Thursday, January 8, 2015

மஸ்ரும் கிரேவி



தேவையான பொருட்கள்:
மஸ்ரும்
பாதாம் பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் -1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி
பூண்டு
விதைமல்லி
சீரகம்
வெந்தயம்
பச்சை மிளகாய்
பொடியாக நறுக்கிய வெங்காயம்
தக்காளி
தயிர் 1கப்

அரைக்கத் தேவையானவை:
வாணலியில் பாதாம் பருப்பை நெய் விட்டு வறுக்கவும்
வெங்காயம்நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெந்தயம்,விதை மல்லி, தக்காளி, மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து நன்றாக அரைக்கவும்

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை போடவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
பின் மஸ்ரும் சேர்த்து கிளறவும்
இத்துடன் 1கப் தயிர் மற்றும் உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்

எண்ணெய் பிரிந்து வரும் போது  இறக்கி சூடாக பரிமாறவும்.


நமக்காக இந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Rishi Raveendran" அவர்களுக்கு நன்றி :)

குறிப்பு: இந்த சமையல் குறிப்பினை தமிழாக்கம் செய்து கொடுத்த "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)


No comments:

Post a Comment