு

குறிப்பு:  1 லிட்டர் பாலுக்கு 1/2 எழுமிச்சை சாறு விடலாம் (சாறு நிறையா இருக்கும் பழமாக இருந்தால், இல்லையென்றால் 1 முழு பழம்). பால் அடுப்பில் வைத்து காயவைக்கும் போது கிளறி விடவும், அப்போ தான் பொங்கி வராமல் கொதிக்கும். ஒரு கொதி வந்ததும் எழுமிச்சை சாறு ஊற்றி, அடுப்பை வேகமான தீயில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் திரிந்து வரும். அப்படி வரவில்லை என்றால் கொஞ்சம் எழுமிச்சை சாறு சேர்க்கவும் (பன்னீர் ரொம்ப புளிக்காது. வினிகர் சேர்த்தால் தான் கொஞ்சம் அதிகமாலும், புளிப்பு & வினிகர் வாடை வரும்). நன்கு பால் திரிந்ததும் அப்படியே சிறிது நேரம் அணைத்த அடுப்பில் வைக்கவும். பின்பு சமையல் குறிப்பில் குறிபிட்டது போல துணியில் வடிகட்டவும், அதிக நேரம் வடிந்தால், நல்ல பன்னீர் கிடைக்கும்.