Sunday, January 11, 2015

பன்னீர்




தேவையான பொருட்கள்:
முழு கொழுப்புள்ள பால் - 1 லிட்டர் 
எழுமிச்சை சாறு அல்லது வினிகர்  - 2 டு 3 பழம் / 3 டு 5 tbsp வினிகர் 
சீஸ் க்ளோத் (cheese cloth) அல்லது புதிய வெள்ளை துணி/துண்டு  - 1 

செய்முறை: 
* கெட்டியான பாத்திரத்தில் பாலை காயவைக்கவும். 
* பால் கொதிக்க ஆரம்பித்தவுடனே, எழுமிச்சை சாறு அல்லது வினிகர் ஊற்றவும்.
* சிறுதீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும். 
* இந்த திரிந்த பாலை சீஸ் க்ளோத் (cheese cloth) அல்லது புதிய வெள்ளை துணி/துண்டு ஊற்றி தண்ணீரை வடிக்கவும்.
* ஒரு காய் கழுவும் சல்லடையை மேல் பகுதி கீழ் இருக்குமாறு கமுத்தி வைக்கவும்.
* இந்த பன்னீர் மூட்டையை சிறிது தளர்த்தி, சல்லடையின் அடிப்பகுதியின் மீது பரப்பிய  நிலையில் வைக்கவும்.
* சலடையின் அடிப்பகுதிக்கு தகுந்தவாறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பன்னீர் துணியின் மேல் வைக்கவும். 
* குறைந்தது ஒரு மணிநேரம் கழித்து எடுக்கவும். பன்னீரில் உள்ள தண்ணீர் நீங்கி கெட்டி பன்னீர் கிடைக்கும்.
* இதனை சிறு சிறு துண்டங்களாக வெட்டி,ஒரு கண்ணாடி குவளையில் போட்டு மூடி, குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும்.

சமையல் குறிப்பு: மைதிலி தியாகு

குறிப்பு:  1 லிட்டர் பாலுக்கு 1/2 எழுமிச்சை சாறு விடலாம் (சாறு நிறையா இருக்கும் பழமாக இருந்தால், இல்லையென்றால் 1 முழு பழம்). பால் அடுப்பில் வைத்து காயவைக்கும் போது கிளறி விடவும், அப்போ தான் பொங்கி வராமல் கொதிக்கும். ஒரு கொதி வந்ததும் எழுமிச்சை சாறு ஊற்றி, அடுப்பை வேகமான தீயில் வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் திரிந்து வரும். அப்படி வரவில்லை என்றால் கொஞ்சம் எழுமிச்சை சாறு சேர்க்கவும் (பன்னீர் ரொம்ப புளிக்காது. வினிகர் சேர்த்தால் தான் கொஞ்சம் அதிகமாலும், புளிப்பு & வினிகர் வாடை வரும்). நன்கு பால் திரிந்ததும் அப்படியே சிறிது நேரம் அணைத்த அடுப்பில் வைக்கவும். பின்பு சமையல் குறிப்பில் குறிபிட்டது போல துணியில் வடிகட்டவும், அதிக நேரம் வடிந்தால், நல்ல பன்னீர் கிடைக்கும்.

No comments:

Post a Comment