தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2 nos
இறால் - 10 -15 nos
வெங்காயம் - 1 no
தக்காளி - 3
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - 1
மிளகாய் பொடி - காரத்திற்க்குத் தேவையான அளவு
கரம்மசால போடி - 1 stp
மஞ்சள் தூள் - சிறிதளவு
குறுமிளகு - 5 nos
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 tbsp
செய்முறை:
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணையை காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், சீரகம் தூவி,
கறிவேப்பிலை மற்றும் குறுமிளகு சேர்க்கவும்.
* இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
* இப்போது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் பதத்தில் இறால் சேர்த்து கிளறி விடவும்.
* சிறிதுநேரம் கழித்து முருங்கைக்காய் சேர்த்து கிளறி,கரம்மசாலா சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைத்து மீடியம் தீயில் வேக விடவும்.
* உங்களுக்கு குழம்பு போல் வேண்டும் என்றால், இறாலும், காயும் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி காலிபிளவர் சாதத்துடன் பரிமாறவும்.
* கெட்டியாக வேண்டுமென்றால், மூடிபோடாமல் பெரும் தீயில் 5 நிமிடம் வேகவிடவும். அடிப்புடிக்காமல் கிளறி விடவும்.
* தேவையென்றால் இத்துடன் மை போல் அரைத்த தேங்காய் சேர்த்து ருசியை அதிகப்படுத்தலாம்.
நமக்காக இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "சிவபாரதி தமிழழகர்" அவர்களுக்கு நன்றி :)
நம்ம ஊருக்கு போனதும் இத செஞ்சு சாப்டனும்...இங்கே முருங்கை கிடைப்பதில்லை
ReplyDelete